Category: உலக செய்திகள்
-
ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான நிரந்தர வதிவிட அனுமதி உள்ளிட்ட சில குடிவரவு தொடர்பான கட்டணங்களை 20 மடங்கு வரை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை இன்றுமுதல்(01.11.2026) நடைமுறைக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இதுவரை 10,000 யென் ஆக காணப்பட்ட நிரந்தர வதிவிட அனுமதிக்கான கட்டணம் 200,000 யென் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை 6,000 யென் நிலையான கட்டணமாக அறவிடப்பட்டு வந்த விசா தொடர்பான கட்டணத்திற்குப் பதிலாக,…
-
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த டீசல் விலை – பரபரப்பில் ஐரோப்பிய ஒன்றிய மக்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள நாடுகளில் டீசல் லீட்டர் ஒன்றின் விலை சராசரி விலையை விட வரலாறு காணத வகையில் உயர்ந்துள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, டீசல் லீட்டர் ஒன்றின் விலை 2.24 யூரோக்களாக (சுமார் 2.53 அமெரிக்க டொலர்கள்) விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்க – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்ப் பதற்றங்களைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு விலை அதிகரிப்பு…
-
பராமரிப்பு நிலையத்திற்குத் துப்பாக்கியை எடுத்துச் சென்ற சிறு பிள்ளை
பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் துப்பாக்கியை வெளியே எடுத்த சிறு பிள்ளையின் பெற்றோரில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்தப் பிள்ளை தனது பையிலிருந்து துப்பாக்கியை வெளியே எடுத்தது. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலைய ஊழியர்கள் உடனடியாக பிள்ளைகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ததாகக் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார். அந்தத் துப்பாக்கியில் தோட்டாக்களும் இருந்தன. அந்தச் சிறு பிள்ளையின் பெற்றோரில் மற்றொருவர் காவல்துறை அதிகாரி.நிலையத்தில் இருந்த துப்பாக்கி காவல்துறையைச் சேர்ந்தது அல்ல. சம்பவத்தில்…
-
துபாய் விமானப் பயணம் டிசம்பர் வரை ரத்து: SIA
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA) துபாய் – சிங்கப்பூர் இருவழி விமானப் பயணத்தை டிசம்பர் முதலாம் தேதி வரை ரத்து செய்துள்ளது. மத்திய கிழக்கில் அரசியல் பதற்றம் நீடிப்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அது கூறியது. சிங்கப்பூரிலிருந்து துபாய் செல்லும் SQ494, துபாயிலிருந்து சிங்கப்பூர் வரும் SQ495 ஆகிய இரு விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமை தொடர்ந்து மாறுவதால் நிறுவனத்தின் மற்ற விமானச் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்று அது சொன்னது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பயன்படுத்தப்படாத விமானச் சீட்டுக்கான…
-
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – ஜப்பானின் பதக்க வேட்டை!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒக்டோபர் 1ஆம் திகதி நிலவரப்படி, போட்டியை நடத்தும் ஜப்பான் பதக்கப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் இதுவரை 50 தங்கம், 77 வெள்ளி, 73 வெண்கலம் என மொத்தம் 200 பதக்கங்களை வென்றுள்ளது. முன்னிலையில் உள்ள சீனா 151 தங்கம் உட்பட 277 பதக்கங்களுடன் உள்ளது. ஜப்பானின் 50 தங்கப் பதக்கங்கள் பல்வேறு விளையாட்டுகளில் கிடைத்துள்ளன. மேலும், சொந்த மண்ணில் நடைபெறும் இந்தப் போட்டியில் தனது மொத்த பதக்க எண்ணிக்கையை…
-
200 ஆண்டுகளில் முதல்முறை.. மரண தண்டனை எதிர்கொண்ட முதல் பெண்!
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், கடைசி நேரத்தில் அதிலிருந்து உயிர் தப்பியுள்ளார். இந்த நிகழ்வு அமெரிக்காவைத் தவிர்த்து உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்ற எதிர்கொண்ட முதல் பெண்மணி க்ரிஸ்டா பைக் ஆவார். 1995-ஆம் ஆண்டு டென்னசியின் நாக்ஸ்வில்லில் அமைந்திருந்த ‘ஜோப் கார்ப்ஸ்’ பயிற்சி மையத்தில், க்ரிஸ்டா பைக்வுக்கு 18 வயதாக இருந்தபோது, அவர்…
-
டிரம்ப்பின் வார்த்தையால் வெடித்த சிக்கல்: சிறிய நாட்டுக்கு அதிர்ஷ்டம்|போட்டி போடும் பெருநிறுவனங்கள்!
தற்போதைய காலகட்டத்தில் Artificial inteligence என அழைக்கப்படும் AI துறை கொடிகட்டி பறந்துவருகிறது. கூகிள், மைக்ரோசாப்ட், டெஸ்லா என உலகின் பெருநிறுவனங்கள் அனைத்தும் இந்த துறையில் பல்வேறு கோடிகளை முதலீடு செய்துள்ளன. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் Artificial inteligence என்ற வார்த்தை போலியாக தோன்றுவதாகவும், அதற்குப் பதிலாக இனி Super Intelligence என பயன்படுத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்று கூறினார். அதோடு அமெரிக்க அரசு தனது அதிகாரப்பூர்வ அரசு அறிக்கைகளில் Artificial Intelligence…
-
பெரும் ஆபத்தில் ஐரோப்பா : சுவிட்சர்லாந்தில் தொடங்கிய அழிவு.. எச்சரிக்கை விடுத்த ஆய்வாளர்கள்!
ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அதிக எண்ணிக்கையிலான பனிப்பாறைகளைக் கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து திகழ்ந்து வருகிறது. உலகம் முழுவதும் பனிப்பாறைகள் வேகமாக உருகிவரும் நிலையில், அந்த பேரழிவில் இருந்து ஆல்ப்ஸ் மலை தொடரும் தப்பவில்லை. சுவிஸ் பனிப்பாறை கண்காணிப்பு அமைப்பான GLAMOS மற்றும் சுவிஸ் அறிவியல் அகாடமி ஆகிய அமைப்புகள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறைகள் உருகுவது முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சுவிட்சர்லாந்தில் மட்டும் இந்த ஆண்டு…
-
21 செ.மீ உயரமே கொண்ட ‘கமாண்டோ’ : மெக்சிகோ பாதுகாப்புப் படையில் இணைந்த குட்டி நாய்க்கு குவியும் பாராட்டு!
மெக்சிகோவின் தேசிய பாதுகாப்புப் படையில் 21 சென்டிமீட்டர் மட்டுமே உயரம் கொண்ட சிறிய ரக ‘சிஹுவாஹுவா’ (Chihuahua) நாய் ஒன்று அதிகாரப்பூர்வமாக பணியில் இணைக்கப்பட்டுள்ளது. ‘கமாண்டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நாய், பேரிடர் காலங்களில் இடிபாடுகளுக்குள் சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது. பொதுவாக பாதுகாப்புப் படைகளின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ராடோர் போன்ற பெரிய ரக நாய்களே பயன்படுத்தப்படுகின்றன. எனினும், வழக்கத்திற்கு மாறாக மிகச் சிறிய உருவம் கொண்ட சிஹுவாஹுவா…
-
அமெரிக்க ‘X2’ ரோலர் கோஸ்டர் சவாரி நிரந்தரமாக மூடல்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ‘Six Flags Magic Mountain’ கேளிக்கை பூங்காவின் புகழ்பெற்ற ‘X2’ ரோலர் கோஸ்டர் சவாரியை நிரந்தரமாக மூடுவதற்கு பூங்கா நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சவாரியில் பயணித்த 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 400க்கும் மேற்பட்டோர் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகப் புகாரளித்துள்ளதாகவும், சிலருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே,…