Category: உலக செய்திகள்
-
வெள்ளை மாளிகையை பார்வையிட்ட சீன ஜனாதிபதி
அமெரிக்காவில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின் இரண்டாம் நாளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரை சந்தித்துப் பேசியதுடன் வெள்ளை மாளிகையையும் பார்வையிட்டனர். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை ஏற்படுத்தும் விவகாரங்களை அவர்கள் ஓரங்கட்டியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான், தைவான், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வர்த்தகம் போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இரு வல்லரசுகளும் பரஸ்பர உரையாடலை வலுப்படுத்த முற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று…
-
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் அரசுமுறை விருந்துபசாரம்
அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (24) இரவு வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் வழங்கிய வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ஷி ஜின்பிங் நன்றி தெரிவித்துள்ளார். சீன மக்கள் தற்போது பாரம்பரிய, மத்திய இலையுதிர் விழாவைக் கொண்டாடி வரும் நிலையில், குடும்பங்கள் ஒன்றுகூடும் இந்தத் திருநாளை முன்னிட்டு…
-
அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் தத்தளித்த 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள், கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு
அவுஸ்திரேலியாவின் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் தத்தளித்த 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை பல்வேறு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த கடற்றொழிலாளர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. KM Garuda Jaya VI என்ற இந்தோனேசிய மீன்பிடி இழுவைப் படகு, கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் தேடல் மற்றும்…
-
காசாவிற்குள் முழுமையான நிவாரணத்தை வழங்கவும் மேற்குக் கரை குடியேற்றங்களை நிறுத்தவும் பிரான்ஸ் வலியுறுத்தல்!
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது போர்நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதாகக் குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் பாஸ்கல் கொன்ஃபாப்ரூ (Pascal Confavreux), காசாவிற்குள் மனிதநேய உதவிகள் முழுமையாக அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், மேற்குக் கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்ற திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சட்டவிரோத மேற்குக் கரை குடியேற்றப் பகுதிகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய ஐக்கிய இராச்சியம், கனடா உள்ளிட்ட 9 நாடுகளுடன் இணைந்து பிரான்ஸ்…
-
ஈரானுடன் உடன்பாட்டுக்கு வரும் அமெரிக்கா
தெஹ்ரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும், வொஷிங்டன் ஈரான் மீதான தனது பொருளாதார தடையை நீக்குவதையும் உள்ளடக்கிய, போரில் இருந்து படிப்படியாக வெளியேறும் ஒரு வழியை நியூயார்க்கில் உள்ள அமெரிக்க மற்றும் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் ஆராய்ந்து வருவதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக நீடித்துவரும் அமெரிக்க – ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில், இந்த நீர்வழிப்பாதை ஒரு முக்கிய பேரம்பேசும் கருவியாக மாறியுள்ளது. தனது பொருளாதாரத்தை நெரித்துவரும் அமெரிக்க முற்றுகையில் இருந்து நிவாரணம்…
-
வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்துள்ளார். வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த சீன ஜனாதிபதியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உற்சாகமான முறையில் வரவேற்றார். இந்த அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தால் இந்தியப் பெருங்கடலுக்கும் போர் பரவும் என ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தனக்கு எதிராக மீண்டும் ஏதேனும் தாக்குதல்களைத் தொடுத்தால், மத்திய கிழக்கு மோதலை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மூத்த ஆலோசகரான மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபவி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானுடனான மோதல் ஏற்கனவே பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டி செங்கடல் வரை பரவியுள்ளதாக சஃபவி சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலத்தில் மேலும் போர்…
-
ஐநா பொதுச் சபையில் கடுமையாகப் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் : வெளிநடப்புச் செய்த பிரதிநிதிகளை ‘ஒழுக்கமற்றவர்கள்’ என சாடல்!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற ஆரம்பித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராகப் பல நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்த நிலையில், அவர் தனது உரையில் நிவ்யோர்க் நகர முதல்வர் சோஹ்ரன் மம்தானி உள்ளிட்டவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் மேடையேறியபோது பல நாடுகளின் பிரதிநிதிகள் சபையிலிருந்து வெளியேறினர். அவர்களைப் பார்த்த நெதன்யாகு, “இந்த மண்டபத்தை விட்டு இன்னும் வெளியேறாத வேறு ஏதேனும் ஒழுக்கமற்றவர்கள் இருந்தால், தயவுசெய்து இப்போது வெளியேறுங்கள்” எனப் தெரிவித்ததுடன்,…
-
அமெரிக்கா மற்றும் கனடாவில் 250 கடைகளை மூடும் Starbucks
உலகப் புகழ்பெற்ற காபி சங்கிலியான ஸ்டார்பக்ஸ் (Starbucks), அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 250 கடைகளை இந்த வாரம் மூடவுள்ளதாக அறிவித்துள்ளது. இவை பெரும்பாலும் குறைந்த விற்பனை மற்றும் நஷ்டத்தில் இயங்கும் கடைகள் ஆகும். மொத்தம் 18,000 கடைகளில் சுமார் 1 சதவீதம் கடைகள் மூடப்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரிலும் சில கடைகள் மூடப்பட்டிருந்தன. நிறுவனம், விற்பனை அதிகம் உள்ள பகுதிகளில் புதிய கடைகளைத் திறக்கவும், பழைய கடைகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஸ்டார்பக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி…
-
முதல் விண்வெளி படையை உருவாக்கிய ராயல் விமான படை
பிரித்தானியா தனது செயற்கைக்கோள்களை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) தனது முதல் விண்வெளி படையை உருவாக்கியுள்ளது. “No. III Space Effects Squadron” எனப்படும் இந்த புதிய பிரிவு, செயற்கைக்கோள்களை குறிவைக்கும் எதிரி நடவடிக்கைகளை தடுக்க, பாதிக்க, மறுக்கும் திறனுடன் செயல்படும். இந்த படை, பிரித்தானியாவின் கப்பல்கள், மொபைல் தொலைபேசிகள் மற்றும் ஏவுகணை எச்சரிக்கை அமைப்புகளை வழிநடத்தும் முக்கிய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும். பிரித்தானிய அரசு சமீபத்தில் வெளியிட்ட “Space Strategy” திட்டத்தின்…