Category: உலக செய்திகள்

  • மின்னஞ்சல், பயண திட்டம், கொள்முதல் வரை உங்கள் சார்பில் செய்யும் தனிப்பட்ட AI ஏஜென்டாக ‘Muse’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது Meta.

    செயற்கை நுண்ணறிவு துறையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வகையில், Mark Zuckerberg தலைமையிலான Meta புதிய ‘Muse’ தனிப்பட்ட AI ஏஜென்டை அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்ட Muse, கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் நின்றுவிடாமல், பயனர்களுக்காக நேரடியாக பல்வேறு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. Muse-க்கு ஒரு பணியை கூறினால், அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தானாக மேற்கொள்ள முடியும். உதாரணமாக, மின்னஞ்சல் அனுப்புவது, பயணத்தைத் திட்டமிடுவது உள்ளிட்ட அன்றாட பணிகளை பயனர் சார்பில் செய்ய…

  • ஹமாஸின் தாக்குதல் எச்சரிக்கை.. நெதன்யாகுவுக்கு வந்த தகவல்.. மறுத்த அரசு.. சர்ச்சையில் இஸ்ரேல்!

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. தாக்குதலுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு, ஹமாஸ் பெரிய அளவிலான தாக்குதலுக்கு தயாராகி வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்ததாக இஸ்ரேல் நாளிதழான ஹாரெட்ஸ் (Haaretz) வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் அப்போதைய தலைவர் யாஹ்யா சின்வார், மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தத் தயாராகி வருவதாக பாலஸ்தீன முன்னாள்…

  • நேபாளத்துக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. மீண்டும் உலுக்கிய இயற்கை!

    இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகியதால், கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று நேபாளத்தின் கோஷி ஆற்றிலும், திரிசூலி ஆற்றிலும் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொன்ட பனிப்பாறை உருகி, 300 கி.மீ வேகத்தில் மினி சுனாமி போல் வந்த இந்த வெள்ளத்தில் சிக்கி, 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியிலும், இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் பீகார், உத்தரப்பிரதேசம்,…

  • அமெரிக்காவை சுட்டெரிக்கும் வரலாறு காணாத கோடை – உச்சக்கட்ட வெப்பத்தால் மக்கள் தவிப்பு!

    அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், 132 ஆண்டுகால வானிலைப் பதிவுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான கோடையாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration – NOAA) தகவலின்படி, நாட்டின் தொடர்ச்சியான 48 மாநிலங்களில் சராசரி வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது 20ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 1.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். மேலும், கடந்த…

  • அணுவாயுதம் வைத்திருப்பவர்களும் ஈரானின் நாகரிகத்தை அச்சுறுத்துவோரும் நியாயம் பேச தகுதி அற்றவர்கள் – ஈரான் துணை ஜனாதிபதி கண்டனம்

    ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசுவதற்கு அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எந்த அருகதையும் இல்லை என்று ஈரானின் முதல் துணை ஜனாதிபதி மொஹமட் ரெசா அரேப் (Mohammad Reza Aref ) தெரிவித்துள்ளார். சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) ஆளுநர்கள் குழு ஈரானுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் இரட்டை வேடத்தையே காட்டுவதாகவும், சமாதான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் ஈரான் உறுதியாகப் பின்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார். அணு ஆயுதங்களை வைத்திருப்பவர்களும், ஹிரோஷிமா தாக்குதலை நடத்தியவர்களும், அணுசக்தி…

  • நாடலி ஹார்ப் உள்ளிட்ட நெருக்கமான உதவியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நெருங்கிய வெள்ளை மாளிகை உதவியாளர்களுக்குப் பெருமளவில் பணப்பரிசுகளை வழங்கியுள்ள விவகாரம் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் தலைமைச் செயலக உதவியாளர் நாடலி ஹார்ப் (Natalie Harp) மற்றும் முக்கிய உதவியாளர்கள் சிலருக்கு கடந்த ஆண்டு விடுமுறை காலப் பரிசாக தலா 45,000 அமெரிக்க டொலர்களை பணப்பரிசாக வழங்கியுள்ளதாக நிதி வெளிப்படைத்தன்மை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களின்படி, நாடலி ஹார்ப் (Natalie Harp),…

  • பயணப் பைக்குள் ராட்சத முதலைத் தலை – இத்தாலி விமான நிலையத்தில் அதிர்ச்சி

    இத்தாலியின் டுரின் நகரிலுள்ள காசெல்லே விமான நிலையத்தில், பயணி ஒருவரின் பயணப் பையில் இருந்து காய்ந்த நிலையில் இருந்த ராட்சத முதலைத் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மியாமியில் இருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலி வந்த பயணியின் உடைமைகளை இத்தாலிய நிதி பொலிஸாரும் சுங்கத்துறை அதிகாரிகளும் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, துணிகளுக்கு நடுவே பரிசுப் பொதியைப் போன்று சுற்றப்பட்ட நிலையில் முதலைத் தலை மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்பு விதிகளின்படி, உரிய சர்வதேச அனுமதி மற்றும் சான்றிதழ்கள் இன்றி முதலை…

  • தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்!

    தெற்கு லெபனானில் உள்ள ஹரூஃப் (Harouf) நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஹரூஃப் – ஸெப்தீன் (Zebdine) நகரங்களை இணைக்கும் வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை இலக்குவைத்து இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர். அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட…

  • ரஷ்யா – வடகொரியாவை இணைக்கும் புதிய பாலம்

    ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் முதலாவது புதிய பாலம் ஒன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் ராணுவக் கூட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் திறப்பு விழா, காணொளி கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இதில் ரஷிய பிரதமர் மிக்ஹைல் மிஷுஸ்டின் மற்றும் வடகொரிய பிரதமர் பாக் தே சோங் ஆகியோர் கலந்துகொண்டனர். துமேன் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள…

  • பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

    பிலிப்பைன்ஸ் நாட்டின் கொரான் கடற்பரப்பில் ‘எம்.வி. ஜூன் அஸ்டர்’  என்ற பயணிகள் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிரபல சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு அருகே, கரையிலிருந்து சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. கப்பலில் மொத்தம் 134 பேர் பயணித்துள்ளனர்.இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 87 பயணிகளின் நிலை குறித்து தகவல் இல்லாததால், அவர்களைத் தேடும் பணிகளை பிலிப்பைன்ஸ் கடலோரக்…