Category: உலக செய்திகள்
-
7ஆவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ‘முடிவுக்கு வந்துவிட்டது’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது நாளாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் படைகள் ஈரானின் ‘கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை’ தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை…
-
புற்றுநோய்க்கு எதிராக தன்னையே ஆய்வகமாக மாற்றிய விஞ்ஞானி!
புற்றுநோய்க்கு எதிராகத் தன்னையே ஒரு நடமாடும் ஆய்வகமாக மாற்றிக்கொண்டு, மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லைப் பதித்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோல்யர் (Professor Richard Scolyer) ஆவார். உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோல்யர், தனது உயிருக்கு ஆபத்தான மூளைக் கட்டிக்கு (Glioblastoma) பரிசோதனை நோய் எதிர்ப்பு சிகிச்சையை (Experimental Immunotherapy) முதலில் தன் உடலிலேயே சோதித்த விஞ்ஞானியாக அறியப்பட்டவர். அவர் தனது 59-வது வயதில் காலமானார். 2023-ஆம் ஆண்டு, குணப்படுத்த…
-
நியூசிலாந்தில் உள்நாட்டுப் பறவைக்கு H5N1 பறவைக் காய்ச்சல்
நியூசிலாந்தில் முதன்முறையாக அந்தநாட்டின் பூர்வீகப் பறவை இனத்தைச் சேர்ந்த ‘சுவாம்ப் ஹாரியர்’ (Swamp Harrier) வகை கழுகுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வட தீவின் வைராபா பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கழுகுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அந்தநாட்டின் உயிரியல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ ஹொகார்ட் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் கடந்த புதன்கிழமை அன்று, வெலிங்டன் அருகே கண்டெடுக்கப்பட்ட ‘ப்ரவுன் ஸ்குவா’ (Brown Skua) எனும் கடல் பறவைக்கு முதன்முதலில் இந்த நோய் பாதிப்பு உறுதி…
-
ஜப்பானில் குழந்தைகள் பெறுவதில் ஆர்வம் காட்டாத மக்கள்
ஜப்பானில் பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் இளம் தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. 2026-ஆம் ஆண்டின் புதிய புள்ளிவிவரங்களின்படி, ஜப்பானில் 30 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களுக்குக் குழந்தைகள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அந்நாட்டில் பிறப்பு விகிதம் மிக வேகமாகச் சரிந்து, மக்கள் தொகை வீழ்ச்சி ஒரு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. குறைந்த ஊதியம், அதிகமான வாடகை, குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் ஜப்பான் நாட்டு இளைஞர்களிடம் திருமணம் செய்யும்…
-
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கடும் எச்சரிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, காட்டின் 10 சதவிகித பரப்பை அழித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காட்டில் தீவைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதியான மேக்ரான் எச்சரித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ 35,000 ஹெக்டேர் சதவிகித காட்டை அழித்து விட்ட நிலையில், வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ தீயை வைத்த பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர்…
-
பிரிட்டன் வானை மூடும் சகாரா புழுதி; ஆய்வில் எச்சரிக்கை
ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பும் பிரம்மாண்ட புழுதிப் புயல் (Saharan Dust Plume) தீவிரமடைந்து, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய வான்பகுதியை மூடி வருவதாகப் புதிய அறிவியல் ஆய்வுகள் எச்சரித்துள்ளன. சுவீடனின் Lund University மற்றும் இங்கிலாந்தின் Manchester University இணைந்து நடத்திய புதிய ஆய்வின்மூலம் இத்தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பிரிட்டனின் வான்பகுதி முற்றிலும் மங்கலான ஆரஞ்சு நிறமாக மாறுவதுடன், அங்கு ‘இரத்த மழை’ (Blood Rain) எனப்படும் செம்பழுப்பு நிற மழை பொழிவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக…
-
கடும் வெப்பம் காரணமாக ஐரோப்பாவில் சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடு
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் வழக்கத்திற்கு மாறான கடும் வெப்ப அலை காரணமாக, சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு (Air Conditioners) சந்தையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, சீனாவின் ‘மீடியா’ (Midea) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ‘போர்ட்டா-ஸ்பிலிட்’ (PortaSplit) வகை குளிரூட்டிகளுக்கு ஐரோப்பிய நுகர்வோர் மத்தியில் மிக அதிக தேவை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பல முக்கிய நகரங்களில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோடை வெப்பநிலை 40 பாகை செல்சியஸைத் தாண்டிப் பதிவாகியுள்ளது.ஐரோப்பிய நகரங்களில் உள்ள பல பாரம்பரிய, பழமையான மற்றும்…
-
சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள பதாகை
ஈரானில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏற்கனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மொஜ்தபா கமேனி அறிவித்திருந்தார். மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும் ட்ரம்ப்புக்கு எதிரான…
-

லெபனானில் ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடி விபத்து : பலர் பலி
லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் இராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 6 இராணுவ நிபுணர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 14 மாதங்களாக இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வந்த…
-

அமெரிக்கா உடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா!
அமெரிக்கா உடனான உறவில் பதற்றம் நிலவும் நேரத்தில், அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே விதித்து கொண்ட சுயமான கட்டுப்பாடுகளுக்கு இனி நாங்கள் கட்டுப்பட மாட்டோம். அமெரிக்காவுக்கு எதிராக, குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்கிறோம். இவ்வாறு அந்த…