Category: உலக செய்திகள்
-
ஐ.நா மேடையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிகையாளரை நோக்கி பாகிஸ்தான் அமைச்சர் செய்த செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் 81-வது பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளனர். அந்த வகையில் இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்பும் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் அவரிடம், “ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான தலிபான்களின் கடுமையான கொள்கைகள் குறித்து பாகிஸ்தானின் தற்போதைய…
-
பசிபிக் கடலில் மட்டும் ஒரே நேரத்தில் 5 புயல்கள் உருவாகியுள்ளது ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கையின் மிகப்பெரும் அழிவு சக்திகளில் ஒன்றாக புயல்கள் இருந்து வருகின்றன. ராட்சச அலைகளை உருவாக்கி, மழை, பெருவெள்ளம், அதி தீவிர காற்று என இந்த புயல்கள் ஆயிரக்கணக்கான உயிர்களை பழிவாங்கி வருகிறது. அதிலும் கடற்கரையோர பகுதிகள் புயல்களால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இப்படி கடலில் உருவாகும் ஒரு புயலே பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது உலகில் 5 புயல்கள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது அரிதான மற்றும் ஆபத்தான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது பசிபிக்…
-
பாலஸ்தீனக் கைதியைக் கொல்லுமாறு மிரட்டல் – ஹமாஸ் கடும் கண்டனம்
பாலஸ்தீனக் கைதியான ஹசன் சலாமேவைக் (Hassan Salameh) கொன்றுவிடுவதாக மிரட்டும் காணொளியை வெளியிட்ட இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விரை ஹமாஸ் அமைப்பு கண்டித்துள்ளது. இச்செயல் அனைத்துலகச் சட்டங்களின் அப்பட்டமான மீறல் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்தக் காணொளி அவரது உறுதியையோ அல்லது எங்கள் மற்ற கைதிகளின் உறுதியையோ பலவீனப்படுத்தாது என்றும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்தது. இதேவேளை, ஆக்கிரமிப்பாளர்களின் சிறைகளிலிருந்து எங்கள் கைதிகளை விடுவிக்க, அனைத்து நிலைகளிலும் மற்றும் அனைத்து…
-
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்வு
போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஈரான் முன்வைத்த ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்தமையினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஈரான் ஒப்பந்தத்தை முன்வைத்திருந்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான அதன் மோதலை இராஜதந்திரம் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ஈரான் வலியுறுத்தியது. லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் 7 நாட்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்ட சில…
-
‘7 நாட்களில் பிராந்தியப் போரை நிறுத்தத் தயார்’ அப்பாஸ் அராக்சி அறிவிப்பு
அமெரிக்காவுடனான போர் மீண்டும் தீவிரமடைந்தால் அதை எதிர்கொள்ள ஈரான் முழுமையாகத் தயாராக உள்ளது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அதேவேளையில் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளையும் அடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் வழங்கிய அமைதி முன்மொழிவை ட்ரம்ப் நிராகரித்ததாகக் கூறியபோதிலும், மத்தியஸ்தர்கள் மூலம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தங்களுக்கு வரவில்லை என்று அராக்சி கூறியுள்ளார். முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்கவும், மசகு எண்ணெய் விற்பனைக்கு விதிக்கப்பட்ட…
-
பிரித்தானியாவின் முக்கிய வான்படைத் தளத்துக்கு அருகில் பெரும் பரபரப்பு! – பலர் கைது
பிரித்தானியாவின் வெல்ஃபோர்ட் (Whelford) கிராமத்துக்கு அருகில் உள்ள முக்கிய வான்படைத் தளப்பகுதியில் வெடிபொருள் சட்டத்தின் கீழ் குற்றங்களை புரிந்த சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளுசெஸ்டர்ஷையர் (Gloucestershire) பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தின் வெடிபொருள் அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதோடு, அங்குள்ள பல வாகனங்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வான்படைத் தளத்திற்கு அருகில் உள்ள வெல்ஃபோர்ட் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்படுவதற்கு காரணமாக…
-
போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு கண்டுபிடிப்பு
போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சில பி737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் பிரச்சினை காரணமாக, விமானம் தரையிறங்க முடியாத சூழ்நிலையில் தானாக விமானத்தை வழிநடத்தும் அமைப்பு செயலிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2,400-க்கும் மேற்பட்ட பி737 விமானங்கள் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா எயார் நிறுவனங்களிடம் சுமார் 96 பி737 மேக்ஸ் விமானங்கள் உள்ளன. குறித்த மென்பொருள் கோளாறு தொடர்பில்…
-
‘இந்தியா வல்லரசு நாடாக உருவாவதற்கு அமெரிக்கா அனுமதிக்காது’ – ரஷ்யா குற்றச்சாட்டு
இந்தியாவை வல்லரசு நாடாக உருவாவதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்றும் இந்தியாவை கட்டுப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் அமெரிக்கா செய்யும் என்றும் இந்தியாவுக்கான ரஷ்ய தூதுவர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற என்.டி.டி.வி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த மாநாட்டில் பேசிய அவர், சீனா போன்ற மற்றொரு வல்லரசு நாடாக இந்தியா உருவாவதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற ரைசினா மாநாட்டில், அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவர், இந்தியாவை…
-
ஈரான் உடனான போர் குறித்து ட்ரம்ப் விடுத்த அறிவிப்பு
ஈரான் உடனான போர் முடிவுக்கு வந்து அவர்கள் சரணடைந்தால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதளபாதாளத்திற்கு சரியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலக அளவில் மசகு எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட்டு, அதன் விலையில் தொடர் ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜோ பைடனின் நிர்வாக காலத்தை விட எனது நிர்வாகத்தின் கீழ் எல்லா பொருட்களின் விலைகளும் குறைந்து…
-
மீண்டும் போர்? “நானும், எங்கள் அதிபரும் நியூயார்க் வந்த காரணமே.!” – ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்
கடந்த வாரம் ஈரானும், அமெரிக்காவும் ‘ஈரான் போர் நிறுத்தம்’ குறித்து பாசிட்டிவாகப் பேசியது. ஈரானோ, ‘முற்றிலும் போர் நிறுத்தம், முடக்கப்பட்ட ஈரான் சொத்துகளை விடுவித்தல், ஹார்முஸில் நிற்கும் அமெரிக்கப் படையை வாபஸ் பெறுதல் போன்ற 7 நிபந்தனைகளை அமெரிக்கா செய்தால், அடுத்த 7 நாள்களில் உடனடியாக ஹார்முஸ் திறக்கப்படும்’ என்று போர் நிறுத்தத்தை நோக்கிப் பேசுவது போலப் பேசியிருந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்போ, வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க உள்ள மிட் டேர்ம் தேர்தலுக்குப் பிறகு,…