Category: உலக செய்திகள்

  • தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் முடிவு

    அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெறும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் தென் கொரியா அமெரிக்காவுக்கு போதிய ஆதரவு வழங்கத் தவறியதை இதற்கான காரணமாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். தனது சமூக ஊடகப் பதிவில், இந்த நடவடிக்கை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடனான தனது நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகள் ஆண்டுதோறும்…

  • சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த ஈரானின் அதிரடி அறிவிப்பு

    அமெரிக்க வீரர்களைக் கொல்பவர்கள் அல்லது உயிருடன் பிடிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி அமீர் ஹதாமி அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அமெரிக்க வீரர் ஒருவரைக் கொல்லும் அல்லது பிடிக்கும் ஈரானிய ஆணுக்கு 30,000 டொலரும், பெண்ணுக்கு 60,000 டொலரும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க வீரர் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அதன் மதிப்பை விட இருமடங்கு விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்து, அதற்குப் பதிலாக புதிய…

  • சர்வதேசத்தை அதிரவைத்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் பேச்சு!

    காசாவில் தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் என்றும், அங்கு மீண்டும் யூதக் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்றும் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்வீர் கூறியுள்ள கருத்து சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இணையவழி உரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இடாமர் பென்-க்வீர், “குஷ் கட்டிஃப் (Gush Katif) பகுதி மட்டுமல்லாது காசா முழுவதிலும் மீண்டும் குடியிருப்புகளை அமைக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் அதிக அளவில்…

  • பனிக் கரடியின் தூக்கத்தை கலைத்துவிட்டாராம்.. படகு ஓட்டுநருக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

    அசந்து தூங்கி கொண்டிருந்த பனிக்கரடியின் தூக்கத்துக்கு இடையூறு செய்து எழுப்பிய புகாரில் படகு ஓட்டுநருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பனிக்கரடியை தூக்கத்தை கலைத்ததற்கும் அபராதம் விதிப்பார்களா? என்று நீங்கள் கேட்டால் அந்த நாட்டின் சட்டம் அப்படியாக உள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். நார்வே நாட்டுக்கு சொந்தமாக ஸ்வால்பார்டின் என்ற தீவுக்கூட்டம் உள்ளது. இது நார்வே நாட்டின் வடதுருவத்தில் இருந்து சுமார் 620 மைல்…

  • சுற்றி வளைத்த டிரோன்கள்.. அடுத்த நொடி வான் உயரத்திற்கு தீப்பிழம்பு

    ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தொடங்கி பலரும் தீவிர முயற்சியை எடுத்துவிட்டனர். இருப்பினும், போர் முடிவது போல தெரியவில்லை. அவ்வப்போது இரு நாடுகளுமே மிக பெரிய தாக்குதல்களை நடத்தியும் வருகிறது இந்த சூழலில் தான் ரஷ்யாவின் மாஸ்கோ பிராந்தியத்தில் உக்ரைன் ஒரு பிரம்மாண்ட டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் அந்நாட்டின் மிக பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான வைல்ட்பெர்ரிஸ் நிறுவனத்தின் கிடங்கு தீப்பற்றி…

  • மனிதரை வேலையை விட்டு தூக்கிய AI.. ஒரு நொடி தலைசுற்றி போன நெட்டிசன்கள்.. அடுத்து நடந்தது தான் ஹைலைட்!

    அமெரிக்காவில் ஏஐ நடத்தி வரும் கடையில் இருந்து ஊழியர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ச்சியாக தாமதமாக வேலைக்கு வந்ததால் அவரை பணிநீக்கம் செய்யும் முடிவை ஏஐ மேனேஜர் எடுத்துள்ளது. இந்த கடையில் என்ன நடந்தது.. ஏஐ எப்படி மனிதர் ஒருவரை பணிநீக்கம் செய்தது என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்! இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ வந்துவிட்டது. ஏஐ ஆதிக்கத்தால் நன்மைகள் இருந்தாலும் கூட இதனால் வேலையிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க…

  • ரொனால்டோவின் ஓய்வு குறித்து எடுத்துள்ள தீர்மானம்

    கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போதைய பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலான தனது கால்பந்து பயணத்தை நிறைவு செய்யவுள்ள 41 வயதான ரொனால்டோ, “இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கலாம், ஒரு வரலாற்றுப் பெருமையுடன் விடைபெற விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதுவரை கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளில் 976 கோல்களை அடித்துள்ள அவர், 1,000 கோல்கள் என்ற வரலாற்றுச் சாதனையை எட்ட இன்னும் 24 கோல்களே…

  • ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கும் வரை பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா செல்லமாட்டார்: பங்களாதேஷ் அரசு அறிவிப்பு!

    பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா நாட்டுக்குத் திருப்பி ஒப்படைக்கும் வரை, பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ள மாட்டார் என பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்ததிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றுள்ள ஹசீனாவுக்கு பங்களாதேஷில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைத்…

  • இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: 5.9 மெக்னிடியூட் அளவில் பதிவு

    இந்தோனேசியாவின் புளோரஸ் (Flores) பகுதியில் 5.9 மெக்னிடியூட் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று(17) அதிகாலை 12:46 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ஆரம்பத்தில் தெற்கு அட்சரேகை 8.57 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 121.55 ஆகிய ஆள்கூறுகளில் அடையாளம் காணப்பட்டது. இதேவேளை கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் 7.7 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று…

  • அமெரிக்க மத்திய கட்டளையின் தலைவர் USS ஆபிரகாம் லிங்கன் கப்பலுக்கு வருகை

    அமெரிக்க மத்திய கட்டளையின் (US CENTCOM) தலைவர் அட்மிரல் பிராட் கூப்பர், மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள USS ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.  ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து போர்ப் பணியில் ஈடுபட்டுள்ள இந்த கப்பலின் மாலுமிகள் மற்றும் ஊழியர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பணிப் பிரிவு காரணமாக மனநல பாதிப்புகள் மற்றும் மன உறுதி (morale) குறைவது குறித்த கவலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து…