அமெரிக்க ‘X2’ ரோலர் கோஸ்டர் சவாரி நிரந்தரமாக மூடல்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ‘Six Flags Magic Mountain’ கேளிக்கை பூங்காவின் புகழ்பெற்ற ‘X2’ ரோலர் கோஸ்டர் சவாரியை நிரந்தரமாக மூடுவதற்கு பூங்கா நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சவாரியில் பயணித்த 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 400க்கும் மேற்பட்டோர் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகப் புகாரளித்துள்ளதாகவும், சிலருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, 2022இல் இந்தச் சவாரியில் பயணித்த பின் உயிரிழந்த 22 வயதான கிறிஸ்டோபர் ஹாவ்லியின் (Christopher Hawley) குடும்ப வழக்கறிஞர், சவாரியை மூடுவது மட்டுமே போதுமானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இந்தச் சவாரி, பல பாதுகாப்புப் பரிசோதனைகளில் தேர்ச்சியடைந்திருந்ததாக நிர்வாகம் கூறியுள்ளது.

இருப்பினும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, இதனை நிரந்தரமாக அகற்றத் தீர்மானித்துள்ளதாக பூங்காவின் தலைவர் பிரையன் ஓர்டிங் (Brian Oerding) தெரிவித்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *