Category: உலக செய்திகள்
-
இமயமலை பனிச்சரிவில் சிக்கி 10 பேர் மாயம்
நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் உள்ள ஹிம்லுங் ஹிமல் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 மலையேற்ற வீரர்கள் மாயமாகியுள்ளனர். நேபாளத்தில் இருந்து இமயமலை ஏறச் சென்ற குறித்த 10 மலையேற்ற வீரர்களும் ஹிம்லுங் ஹிமல் சிகரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்துள்ளனர். இதன்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் அவர்கள் தங்கியிருந்த கூடாரம் பனியில் புதைந்துள்ளது. இதனால் அதில் தங்கியிருந்த 10 மலையேற்ற வீரர்களும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று மாயமான…
-
மீண்டும் பேரழிவில் நேபாளம்|கொட்டும் மழை; கரைபுரண்ட ஆறுகள்; அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்!!
நேபாளில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் புதிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் தாக்கம் இன்னும் நீங்காத நிலையில், அந்த பேரிடரில் இதுவரை 1,453 பேர் உயிரிழந்ததாகவும், 5,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் பொயுள்ளனர் என்றும் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை…
-
டிக்டொக் நிறுவனத்துக்கு 100 மில்லியன் டொலர் அபராதம்
டிக்டொக் செயலியும் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸும் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்துக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும், சிறார்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தொடர் மாற்றங்களை மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டு வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன. ஏதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவிருந்த நடுவர் விசாரணைக்கு சற்று முன்பு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. சிறார்களைச் செயலியில் அடிமையாக்கும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க மாநில ஒன்றுடன் டிக்டொக் மேற்கொண்ட முதல் உடன்பாடு இணக்கப்பாடு இதுவாகும்.…
-
அமெரிக்காவின் ‘விமான’ தடைகளிலிருந்து விலக்கு கோருகிறது ஈராக்!
ஈரானிய விமானங்களுக்குச் சேவை வழங்கும் அல்லது உதவிகளைச் செய்யும் விமான நிலையங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க திறைசேரி திணைக்களம் அண்மையில் எச்சரித்திருந்தது. இந்நிலையில், இதிலிருந்து சில ஈராக் விமான நிலையங்களுக்கு விலக்கு அளிக்குமாறு அமெரிக்காவிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈராக் பிரதமர் அலி அல்-ஸைதியின் (Ali al-Zaidi) அலுவலகம் தெரிவித்துள்ளது. மருத்துவச் சிகிச்சை, கல்வி, ஆன்மீகச் சுற்றுலாக்கள் மற்றும் சிவிலியன்களின் நலன் சார்ந்த மனிதநேயக் காரணங்களுக்காக விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதை…
-
“ஏமனில் நடப்பவற்றுக்கும் ஈரானுக்கும் தொடர்பில்லை” – ஜனாதிபதி பெசெஷ்கியன் கருத்து
ஏமனில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்களுக்கும் ஈரானுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். அல் ஜசீரா செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏமனின் ஹூதி போராளிகளும் சவூதி அரேபியாவும் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஈரான் உதவ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அநீதிக்கு உள்ளாக்கப்படும் அனைவருடனும் ஈரான் உறுதியாகத் துணைநிற்கும்…
-
தென் ஆபிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி
தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள வெடேலா நகர்ப்பகுதியில் உள்ள மதுபான விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை தேடும் தீவிர விசாரணையில் தென் ஆபிரிக்க பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு சுமார் 9:30 அளவில் கௌடெங் மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலேயே 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள்…
-
நோ’ஈஸ்டர் புயலால் நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசரநிலை பிரகடனம்
நோ’ஈஸ்டர் (Nor’easter) புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குதல், மின் தடை, போக்குவரத்து ஸ்தம்பிப்பு, திறந்தவெளி மைதானங்களில் நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்வுகள் இரத்து செய்யப்படுதல் போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்தியவாறு, சக்திவாய்ந்த ‘நோ’ஈஸ்டர்’ புயல் தற்போது அமெரிக்காவின் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் கடும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளனர். அமெரிக்க தேசிய வானிலை சேவையின் அண்மைக்கால அறிக்கையின்படி,…
-
ஹோர்முஸ் நீரிணை முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது – ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான்–அமெரிக்கா இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பில் ஈரான் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க முடியும் என்றும், அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் ஈரான் தரப்பு தெரிவித்திருந்தது. எனினும், அந்த நிபந்தனைகளை…
-
பேங்கொக்கில் கடும் வெள்ளம்
கனமழையால் பேங்கொக்கில் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தாய்லாந்து தலைநகர் ‘பேரிடர் பாதிப்புக்குள்ளான மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் சுமார் 300 மில்லிமீற்றர் மழை பெய்ததால், முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல பகுதிகளில் மக்கள் இடுப்பளவு நீரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடரக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில், கால்வாய்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு மாற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பேரிடர் நிவாரண…
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் புதிய திட்டம்
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஈரானின் முன்மொழிவை ஏற்று, அதற்கான தனது கடமைகளை நிறைவேற்றினால், ஈரானும் தனது கடமைகளை நிறைவேற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான புதிய திட்டம் தொடர்பில் இராணுவம், பாராளுமன்றம் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆறு பேர் கொண்ட குழு கலந்துரையாடி வருவதாகவும் ஈரான்…