Category: உலக செய்திகள்

  • குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு: அமெரிக்க மாகாணங்களுடன் மெட்டா நிறுவனத்தின் புதிய சமரச ஒப்பந்தம்!

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், மெட்டா நிறுவனம் அமெரிக்காவின் பல மாகாணங்களுடன் பல பில்லியன் டொலர் மதிப்பிலான சமரச உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக, இளம் வயதினரின் சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த மெட்டா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இளம் வயதினருக்கான தினசரி பயன்பாட்டு நேர வரம்புகள் மற்றும் இரவு நேரங்களில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான தடைகள்…

  • 17 வயது மாணவி, முன்னாள் காதலனால் சுட்டுக் கொலை!

    அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த 17 வயதான ஜாடா செல்லர்ஸ் (Jada Sellers) என்ற பிளஸ் டூ பள்ளி மாணவி, அவரது முன்னாள் காதலன் கிறிஸ்டியன் ஹெர்சி (Christian Hursey, 18) என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜாடா செல்லர்ஸ் மில்ஃபோர்ட் மில் அகாடமியில் பயின்று வந்த ஒரு சிறந்த மாணவி. இவர் சமூக வலைதளங்களில் (Tik Tok / Social Media) 2.4 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் (Followers) கொண்டிருந்த ஒரு பிரபல இளம் படைப்பாளி ஆவார். ஆகஸ்ட்…

  • நேபாளத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு – 8 பேர் உயிரிழப்பு

    நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. எனினும், நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

  • மெக்சிகோவில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து

    மெக்சிகோவின் துல்டெபெக் (Tultepec) நகரில் உள்ள பட்டாசு தயாரிப்பு மையத்தில் இரண்டு சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டு தொழிற்சாலை முழுமையாக எரிந்து சாம்பலானது. அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புகளால் தொழிற்சாலை கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. விண்ணை முட்டும் அளவிற்குத் தீப்பிளம்புகளும் புகையும் எழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • விஸ்கான்சினில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கசிவு

    அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் அமைந்துள்ள சாட்சன் (Saxon) பகுதியில் இயற்கை எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்டிருந்த டிரக் ஒன்று எதிர்பாராதவிதமாக உருண்டு சென்று, இயற்கை எரிவாயுக் குழாயின் மீது மோதியதால் இந்த கசிவு ஏற்பட்டது. வெடிப்பு அபாயத்தைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்த மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பெரும் விபத்து ஏதும் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் மின்சார விநியோகம் தற்காலிகமாக…

  • UNRWA மையத்தில் இஸ்ரேலிய சோதனையின் போது பாலஸ்தீன சிறுவன் சுடப்பட்டான்

    ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள கஃப்ர் அகப் (Kafr Aqab) பகுதியில் இயங்கி வரும் UNRWA தொழிற்பயிற்சி மையத்தை இஸ்ரேலிய காவல்துறையும் எல்லை பாதுகாப்புப் படைகளும்  வாகனங்களுடன் முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இந்த மையம் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன இளைஞர்களுக்குத் தொழில் கல்வி வழங்கி வருகிறது. இந்தச் சோதனையின் போது நேரடித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது 5 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். இதில் ஒரு பாலஸ்தீன சிறுவன் சுடப்பட்டக் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த நடவடிக்கை…

  • ரஷ்யாவின் ‘அமேசான்’ வைல்ட்பெர்ரிஸ் மீது ட்ரோன் தாக்குதல்

    ரஷ்யாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான வைல்ட்பெர்ரிஸ் (Wildberries), உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு மீண்டும் இலக்காகியுள்ளது. ரஷ்யாவின் தம்போவ் (Tambov) பிராந்தியத்தில் அமைந்துள்ள வைல்ட்பெர்ரிஸ் நிறுவனத்தின் முக்கிய லாஜிஸ்டிக்ஸ் (விநியோக) மையம் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் மேற்கொண்டு வரும் இந்தத் தொடர் தாக்குதல்களில், இதுவரை வைல்ட்பெர்ரிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 கிடங்குகள் (Warehouses) இலக்கு வைக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மிகப்பெரிய மின்-வணிக (e-commerce) தளமாக விளங்கும் வைல்ட்பெர்ரிஸ் நிறுவனம், அந்நாட்டின் விநியோகக் கட்டமைப்பில் முக்கியப் பங்கு…

  • ஹார்முஸில் புதிய தற்காலிக பாதை குறித்து ஈரானும் ஓமானும் உடன்பாடு

    ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையே தெஹ்ரானில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையில் 7 மைல் (11.3 கி.மீ) அகலமுள்ள புதிய தற்காலிக கப்பல் பாதையை உருவாக்க இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன. பாரசீக வளைகுடாவிற்குள் நுழையும் வர்த்தகக் கப்பல்கள் ஈரானின் பிராந்திய கடல் எல்லை வழியாகச் செல்லும். வெளியேறும் பாதையின் ஒரு பகுதியும் ஈரானிய எல்லை வழியாகச் சென்று, பின்னர் ஓமானியக் கடற்பகுதியுடன் இணையும். இந்த தற்காலிக ஏற்பாடு வணிக மற்றும் வர்த்தகக் கப்பல்களுக்கு…

  • மோகன் பகவத்தின் நிகழ்ச்சியைத் தான் எதிர்ப்பதாக நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி (Zohran Mamdani) தெரிவித்துள்ளார்.

    RSS அமைப்பின் 100-வது ஆண்டை ஒட்டி, ‘AHEAD Forum’ சார்பில் “Universal Oneness Celebration” என்ற பெயரில் ஆகஸ்ட் 29 அன்று இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் மம்தானி, மதச்சார்பற்ற மற்றும் பன்மைத்துவக் கொள்கை கொண்ட இந்தியாவையே தான் அறிந்திருப்பதாகவும், பிரிவினையை ஏற்படுத்தும் இத்தகைய கொள்கைகளைத் தான் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இந்த நிகழ்ச்சியைத் தான் விரும்பவில்லை என்றாலும், மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடக்கும் ஒரு தனியார் நிகழ்ச்சியை ரத்து செய்ய நியூயார்க்…

  • பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம் : குழந்தை பராமரிப்புக்காக ரூ.53 இலட்சம் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு!

    சிங்கப்பூரில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு குழந்தை பிறந்தது முதல் 17 வயது நிறைவடையும் வரையில், குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மொத்தமாக சுமார் ரூ.53 இலட்சம் (இந்திய மதிப்பில்) நிதியுதவி வழங்கப்படவுள்ளது. குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகளை பெற்றோருக்குக் குறைக்கும் வகையிலும், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த…