Category: உலக செய்திகள்

  • உலக வல்லரசையே அதிரவைத்த தாக்குதல்.. இரட்டைக் கோபுர தகர்ப்பின் 25-வது ஆண்டு!!

    2001 செப்டம்பர் 11. காலை 8:46 மணி. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வல்லரசின் கம்பீர அடையாளமாக நின்ற உலக வர்த்தக மையத்தின் மீது அதிபயங்கர வேகத்தில் மோதியது. கரும்புகையும் நெருப்புப் பிழம்புகளும் கிளர்ந்தெழுந்தன. தொடக்கத்தில் இதனை ஒரு விபத்து என்றே ஊடகங்களும் மக்களும் கருதினர். ஆனால், சரியாக 17 நிமிடங்கள் கழித்து, காலை 9:03 மணிக்கு, மற்றொரு விமானம் அருகிலிருந்து கோபுரத்தை துளைத்தது. மூன்றாவது விமானம் காலை 9:37 மணிக்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon)…

  • உக்ரைன் மீது ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு

    உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரில், வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 67 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. தாக்குதல் இடம்பெற்ற போது,வீதிகளில் மக்கள் அதிகளவில் இருந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சர் இவான் வைகிவ்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த வார தொடக்கத்தில் ஸபோரிஷியா மற்றும் சுமி ஆகிய நகரங்களில் உள்ள மேலும் இரண்டு வணிக…

  • இஸ்ரேல்–லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றம்!

    லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள பராஅச்சித் மலைப்பகுதியில் இஸ்ரேலியப் படையினர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் (NNA) தெரிவித்துள்ளது. டயர் மாவட்டத்திலுள்ள பராஅச்சித் நகரின் மலைப்பகுதியில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், அதே பகுதியில் உள்ள வாடி அல்-ஹுஜைர் மீதும் இஸ்ரேலிய பீரங்கிப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் மோதல் சூழலில், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படையினரின்…

  • ஈரான்,பாகிஸ்தான் இடையே ஹவுதி தாக்குதல்கள் குறித்து பேச்சு

    ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது, ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதலை தணித்து, மீண்டும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் மீதான அமெரிக்க–இஸ்ரேல் போர், பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் சாத்தியம் மற்றும் சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர். இதேவேளை, யேமனின்…

  • 5 வயதில் உலக சாதனை.. அமெரிக்காவை சேர்ந்த 6 வயது யோகா ஆசிரியர் பற்றி தெரியுமா?

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். அவருக்கு வெறும் 6 வயது. ஆனால் ஓராண்டுக்கு முன்னதாகவே அதாவது, அவரின் 5 வயதில், சரியாக 5 ஆண்டுகள் மற்றும் 337 நாட்களில் அவர் உலக சாதனை ஒன்றை படைத்திருந்தார். இந்த வயதில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடத்தை (Course) வெற்றிகரமாக முடித்து,இந்த இளம் வயதிலேயே சான்றிதழ் பெற்ற, அதாவது அங்கீகரிக்கப்பட்ட யோகா ஆசிரியரானார். இது உலக சாதனை…

  • உலக சந்தையில் நாளாந்தம் அதிகரிக்கும் எண்ணெய் விலை

    ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்து வருகின்றது. இதன்படி, இன்று (11) காலை வேளையில் உலகச் சந்தையின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலர்களையும் கடந்து பதிவாகியுள்ளது. இது கடந்த மே மாதத்திற்கு பின்னர் பதிவாகும் அதிகூடிய விலையாகும். கடந்த ஜூலை 24 ஆம் திகதிக்குப் பிறகு, கடந்த 9…

  • இந்தியா சென்றார் ரஷ்ய ஜனாதிபதி

    பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை (12) மற்றும் நாளை மறுதினங்களில் (13) டெல்லியில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டிற்கு 4-வது முறையாக இந்தியா தலைமை ஏற்கிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தென் ஆபிரிக்கா ஜனாதிபதி சிரில் ரமபோஸா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் பட்டா எல் சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது, இந்தோனேஷியாஜனாதிபதி…

  • கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!

    உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபாவின் (FIFA) தலைவர் கியானி இன்ஃபான்டினோ மீண்டும் தேர்தலில் போட்டியிடும் போது அவருக்கு ஆதரவளிப்பதில்லை என்று பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. அவருக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் பிலிப் தியாலோ (Philippe Diallo) அறிவித்துள்ளார். ஃபிஃபா தலைவரின் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கை உடைந்துவிட்டதாகவும் உலகக் கால்பந்தை நிர்வகிக்கும் விதம் தற்போதுள்ள முறையுடன் ஒத்துப்போகவில்லை என்றும் பிரான்ஸின் கால்பந்தாட்ட சம்மேளன நிர்வாகக் குழு ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது. முன்னதாக, உலக…

  • 20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!

    அமெரிக்காவின் மேரிலாண்ட் (Maryland) மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாக ஒரே வகையான எண்களைப் பயன்படுத்தி லொத்தரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, அவர் வாங்கிய மூன்று ‘போனஸ் மேட்ச் 5’ (Bonus Match 5) லொத்தரி சீட்டுகள் மூலம் அவருக்கு மொத்தம் ரூ.1.30 கோடி (இந்திய ரூபாய்) பரிசுத் தொகை கிடைத்துள்ளது. தன் நீண்ட நாள் நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ச்சியாக ஒரே எண்களைப் பயன்படுத்தி வந்த இவரின் இந்த…

  • நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம் – உயிரிழப்பு 1,377ஆக அதிகரிப்பு!

    நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,377 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி நேபாள-திபெத் எல்லைக்கு அருகே பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இதுவரை சுமார் 13,656 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 5,130 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளின்போது அடையாளம் காணப்படாத 1,147 உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதுடன், டி.என்.ஏ பரிசோதனைகள் மூலம் அவற்றை அடையாளம் கண்டு…