Category: உலக செய்திகள்
-
கனடா கூறிய குற்றச்சாட்டை டிரம்ப்பின் முதன்மை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் மறுத்துள்ளார்
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயர் (Jamieson Greer), இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முறிந்ததற்கு அமெரிக்காவின் கடைசி நேர நிபந்தனைகள் காரணமல்ல என்றும், ஒட்டாவா தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட கூடுதல் கோரிக்கைகளே காரணம் என்றும் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை முறிந்த பிறகு தற்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ தொடர்பு வழிகள் (“open channels”) எதுவும் திறந்திருக்கவில்லை என்று கிரீயர் உறுதிப்படுத்தியுள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), அமெரிக்கா இறையாண்மையைப் பாதிக்கும் வகையிலும்…
-
நேபாள பெரும் துயரத்திலுமா இப்படி : கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள்… கடும் அதிருப்தி !
நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டததோடு பனிப்பாறையிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்நிலச்சரிவின் மண் மற்றும் பாறைகள் ஆற்றுப் பாதையை அடைத்ததால், அந்த பகுதியில் பெரிய அளவில் நீர் தேங்கியுள்ளது. இப்படி தேங்கிய நீர் திடீரென உடைப்பெடுத்து வெள்ளமாக மாறி, போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளை நோக்கி பெரும் வேகத்தில் கரைபுரண்டு வந்துள்ளது. பல மீட்டர் தூரம்…
-
புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் புதிய தடுப்பூசி
புற்றுநோய் மீண்டும் வருவதையும் அது, பிற உறுப்புகளுக்குப் பரவுவதையும் பெருமளவில் கட்டுப்படுத்தும் உலகின் முதல் ‘தனிநபர் புற்றுநோய் தடுப்பூசி’ மருத்துவ ஆய்வில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மெர்க் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘இன்டிஸ்மேரன்’ என்ற இந்தத் தடுப்பூசி, புற்றுநோய் மருத்துவத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நோயாளியின் புற்றுநோய் செல்லிலும் உள்ள குறிப்பிட்ட புரதங்களை அடையாளம் கண்டு, ‘mRNA’ தொழில்நுட்பம் மூலம் இத்தடுப்பூசி பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு…
-
இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்
இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மீது ,ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பெர்க்ஷயரைச் சேர்ந்த 31 வயதான ரஹீம் ஸ்டெர்லிங் மீது, முறையற்ற நுகர்வுக்காக நைட்ரஸ் ஒக்சைட்டை வைத்திருந்தமை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு மாதிரியை வழங்க மறுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவர் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி நீதிமன்றில்…
-
பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்
‘தி ரொக்கி ஹெரர் பிக்சர் ஷோ’ (The Rocky Horror Picture Show) திரைப்படத்தில் ஃபிராங்க்-என்-ஃபர்டராக நடித்து உலகப் புகழ் பெற்ற பிரபல ஆங்கில நடிகர் டிம் கரி (Tim Curry) தனது 80ஆவது வயதில் காலமானார். லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட கடுமையான பக்கவாதம் காரணமாக சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்த அவர், குரல் கொடுக்கும் கலை மற்றும் எழுத்துப் பணிகளில் கவனம்…
-
கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் வியக்கும் ஒரு விசித்திர சாதனை!
கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் வியக்கும் ஒரு விசித்திரமான சாதனை சுவீடன் நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ளது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 30 ஆயிரத்து 607 மீற்றர் உயரத்தில் இருந்து, கைபேசி உறைக்குள் வைக்கப்பட்ட கைபேசியொன்று கீழே வீசப்பட்டுள்ளது. இவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தும் அந்தக் கைபேசி எந்தச் சேதமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ‘ரைனோஷீல்ட்’ மற்றும் ‘சென்ட் இன் டூ ஸ்பேஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து, சுவீடன் நாட்டின் கிருனா பகுதியில் அமைந்துள்ள விண்வெளி மையத்துக்கு…
-
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு -காணாமல்போனோர் எண்ணிக்கை 579 ஆக அதிகரிப்பு
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக காணாமல் போயுள்ளவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளதாக நேபாளக் காவல்துறை அறிவித்துள்ளது. அத்துடன், காணாமல் போயுள்ளவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 113 நேபாள நாட்டவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்புப் பணிகளை நேபாளப் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்
-
இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்க்கிலும் மீண்டும் பிரித்தானியாவில் குடியேறுவதற்காகப் லண்டன் வந்தடைந்துள்ளனர்.
இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்க்கிலும் அமெரிக்காவில் 6 ஆண்டுகள் வசித்த பிறகு, மீண்டும் பிரித்தானியாவில் குடியேறுவதற்காகப் லண்டன் வந்தடைந்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள வான் நாய்ஸ் (Van Nuys) பகுதியில் இருந்து தனிச்சிறப்பு பட்டய விமானம் (Private charter flight) மூலம் புறப்பட்ட இத்தம்பதியினர், பிரித்தானியாவின் பிர்மிங்ஹாம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களின் குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி (7) மற்றும் இளவரசி லிலிபெட் (5) ஆகியோர் செப்டம்பர் மாதம் முதல் பிரித்தானியப் பள்ளிகளில் தங்களது…
-
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் 98 பேர் பலி
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இப் பேரழிவில் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளனர் (நேபாளத்தில் 95 பேர், திபெத்தில் 3 பேர்). 400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இதில் 341 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அடங்குவர்.காணாமல் போனவர்களில் 24 பேர் கனடா நாட்டவர்கள் என்று நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா (133 பேர்), அமெரிக்கா (47 பேர்), ஆஸ்திரேலியா (34 பேர்), மற்றும்…
-
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு: அமெரிக்க மாகாணங்களுடன் மெட்டா நிறுவனத்தின் புதிய சமரச ஒப்பந்தம்!
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், மெட்டா நிறுவனம் அமெரிக்காவின் பல மாகாணங்களுடன் பல பில்லியன் டொலர் மதிப்பிலான சமரச உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக, இளம் வயதினரின் சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த மெட்டா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இளம் வயதினருக்கான தினசரி பயன்பாட்டு நேர வரம்புகள் மற்றும் இரவு நேரங்களில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான தடைகள்…