Category: உலக செய்திகள்
-
குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்
சீனாவில் மனித வடிவிலான ரோபோக்களின் (Humanoid robots) உற்பத்தி மற்றும் அரச முதலீடுகள் அதிகரித்துள்ளன. எனினும், அவை, இன்னும் தொழிற்சாலைப் பணிகளுக்குப் போதுமான வேகம் மற்றும் நுண்ணறிவுடன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்சி பிராந்தியத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் 100-க்கும் மேற்பட்ட மனித வடிவிலான ரோபோக்கள் பெட்டிகளை வரிசைப்படுத்துவது மற்றும் நூடுல்ஸ் பொதி செய்வது போன்ற எளிய பணிகளுக்காகப் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றன. எனினும், இவை மிகவும் மெதுவாகவும் தடுமாற்றத்துடனும்…
-
அமெரிக்க மத்திய உளவுத்தலைவரின் ரஷ்ய பயணத்தின் இரகசியம் வெளியானது?
அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு (CIA) தலைவர் ஜோன் ராட்கிளிஃப் (John Ratcliffe) இரகசியமாக மொஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்டு ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்துள்ளதாக கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தப் பயணத்தை “சாதாரணமானது” என்று வர்ணித்தாலும், யுக்ரைன் போரில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சிஐஏ தலைவர் திடீரென மொஸ்கோவிற்குச் சென்றது அரசியல் தரப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. யுக்ரைன் போரில் நிலவிவரும் தேக்கநிலை குறித்தும், குறிப்பாக நேட்டோ (NATO) நாடுகளுக்கு எதிராக…
-
துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதான முன்னாள் ICE அதிகாரி டெக்சாஸ் அதிகாரிகளால் விடுதலை
மினசோட்டாவில் (Minnesota) நடைபெற்ற குடிவரவு சோதனையின் போது, வெனிசுலாவைச் சேர்ந்த ஜூலியோ சேசர் சோசா-செலிஸ் (Julio Cesar Sosa-Celis) என்பவரைத் துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரி கிறிஸ்தியான் காஸ்ட்ரோ (Christian Castro), டெக்சாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். டெக்சாஸ் சட்டப்படி, நாடுகடத்தல் உத்தரவு பெறப்பட்ட நபரை 90 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்க முடியாது. அந்த கெடு முடிந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். மினசோட்டா மாநிலத்தின் நாடுகடத்தல்…
-
ஹார்முஸ் பாதை குறித்து கதார்-ஈரான் பேச்சுவார்த்தை;
ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நிலத்தடி கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஒரு கூட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து கத்தாரும் ஈரானும் விவாதித்தன. இதனுடன் பிராந்திய பதற்றத்தைக் குறைப்பதற்கும் உரையாடலுக்கான சூழலை உருவாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து ஈரானின் ஆயத்த நிலையை மதிப்பிடுவதற்காகக் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெஹ்ரானுக்கு விஜயம் செய்தார். ஓமன்-ஈரான் அறிவித்த தற்காலிக கப்பல் பாதை அறிவிப்பைத் தொடர்ந்து இந்த…
-
“அந்த மாமரம் மட்டும் அங்கில்லை என்றால் நான் இந்நேரம் உயிருடன் இருந்திருக்கவே முடியாது” – அசுர வெள்ளத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய நேபாள தொழிலாளி
நேபாளத்தின் திபெத் எல்லையோர ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மண்சரிவும், அதைத் தொடர்ந்த அசுர வெள்ளமும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. மண்சரிவால் ஆற்று நீரில் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கினர். இந்த பேரிடரில் இதுவரை 332 பேர் உயிரிழந்ததாகவும் பலரைக் காணவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெள்ள அனர்த்தத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிதுர் பகுதியில் கழிப்பறை குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 24 வயதான தொழிலாளி…
-
உலகளவில் விசா நேர்காணல்களை நிறுத்தியது அமெரிக்கா
உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். மாணவர்கள், வேலை பார்ப்போர், வர்த்தகம், சுற்றுலா என பல விசாக்களில் கடும் விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் சுற்றுலா அல்லது வணிகத்திற்காக வந்து, அகதி அந்தஸ்து கோரியுள்ள, 2 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், உலகெங்கிலும்…
-
நார்வே மன்னர் ஹாரால்டின் உடல்நிலை ‘மிகவும் கவலைக்கிடமாக’ உள்ளது
இரத்த நோயால் பாதிக்கப்பட்டு ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஆகஸ்ட் 17 முதல் சிகிச்சை பெற்று வரும் 89 வயதான நார்வே மன்னர் ஹாரால்டின் (King Harald) உடல்நிலை மிகவும் மோசமடைந்து “கவலைக்கிடமான” நிலையில் உள்ளதாக அரண்மனை தெரிவித்துள்ளது. மன்னரின் உடல்நிலை காரணமாக ராணி சோனியா மற்றும் இடைக்காலப் பொறுப்பாளராகச் செயல்படும் இளவரசர் ஹாக்கூன் (Crown Prince Haakon) ஆகியோர் தங்களுடைய அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளனர். மன்னரின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் அவருடன் இருக்கும் நிலையில்,…
-
நேபாளம்-திபெத் திடீர் வெள்ளப்பெருக்கு: 270 உடல்கள் மீட்பு; சுமார் 1,400 பேரைக் காணவில்லை
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் இதுவரை 270 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 288 இந்தியர்களும் அடங்குவர். மேலும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சுமார் 200 இந்தியர்கள் திபெத்தின் தார்சென், ஜிலாங் போன்ற இடங்களில் சிக்கியுள்ளனர். தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த 21 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவல்படி 517 வெளிநாட்டவர்கள் உட்பட 644 சுற்றுலா பயணிகள்…
-
இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமைக்கு அதிபர் பெசெஷ்கியான் அழைப்பு
தெஹ்ரானில் நடைபெற்ற 40-வது சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். எந்தவொரு இஸ்லாமிய நாட்டின் நிலப்பரப்பும் மற்றொரு இஸ்லாமிய நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது என அவர் கூறினார். கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, ஈரான் அதிகாரிகளைச் சந்திக்க தெஹ்ரான் வருகிறார். பாகிஸ்தான்…
-
‘ஜாக்கெட் திருடிவிட்டு சிங்கப்பூரை விட்டு சென்ற பிரிட்டன் நபர்’ – 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது
சிங்கப்பூரின் விமான நிலைய ஷாப்பிங் மாலில் உள்ள ஒரு கடையில் இருந்து டெனிம் ஜாக்கெட்டை திருடியதாகக் கூறப்படும் பிரிட்டிஷ் நபர் மீது, அந்தச் சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிய பிறகு சிங்கப்பூர் அதிகாரிகள் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். 2024 ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாலை, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பொம்மைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நீல நிற டெனிம் ஜாக்கெட் காணாமல் போனதை அங்கிருந்த விற்பனை உதவியாளர் கவனித்ததைத் தொடர்ந்து…