Category: உலக செய்திகள்
-
ஐபோன் விலையை உயர்த்தியது அப்பிள் நிறுவனம்
ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலையை அப்பிள் நிறுவனம் சுமார் 11.3 சதவீதத்தால் உயர்த்தியுள்ளது. உலகளாவிய அளவில் நிலவி வரும் சிப் (Chip) பற்றாக்குறையே இந்த விலையேற்றத்திற்கான முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விலை உயர்வு, ஜப்பானைத் தொடர்ந்து விரைவில் பிற நாடுகளிலும் அமுல்படுத்தப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
-
3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணியுடன் ஹாலிவுட் நடிகை ஜெண்டயா
ஹாலிவுட் நடிகை ஜெண்டயா (The Odyssey) லண்டனில் நடைபெற்ற தனது ‘தி ஒடிஸி’ திரைப்பட விழாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான ஈரானிய தங்கக் காதணிகளை அணிந்து பங்கேற்றது தற்போது உலகளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலப் பொருட்களை, பிரபலங்கள் தங்களின் ஆடை விபரங்களுக்காக பயன்படுத்துவது கலாச்சாரச் சுரண்டல் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தச் சம்பவம், கடந்த காலங்களில் கிம் கர்தாஷியன் புகழ்பெற்ற…
-
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது ஈரான்!
அமெரிக்கா தனது கடப்பாடுகளை மீறியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தான் மேற்கொண்டிருந்த அனைத்து கடப்பாடுகளையும் இடைநிறுத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் வெளியுறவு பிரதி அமைச்சர் காசெம் கரிபாபாடி இதனை அறிவித்துள்ளதாக ஈரானின் பார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் அமெரிக்கா தனது அனைத்து கடப்பாடுகளையும் மீறி அவற்றைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதாக காசெம் கரிபாபாடி குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாகவே, இந்த ஒப்பந்தத்தின்…
-
வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு
வியட்நாமின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லாய் சாவ் (Lai Chau) மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 4 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, முவோங் தான் (Muong Than) மலைக் கிராமத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். மழையுடனான வானிலைக்கு மத்தியில் காணாமல் போன 4 பேரைத்…
-
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, குவைத்தின் உத்தியோகபூர்வ விமானச் சேவையான ‘குவைத் எயார்வேஸ்’ தங்களது பெரும்பாலான விமானப் பயணங்களின் நேரங்களை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பயணிகள் தங்களது விமானப் பயணங்களின் புதிய நேரங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அந்த விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்
பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Labour Party) புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிரிட்டனின் அடுத்த பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்க உள்ளார். பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் ஜூலை 17, வெள்ளிக்கிழமை அன்று முறைப்படி அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் வரவிருக்கும் திங்கட்கிழமை (ஜூலை 20) பிரிட்டனின் புதிய பிரதமராக முறைப்படி பதவியேற்கவுள்ளார்.…
-
2026 FIFA இறுதிப்போட்டியில் பங்கேற்கிறார் அமரிக்க அதிபர்: வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில்(MetLife Stadium) நடைபெறும் 2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேரில் பங்கேற்கிறார். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் கியானி இன்ஃபான்டினோவுடன் இணைந்து, அவர் உலகக் கோப்பை கோப்பையை வெற்றிபெறும் அணியிடம் வழங்குவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட், அமெரிக்க வரலாற்றிலேயே மிக வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான உலகக் கோப்பைத் தொடரின் நிறைவாக அதிபர் டிரம்ப்…
-
கனடா மீது புதிய வரிகளை விதிப்பதாக டிரம்ப் மிரட்டல்
கனடாவில் (Canada) பரவும் காட்டு தீ காரணமாக அமெரிக்காவின் சில நகரங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். நச்சு புகை பரவலை தடுக்க தவறிய கனடா மீது கூடுதல் வரி விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிட்டுள்ள டிரம்ப், கனடா தனது காடுகளையும் அவற்றில் உள்ள புதர்ச் செடிகளையும் முறையாகப் பராமரிக்காததால், அமெரிக்காவுக்குள் அசுத்தமான, மாசுபட்ட மற்றும் ஆரோக்கியத்திற்குத்…
-
7ஆவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ‘முடிவுக்கு வந்துவிட்டது’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது நாளாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் படைகள் ஈரானின் ‘கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை’ தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை…
-
புற்றுநோய்க்கு எதிராக தன்னையே ஆய்வகமாக மாற்றிய விஞ்ஞானி!
புற்றுநோய்க்கு எதிராகத் தன்னையே ஒரு நடமாடும் ஆய்வகமாக மாற்றிக்கொண்டு, மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லைப் பதித்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோல்யர் (Professor Richard Scolyer) ஆவார். உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோல்யர், தனது உயிருக்கு ஆபத்தான மூளைக் கட்டிக்கு (Glioblastoma) பரிசோதனை நோய் எதிர்ப்பு சிகிச்சையை (Experimental Immunotherapy) முதலில் தன் உடலிலேயே சோதித்த விஞ்ஞானியாக அறியப்பட்டவர். அவர் தனது 59-வது வயதில் காலமானார். 2023-ஆம் ஆண்டு, குணப்படுத்த…