Category: உலக செய்திகள்
-
போர்க்களத்தில் குதித்த பிரிட்டன்.. உக்ரைன் போரில் திருப்பம்!
பிரிட்டனின் இரண்டு நிறுவனங்கள் தயாரித்த ட்ரோன்கள், ரஷ்யாவின் ராணுவ மற்றும் தொழில்துறை இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. பிரிட்டன், உக்ரைன் நெருக்கடியை திட்டமிட்டு மேலும் தீவிரப்படுத்துவதாகவும், ரத்தம் சிந்தும் தாக்குதல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரிட்டிஷ் உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்திய ட்ரோன்கள் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் கிடங்கு உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியுள்ளார்.…
-
Trump பெயரை சொல்லி ஏமாற்றுவேலை.. பிரிட்டன் பிரதமருக்கு கொடுக்கப்பட்ட அல்வா
பிரிட்டன் பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஆண்டி பர்ன்ஹாம் கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். முந்தைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சி பொறுப்புக்கு வந்த இரண்டே ஆண்டுகளில், பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை, கொள்கை முடிவுகளில் ஏற்பட்ட சறுக்கல்கள் மற்றும் சில சர்ச்சைக்குரிய நியமனங்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான உறவில் ஏற்பட்ட விரிசல் உள்ளிட்ட காரணங்களால் பின்னுக்கு தள்ளப்பட்டது. கெய்ர் ஸ்டார்மரின் செல்வாக்கு மக்களிடமும், அவரது சொந்தக் கட்சியினரிடமும் சரிந்த நிலையில் ராஜினாமா செய்தார். இந்தசூழலில் தான்…
-
பிலிப்பைன்ஸ் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு – இரு மாணவர்கள் பலி!
பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சாம்போங்கா நகரின் உயர்நிலைப் பாடசாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கியுடன் பாடசாலைக்குள் புகுந்த மாணவர் ஒருவர், மாணவர்கள் சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், பின்னர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் அந்த நகர முதலவர் தெரிவித்துள்ளார். இந்தத் துப்பாக்கி பிரயோகத்தில் மற்றுமொரு மாணவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை அடுத்து பாடசாலை…
-
சீனாவுக்கு பயணமாகும் ஜோர்தான் மன்னர்
ஜோர்தான் மன்னர் அப்துல்லா II பின் அல் ஹுசைன் அரசு முறை பயணமாக நாளை சீனா செல்கிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று சீனா செல்லும் அப்துல்லா II பின் அல் ஹுசைன் அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன் அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கையும் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது சர்வதேச அரசியல், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழ்நிலை, வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை…
-
காசா அமைதித் திட்ட பேச்சுவார்த்தையில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் பங்கேற்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடங்கியுள்ள காசா அமைதித் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில், முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் ஜெருசலேமில் பங்கேற்றார். போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்பைக் கண்காணிப்பதற்காக அமெரிக்காவின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட ‘அமைதி வாரியத்தின்’ (Board of Peace) நிர்வாகக் குழு உறுப்பினராக பிளேயர் செயல்படுகிறார். ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை முழுமையாகத் துறக்கும் வரை காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது என்றும், மறுசீரமைப்புப் பணிகள் தொடங்காது என்றும்…
-
கசிந்தது ரஷ்யாவின் ரகசிய Plan
பெலாரஸ் மற்றும் உக்ரைன் எல்லைகளை ஒட்டி ரஷ்யா 10 ரகசிய ட்ரோன் தளங்களை அமைத்துள்ளது, அவற்றில் 59 ஏவுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தளங்கள் மூலம் போலந்து, லிதுவேனியா, லாட்வியா உள்ளிட்ட பல NATO நாடுகள் ரஷ்ய ட்ரோன்களின் தாக்குதல் வரம்புக்குள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கசிந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்தத் பகுதிகளில் குறைந்தது 59 புதிய ஏவுதளங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. ஓடுபாதைக்கு பதிலாக நிலையான…
-
அமெரிக்காவுக்கு எதிராக சுத்துப்போட்ட ஈரான்!
அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர். எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான், அமெரிக்க ராணுவத் தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதலை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹார்முஸ் நீரிணையையும்…
-
அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தக் கெடு முடிந்தது: ஓமானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்தை எட்டவும், ஹோர்முஸ் ஜலசந்தியைப் (Strait of Hormuz) மீண்டும் திறக்கவும் வழங்கப்பட்ட 60 நாட்கள் கெடு முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஓமான் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி வழியே கப்பல் போக்குவரத்தை சீரமைக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு ஓமான் குறுக்கே நின்றால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வதற்கான பாதைகளை நிர்வகிக்க…
-
நெதன்யாகுவை சந்தித்தார் அமெரிக்கத் தூதர் ஜாரெட் குஷ்னர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அமைதித் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, அவரது மருமகனும் அமெரிக்கத் தூதருமான ஜாரெட் குஷ்னர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசினார். இதற்கு ஒரு நாள் முன்னதாக, எகிப்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் கலீல் அல்-ஹய்யா உடன் குஷ்னர் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார். ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்ததால், ஒப்பந்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் காசா மீதான தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே ஆயுதங்களை துறக்கும்…
-
தென்சீனக் கடலில் அமெரிக்கப் போர்க்கப்பல் 4 நாட்கள் மின்தடையால் பாதிப்பு
அமெரிக்க கடற்படையின் ‘யு.எஸ்.எஸ் பென்ஃபோல்ட்’ (USS Benfold) ஏவுகணை அழிப்புக் கப்பல், கடந்த ஜூலை 24 அன்று மின் உற்பத்திப் பொறிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தென்சீனக் கடலில் 4 நாட்கள் இயங்காமல் நின்றது. சுமார் 10,000 டன் எடையுள்ள இந்தக் கப்பலில் மின்தடை ஏற்பட்டதால், 32°C முதல் 37°C வரையிலான கடும் வெப்பத்தில் காற்றுச்சீரமைப்பி (AC), கழிப்பறைகள், சமையலறை மற்றும் குடிநீர் வசதிகள் இன்றி ஊழியர்கள் தவித்தனர். ‘யு.எஸ்.எஸ் ராபர்ட் ஸ்மால்ஸ்’ என்ற மற்றொரு அமெரிக்க…