Category: உலக செய்திகள்
-
லண்டன் சுறாக்களுக்கு நடுவே காதலன் செய்த வேலை.
காதலியிடம் லவ் புரொபோஸ் செய்ய வேண்டுமானால், இதற்காகவே ஆண்கள் பலரும் அழகான இடத்தைத் தேடுவார்கள்.. சிலர் பீச், மலைப்பகுதி, ஸ்டார் ஓட்டல் என வித்தியாசமான இடங்களைத் தேர்வு செய்து, தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள்.. ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வால்ஷ் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருக்கிறார். காதலிக்கு மிகவும் பிடித்தது சுறாக்கள் என்றால், சுறாக்களுக்கு நடுவிலேயே தன்னுடைய விருப்பத்தை கேட்ட நினைத்துள்ளார்.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையர், வென்டோவர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் வால்ஷ். இவருடைய…
-
ஆழிப்பேரலையில் காணாமல் போன மனைவியை 15 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவர்!
ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை பேரழிவின்போது காணாமல் போன தனது மனைவியை, அவரது கணவர் கடந்த பல ஆண்டுகளாக கடலுக்குள் டைவிங் செய்து தேடி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யுகோ டகாமாட்சு என்ற தனது மனைவியை ஆழிப்பேரலைக்குப் பின்னர் தேடிய அவரது கணவர் யாசுவோ டகாமாட்சு, முதல் இரண்டு ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்டுள்ளார். அப்போது மனைவியின் கைத்தொலைபேசி மட்டுமே கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, மனைவியைத் தேடும் நோக்கில் 2013ஆம்…
-
தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ICU-வில் திருமணம் செய்த மகள்!
அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவரது மகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. டோனா என்ற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தனது மகள் கேமி கம்மின்ஸ் திருமணம் செய்துகொள்வதைப் பார்க்க வேண்டும் என்பது டோனாவின் கடைசி ஆசையாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, டோனாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மருத்துவமனை நிர்வாகம் முன்வந்து ICU-விலேயே திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துள்ளது.…
-
ட்ரம்ப் தடை விதித்த 3 ஊடக நிறுவனங்களுக்கான வெள்ளை மாளிகை அணுகலை மீண்டும் வழங்க உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்திருந்த CNN, MS NOW மற்றும் Politico ஆகிய மூன்று ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கு வெள்ளை மாளிகைக்கான அணுகலை மீண்டும் வழங்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்திற்கான மாவட்ட நீதிபதி திமொத்தி கெல்லி பிறப்பித்துள்ள தற்காலிக உத்தரவின்படி, குறித்த மூன்று ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கான ஊடக அனுமதிச்சீட்டுகளை உடனடியாக மீள வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
பிராந்திய அமைதி குறித்து பாகிஸ்தான்,ஈரான் இடையில் பேச்சு
ஐ.நா.பொதுச் சபையின் கூட்டங்களுக்கு இடையே பிராந்திய அமைதி குறித்து பாகிஸ்தான் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் விவாதித்தனர். பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக்தார், ஐ.நா.பொதுச் சபையின் கூட்டங்களுக்கு இடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை சந்தித்தார். எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இரு அதிகாரிகளும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததாகவும், பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில்…
-
ரஷ்யா மீது ஜெலன்ஸ்கி முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு
ரஷ்யா–உக்ரைன் போரில் 47 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-வது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய ஜெலன்ஸ்கி, இந்தியா, நேபாளம், கானா, தஜிகிஸ்தான், ஏமன், கென்யா, ஜிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், சூடான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 47 நாடுகளின் குடிமக்கள் ரஷ்யாவின் போரில் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார். வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் “ஏமாற்று முறைகள் மற்றும் தந்திரங்கள்” மூலம் ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலர் போர்க்களத்தில் உயிரிழப்பதாகவும்…
-
உலக நாடுகளுக்கு சீனா கொடுத்த அதிர்ச்சி!
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கம்யூனிஸ்ட் நாடான சோவியத் மற்றும் அமெரிக்கா ஆகியவை உலகின் வல்லரசுகளாக உருவெடுத்தன. சுமார் 40 ஆண்டுகள் இந்த இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்த பனிப்போர் 1990களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது. இதனால் உலகின் ஒரே வல்லரசாக அமெரிக்கா திகழ்ந்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மற்றொரு வல்லரசாக சோவியத்தின் இடத்தில் மற்றொரு கம்யூனிச நாடான சீனா உருவாகியுள்ளது. சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக…
-
வரலாற்றில் இல்லாத அளவில் வைரத்தின் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
உலகின் மதிப்பு மிக்க பொருள்களில் ஒன்றாக வைரங்கள் திகழ்ந்து வருகிறது. உலக அளவில் மிக குறைந்த அளவில், சில இடங்களில் மட்டுமே இந்த வைரங்கள் கிடைத்து வந்ததால் அதன் விலை சாமானியர்களுக்கு எட்டாத வகையிலேயே இருந்து வந்தது. ஆனால் 1950-களில் அமெரிக்காவில் செயற்கை வைரங்கள் உருவாக்கப்பட்டது ஒரு புரட்சியாகவே கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரங்கள் சந்தையில் விற்பனைக்கும் கொண்டுவரப்பட்டது. தொடக்கத்தில் செயற்கை வைரங்களும் இயற்கை வைரங்களுக்கு இணையான விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால்…
-
சீன அதிபரை புகழ்ந்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?
சீன அதிபர் XI ஜின்பிங்கை, டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், ’சிறந்த தலைவர்’ எனப் பாராட்டியுள்ளார். சீன அரசு தொலைக்காட்சியான CCTV-க்கு அளித்த பேட்டியில் மஸ்க் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். Xi ஜின்பிங்கின் தலைமையின் கீழ் சீனா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக மஸ்க் கூறினார். சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், அந்நாட்டு மக்களின் சராசரி வாழ்க்கையில் தரமும் செழிப்பும் அதிகரித்திருப்பது தெரிகிறது எனத் தெரிவித்தார்.…
-
ஷார்ஜாவில் கொடூரம்.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட இந்தியரின் உடல்.. மனைவி, மகன் மாயம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கொலைக்குப் பிறகு அவரது மனைவியும், மகனும் ஷார்ஜாவை விட்டு வெளியேறி இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபூரைச் சேர்ந்தவர் ஆல்வின் பிரகாஷ் குந்தர் (38). இவர் கடந்த 14 ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா விமான நிலையத்தில்…