Category: உலக செய்திகள்
-
ஈரான் உடனான போர் குறித்து ட்ரம்ப் விடுத்த அறிவிப்பு
ஈரான் உடனான போர் முடிவுக்கு வந்து அவர்கள் சரணடைந்தால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதளபாதாளத்திற்கு சரியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலக அளவில் மசகு எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட்டு, அதன் விலையில் தொடர் ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜோ பைடனின் நிர்வாக காலத்தை விட எனது நிர்வாகத்தின் கீழ் எல்லா பொருட்களின் விலைகளும் குறைந்து…
-
மீண்டும் போர்? “நானும், எங்கள் அதிபரும் நியூயார்க் வந்த காரணமே.!” – ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்
கடந்த வாரம் ஈரானும், அமெரிக்காவும் ‘ஈரான் போர் நிறுத்தம்’ குறித்து பாசிட்டிவாகப் பேசியது. ஈரானோ, ‘முற்றிலும் போர் நிறுத்தம், முடக்கப்பட்ட ஈரான் சொத்துகளை விடுவித்தல், ஹார்முஸில் நிற்கும் அமெரிக்கப் படையை வாபஸ் பெறுதல் போன்ற 7 நிபந்தனைகளை அமெரிக்கா செய்தால், அடுத்த 7 நாள்களில் உடனடியாக ஹார்முஸ் திறக்கப்படும்’ என்று போர் நிறுத்தத்தை நோக்கிப் பேசுவது போலப் பேசியிருந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்போ, வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க உள்ள மிட் டேர்ம் தேர்தலுக்குப் பிறகு,…
-
கூகுளின் இணையத்தை அலங்கரித்த சிறப்பு டூடுல்!
உலகின் முன்னணி இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் தனது 28-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இதையொட்டி, கூகுள் முகப்புப் பக்கத்தில் சிறப்பு டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் தகவல்களை தேடுவதற்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தளமாக கூகுள் விளங்கி வருகிறது. தேடுபொறி சேவையுடன், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் கூகுள் வழங்கி வருகிறது. கூகுளின் பிறந்தநாளை முன்னிட்டு, அதன் முகப்புப் பக்கத்தில் வழக்கமான கூகுள் லோகோவுக்கு பதிலாக சிறப்பு வடிவமைப்புடன் கூடிய…
-
அவுஸ்திரேலிய அரசின் இணையதளத்தை முடக்கிய ஏ.ஐ.
அவுஸ்திரேலிய அரசு இணையதளம் மற்றும் அமைப்பில் உள்ள குறைபாடுகளை கண்டறிவதற்கு செயற்கை தொழில்நுட்ப (ஏ.ஐ.) மென்பொருளை சில மாதங்களுக்கு முன்பு அரசு நிறுவியது. ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் இந்த ஏஜென்ட் தனது பணியை செய்த அதேவேளையில், அந்த இணையதளத்தையே முடக்கியதுடன், அரசின் தரவுத்தளங்களில் உள்ள தவறான சான்றுகளை தேடியது. மேலும் தனிப்பட்ட என்கிரிப்டட் திறவு கோல்களையும் அணுக முயன்றது. இந்த சம்பவம் ஏ.ஐ. துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஏ.ஐ. ஏஜென்ட்களின் பாதுகாப்ப குறித்தும்…
-
பேச்சுவார்த்தைக்கு No சொன்ன ட்ரம்ப்.. ஹார்முஸை கண்ணிவெடிகளால் நிரப்பிய ஈரான்?
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. அமெரிக்கா–ஈரான் மோதலை முடிக்க, ஈரான் 7 நிபந்தனைகளை ட்ரம்ப் நிர்வாகத்திடம் கத்தார் மூலம் அறிவித்தது. அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துதல், முடக்கப்பட்ட ஈரானிய நிதியை விடுவித்தல், ஹார்முஸ் நீரிணையை 7 நாட்களில் திறப்பது மற்றும் துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. ஆனால் ட்ரம்ப் இந்த…
-
அரபு கட்சிகளுக்கு NO.. நெதன்யாகு மட்டும் போட்டியில்? இஸ்ரேலில் கொந்தளிப்பு!
2026 அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இஸ்ரேல் நாடாளுமன்ற (Knesset) தேர்தலை முன்னிட்டு, அந்நாட்டின் இரண்டு முக்கிய அரபு பெரும்பான்மை அரசியல் கூட்டணிகளை போட்டியிடத் தகுதியற்றதாக இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு அறிவித்துள்ளது. இந்த முடிவு அமலுக்கு வந்தால், இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனிய குடிமக்களின் முக்கிய அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது. இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு இரண்டு முக்கிய அரபு அரசியல் பட்டியல்களை தகுதி நீக்கம் செய்துள்ளது. ஜாயிண்ட் லிஸ்ட் (Joint List) –…
-
கிவு ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து! 12 பேர் உயிரிழப்பு
கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் (DR Congo) கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிவு ஏரியில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள இட்ஜ்வி (Idjwi) தீவுப் பகுதியில் நேற்று இரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பலர் ஏரி நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த உள்ளூர் மீட்புக் குழுவினரும் மீனவர்களும் உடனடியாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதுவரை…
-
அமெரிக்க தாக்குதல் – ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கு ஏற்பட்ட ஆபத்து
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், டெஹ்ரானில் உள்ள வைத்தியசாலை இடிபாடுகளுக்குள் இருந்து ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் நிபுணர்கள் குழுவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான மொஹ்சென் ஹைதாரி (Mohsen Heydari), தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக நடைபெற்ற கூட்டுத் தாக்குதலில் காயமடைந்த மொஜ்தபா கமேனி, சிகிச்சைக்காக டெஹ்ரானில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அந்த வைத்தியசாலை வளாகத்தையும் இலக்கு…
-
‘இறுதி மூச்சு வரை உறுதியாக நிற்போம்’ – ஈரான் ஜனாதிபதி
தனது அரசாங்கம் இறுதி மூச்சு வரை உறுதியாக நிற்கும் என்றும் ஈரான் மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றும் என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் சூளுரைத்தார். சண்டையை முடிவுக்குக் கொண்டுவருதல், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் மற்றும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்தல் ஆகியவற்றுக்காக ஈரான் முன்வைத்த ஏழு நாள் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய…
-
ஐ.நா பொதுச்சபையில் இந்தியாவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கிய ரஷ்யா
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில்(UNSC) பிரேசில் மற்றும் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் கோரிக்கையை ரஷ்யா முழுமையாக ஆதரிக்கிறது என நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். இதனூடாக இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்குவதற்கு ரஷ்யா தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளையில், மேற்கத்திய நாடுகளுக்குக் கூடுதல் நிரந்தர இடங்கள் ஒதுக்குவதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது. அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,…