Category: உலக செய்திகள்

  • வானிலை ஆய்வு மையம் தீவிர சூறாவளி எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

    ஒரு மிகப்பெரிய சூறாவளி உருவாகி அருகில் உள்ள மரங்களையும், லாரி, பேருந்து, கார் போன்ற வாகனங்களையும், தனக்குள்ளே இழுக்கும். மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால், அந்த வீட்டையே உள்ளிழுக்கும் அளவுக்கு அந்த சூறாவளி மிகப்பெரியதாக இருக்கும். இயற்கை சீற்றங்களை மையமாக கொண்டு உருவாகும் ஹாலிவுட் படங்களில் தான் இப்படியான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இது நிஜமாகும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அதாவது, அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் உள்ள ஓஷன் சிட்டி மற்றும்…

  • ஆயுத கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்.. சோமாலியா கடலில் அதிர்ச்சி!

    சோமாலியாவின் தலைநகர் மொகதிசுவில் (Mogadishu) உள்ள துருக்கியின் ராணுவப் பயிற்சி மையத்திற்கு, கேமரூன் நாட்டின் கொடி ஏந்திய எம்/வி லுதூஃப் (M/V LUTUF) என்ற கப்பல் கடந்த வாரம் ஆயுதங்களை ஏற்றிச்சென்றது. இந்த நிலையில், அந்த கப்பல் ஆகஸ்ட் 17-ம் சோமாலியாவின் புண்ட்லாந்து மாகாணத்தின் எய்ல் கடற்கரை அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. இந்தசூழலில் தான், கடத்தப்பட்ட லுதூஃப் கப்பல் குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, இந்தக் கப்பலில் மொத்தம் 10…

  • இந்திய கிராமங்களை குறி வைத்து எலான் மஸ்க் அதிரடி திட்டம்

    உலக பணக்காரர்களில் ஒருவராக உள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் என்ற அதிவேக இணையசேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். செயற்கைகோள்கள் மூலம் இன்டர்நெட்டை இந்நிறுவனம் வழங்குவதால், உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தாலும் இணையசேவையை பெற முடியும். இந்த நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த எலான் மஸ்க் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால், புவிசார் அரசியல், பாதுகாப்பு காரணங்களுக்காக, ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆபத்தான காலகட்டத்தில், தங்களின் கட்டுப்பாட்டில் அந்த நிறுவனம்…

  • தரையிறங்கும் போது நடந்த கோளாறு! தூக்கி வீசப்பட்ட பயணி! பிரபல விமானத்தில் நடந்த கொடூரம்!

    இருப்பதிலேயே அதிக கட்டணங்களை கொண்ட பயணமாக இருப்பது விமான பயணம் தான். அதிக ஆபத்துகளை கொண்டிருப்பதும் விமான பயணம் தான். அப்படி இருக்கும்போது, விமானங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவர்களின் கடமை. ஆனால், கடந்த சில மாதங்களாக விமான விபத்துகள் என்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. குறிப்பாக, ஏர் இந்தியா விமானத்தில் நடந்த விபத்து என்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படியான சூழலில், இன்னொரு நிறுவனத்தின் விமானத்தில், நடந்துள்ள…

  • உலக வசூலில் புது சாதனை படைத்தது ‘தி ஒடிசி’!

    கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்டமான திரைப்படமான ‘தி ஒடிசி’ (The Odyssey), வெற்றிகர திரையரங்க பயணத்தில் மற்றொரு சாதனை படைத்துள்ளது. ‘வெரைட்டி’ இதழின் தகவலின்படி, இப்படம் உலகம் முழுவதும் 1.352 பில்லியன் அமெரிக்க டொலர் வசூலித்து, இதுவரை வெளியான ‘ஆர்-ரேட்டட்’ (R-rated – பெரியவர்களுக்கானது) திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது. இதன் மூலம், 2024 இல் வெளியான ‘டெட் பூல் & வோல்வரின்’ திரைப்படம் ஈட்டிய 1.338 பில்லியன் டொலர் என்ற சாதனையை இது…

  • மேற்கு ஆபிரிக்க தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து- பலி எண்ணிக்கை அதிகரிப்பு

    ஆபிரிக்க நாடான மத்திய ஆபிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள ஜாம்போயே கிராமத்தில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த கடந்த 18ஆம் திகதி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பெரிய மண் குவியல் பொள பொளவென சரிந்து விழுந்தது. இதில், ஏராளமான தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்ட வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணியில்…

  • ஜப்பானில் ரயில் மோதியதில் நால்வர் உயிரிழப்பு

    ஜப்பானில் ஷின் – கனுமா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விரைவு ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலில் பயணித்த சுமார் 50 பயணிகள் உட்பட சம்பவ இடத்தில் பணியாற்றிய மேலும் 6 பேர் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். பாதுகாப்பான மற்றும் நேரம் தவறாத போக்குவரத்துக்கு பெயர் பெற்ற ஜப்பானில் இவ்வாறான ரயில் விபத்துகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன. சம்பவம் தொடர்பில் ஜப்பான் ரயில்வே நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளது.

  • பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    தென் அமெரிக்க நாடான பெருவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில், ஆண்டிஸ் மலைத்தொடர் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.7 ஆகப் பதிவாகியுள்ளது. பரினகொச்சோஸ் மாகாணத்தில் உபஹசொ நகரிலிருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில், 66 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதுடன், ஐகா மற்றும் அரேகிபா உள்ளிட்ட நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில்…

  • நைஜீரியாவில் படகு விபத்து – 50 பேர் உயிரிழப்பு

    நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் படகொன்று விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த படகில் விவசாயப் பணிக்காக 70க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

  • தனது உறவினர்களுக்கு நச்சுக்காளான் கலந்த உணவை வழங்கி மூவரைக் கொன்றவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனைக் கோரிக்கை

    ஆஸ்திரேலியாவில் தனது உறவினர்களுக்கு நச்சுக்காளான் கலந்த உணவை வழங்கி மூவரைக் கொன்ற வழக்கிலும், மற்றொருவரைக் கொல்ல முயன்ற வழக்கிலும் தண்டனை பெற்ற ஏரின் பேட்டர்சன் (Erin Patterson) வழக்கில் மேல்முறையீடு நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் வாதிடுகையில், பேட்டர்சனின் குற்றங்கள் “மிகவும் கொடூரமானவை” என்றும், அவருக்கு வழங்கப்பட்ட 33 ஆண்டுகள் கழித்து பிணை வழங்கும் தண்டனை போதாது என்றும் கூறினர். அவருக்குக் கடைசி வரை பிணை இல்லாத முழு வாழ்நாள் சிறைத்தண்டனை…