Category: உலக செய்திகள்

  • 20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!

    அமெரிக்காவின் மேரிலாண்ட் (Maryland) மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாக ஒரே வகையான எண்களைப் பயன்படுத்தி லொத்தரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, அவர் வாங்கிய மூன்று ‘போனஸ் மேட்ச் 5’ (Bonus Match 5) லொத்தரி சீட்டுகள் மூலம் அவருக்கு மொத்தம் ரூ.1.30 கோடி (இந்திய ரூபாய்) பரிசுத் தொகை கிடைத்துள்ளது. தன் நீண்ட நாள் நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ச்சியாக ஒரே எண்களைப் பயன்படுத்தி வந்த இவரின் இந்த…

  • நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம் – உயிரிழப்பு 1,377ஆக அதிகரிப்பு!

    நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,377 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி நேபாள-திபெத் எல்லைக்கு அருகே பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இதுவரை சுமார் 13,656 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 5,130 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளின்போது அடையாளம் காணப்படாத 1,147 உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதுடன், டி.என்.ஏ பரிசோதனைகள் மூலம் அவற்றை அடையாளம் கண்டு…

  • ஈரானில் மர்மமான நடவடிக்கை – ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!

    ஈரானின் Pickaxe Mountain பகுதியில் கட்டுமானப் பணிகள் மற்றும் சுரங்கத் தளத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மலையின் கீழ் யுரேனியம் செறிவூட்டும் சென்ட்ரிஃபியூஜ்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவும் இஸ்ரேலும் சந்தேகித்து வரும் நிலையில், அங்கு இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் கவனம் திரும்பியுள்ளது. ஈரானின் ‘Pickaxe Mountain’ பகுதியில் மேற்குறிப்பிட்டவாறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதை சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம்…

  • கப்பலை மூழ்கடித்த அமெரிக்கா.. 3 பேர் பலி

    கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டிய கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பல் கடலில் மூழ்கியதுடன், அதில் இருந்த 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த அந்தக் கப்பல் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக உளவுத்தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் கப்பல் கடுமையாகச் சேதமடைந்து கடலில் மூழ்கியதாகக்…

  • அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் பின்னர் ஈரான் போர் நிறைவுக்கு வரும் : ட்ரம்ப் நம்பிக்கை

    அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலின் பின்னர் ஈரான் உடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஈரானிய தரப்பு பாதிக்க முற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், போரைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் ஈரானிய தரப்பு தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான ‘பிக்எக்ஸ் மவுண்டன்’ பகுதியை இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும்…

  • மசகு எண்ணெயை அவசரமாக கொள்வனவு செய்யும் சீனா!

    சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ஈரானிய மற்றும் ரஷ்ய விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய முற்பட்டு வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. இதனால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இந்நிலையிலேயே…

  • உன் மகளை நான்தான் வளர்த்தேன்!.. 45 லட்சம் சம்பளம் வேணும்!.. பாட்டி தொடர்ந்த வழக்கு!..

    தாத்தா பேரனை வளர்ப்பது.. பாட்டி பேத்தியை வளர்ப்பது என்பதெல்லாம் பழைய காலமாக மாறிவிட்டது. ஏனெனில் தற்போது கூட்டு குடும்பம் என்பதே பெரும்பாலும் குறைந்துவிட்டது. அதோடு சிறியவர்கள் பெரியவர்களை மதிப்பதும் இல்லை. அதேநேரம் சீனாவில் இன்னும் பாரம்பரிய பழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு குடும்ப செண்டிமெண்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.. சீனாவில் Ms Xu என்கிற 60 வயது மூதாட்டி தனது பேத்திய வளர்த்ததற்காக தனது மகனிடம் இந்திய மதிப்பில் 45 லட்சம் ரூபாய் பணம் கேட்டு நீதிமன்றத்தில்…

  • ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்

    தெற்கு செங்கடலில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஸூக்கார் தீவின் (Zuqar Island) கட்டுப்பாட்டை ஹூதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படகுகளில் வந்து மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்து குறித்த தீவு ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிடிக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைப்பற்றலின் ஊடாக, செங்கடலின் கடல்சார் பிராந்தியத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தமது இராணுவ மற்றும் மூலோபாய பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • சுனாமி, நிலநடுக்கம் வருமா? கரை ஒதுங்கிய கொடூர மீன்

    இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் இபு, மவுண்ட் செமேரு, அனக் கிரகடாவ், லெவோடோபி லாகி-லாகி, இலி லெவோடோலோக், சினாபுங் ஆகிய 6 எரிமலைகள், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று ஒரே சமயத்தில் வெடித்துச் சிதறின. குறிப்பாக, மவுண்ட் சினாபுங் எரிமலை வெடித்தபோது, சுமார் 3,500 மீட்டர் உயரம் வரை, சாம்பல் துகள் மேலே எழும்பியதாகவும் சொல்லப்பட்டது. இதனால், விமானச் சேவையும் பாதிக்கப்பட்டு, 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அவதி அடைந்தனர். சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்ஸ்டர்டாம், சியோல்…

  • AI Super Intelligence மனிதகுலத்தை அழிவுக்கு தள்ளும் அபாயம் குறித்து முன்னாள் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் ஒன்றான Anthropic நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய 27 வயது ஏஐ ஆராய்ச்சியாளர் ஜேகப் காக்சன், தனது பதவியில் இருந்து விலகியிருப்பது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பதவி விலகல் குறித்து சமூக வலைதளமான X-இல் பதிவிட்ட காக்சன், OpenAI மற்றும் Anthropic ஆகிய இரு நிறுவனங்களும் ஏஐ வளர்ச்சியில் பொறுப்புடன் செயல்படவில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தான், OpenAI மற்றும் Anthropic ஆகிய இரு நிறுவனங்களிலும்…