Category: உலக செய்திகள்

  • நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்

    நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் தனது 89ஆவது வயதில் காலமானார். அரிய வகை இரத்த நோய் காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளாக நோர்வேயை ஆட்சி செய்த மன்னர் ஹரால்ட், 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நோர்வேயிலேயே பிறந்த முதல் நோர்வே மன்னர் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஹாக்கோன், நோர்வேயின் புதிய மன்னராகப் பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் – 24 மணி நேர சிகிச்சை தேவை…! ஈரான் எச்சரிக்கை

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் இருப்பதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரீபாபாடி (Kazem Gharibabadi) கடுமையாக விமர்சித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் பகுதி எனக் கூறி ட்ரம்ப் பதிவிட்டமையை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க எல்லைப் பகுதியாகக் காட்டும் வரைபடப் பதிவொன்று வெளியிடப்பட்டது. அதில் உலகின் மிக முக்கியமான கடல்சார்…

  • நேபாளத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மீட்பு பணிகள்

    நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்தில் 1,500 இற்கும் மேற்பட்டோர் இன்னமும் மாயமாகியுள்ள நிலையில், மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பனிப்பாறை உடைந்ததால் (Glacial Collapse) ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான தடுப்பு ஏரி உடைந்ததால், திரிசூலி ஆற்றுப் படுகைப் பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நேபாளத்தில் மட்டும் 538 பேரும் மற்றும்…

  • நீண்ட ஆயுளில் ஜப்பான் முதலிடம்

    ஜப்பான் நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழும் ஜப்பானில், இவ்வாறு அதிக எண்ணிக்கையிலானோர் நூறு வயதைக் கடந்து வாழ்வதற்கு இவர்கள் தொன்று தொட்டு பின்பற்றும் தனித்துவமான உணவு முறைகள் மற்றும் வளர்ச்சியடைந்த மருத்துவம் என்பன காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், அவர்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, உடல் இயக்கம், சமூக உறவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை இதில் எந்த…

  • உலகம் நேபாளத்தில் அதிர்ச்சி.. அணை உடைந்ததால் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. மீட்புப்பணி நிறுத்தம்!

    நேபாளத்தில் நேற்று முன்தினம் பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பேரழிவு உலகையே உலுக்கியுள்ளது. நேபாள் – திபெத் எல்லையில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் இருந்த பனிப்பாறை தீடிரென உடைந்து அதில் இருந்த ஏராளமான நீர் ’போதே கோஷி (Bhote Koshi)’ ஆற்றில் பாய்ந்து வந்ததால் நேபாளத்தில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. சில வினாடிகளில் 9 மீட்டர் வரை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, சுனாமி வேகத்தில் வந்த வெள்ளத்தால் நீர்மின் கட்டமைப்புகள், வீடுகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர்…

  • உருக்குலைந்த நேபாளம்.. மண்ணில் புதைந்த சடலங்கள்.. தோண்டி எடுத்து நகையை திருடும் கும்பல்!

    அழகு நிறைந்திருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் நிறைந்திருக்கும் என்று சொல்வார்கள். அப்படித்தான் தற்போது இமயமலைப் பகுதியில் இயற்கை கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. நேற்று முன்தினம் காலை சீன–நேபாள எல்லையையொட்டிய திபெத் பகுதியில், இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரியில் உடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் நேபாளத்தின் போதே கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல மீட்டர் உயரத்திற்கு சேரும் சகதியுடன் பீய்ச்சி அடித்து பாய்ந்து வந்த பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் நேபாளம், இந்தியா மற்றும் சீனாவின் மீட்புப்…

  • நேபாள விபத்துக்கு காரணம் இதுதான்! காட்டிக் கொடுத்தது இஸ்ரோ?

    நேபாளம் நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரால், ரசுவா, ரசுவாகடி, திமுரே ஆகிய பகுதிகளும், திரிசூலி நதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களும், கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானதேடு, 165 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி, நேபாளத்தை சேர்ந்த 127 பேரும், இந்தியாவை சேர்ந்த 178 பேரும், அமெரிக்காவை சேர்ந்த 65 பேரும் என, 33 நாடுகளை சேர்ந்த 644 பேர்…

  • 21 ஆண்டுகளில் 469 உயிர்களை காப்பாற்றிய சீன மனிதர்

    சீனாவில் உயிர்மைப்புக்கு முயற்சிக்கும் நபர்களைத் தடுப்பதற்காக கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக யாங்சே நதி பாலத்தில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் சென் சி என்ற நபர், இதுவரை 469 பேரை உயிரிழப்பிலிருந்து காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த சென் சி, தனது இளமைப் பருவத்தில் வீடின்றி வாழ்ந்ததுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். பின்னர் பழக்கடை ஒன்றை நடத்தி வாழ்க்கையை நிலைப்படுத்தியுள்ளார். 2000ஆம் ஆண்டு நான்ஜிங் யாங்சே நதி பாலத்தில் உயிர்மைப்புக்கு முயன்ற…

  • நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் – புதிய ஏரி உருவானதால் எச்சரிக்கை

    நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் பகுதிக்கு அருகில் புதிய ஏரி ஒன்று உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத்தில் உருவாகி நேபாளம் வழியாகப் பாயும் இந்த ஆறுகள் பின்னர் போடேகோஷி நதியுடன் இணைகின்றன. புதிய ஏரியில் நேற்று காலை வரை சுமார் 20 இலட்சம்…

  • குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்

    சீனாவில் மனித வடிவிலான ரோபோக்களின் (Humanoid robots) உற்பத்தி மற்றும் அரச முதலீடுகள் அதிகரித்துள்ளன. எனினும், அவை, இன்னும் தொழிற்சாலைப் பணிகளுக்குப் போதுமான வேகம் மற்றும் நுண்ணறிவுடன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்சி பிராந்தியத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் 100-க்கும் மேற்பட்ட மனித வடிவிலான ரோபோக்கள் பெட்டிகளை வரிசைப்படுத்துவது மற்றும் நூடுல்ஸ் பொதி செய்வது போன்ற எளிய பணிகளுக்காகப் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றன. எனினும், இவை மிகவும் மெதுவாகவும் தடுமாற்றத்துடனும்…