Category: இலங்கை செய்திகள்
-
அர்ச்சுனாவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
நாடாளுமன்றத்தை விளையாட்டுத்தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வின் போது நிலையியல் கட்டளைகள் குறித்து கேள்வி எழுப்ப முற்பட்ட போது, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்புத் தெரிவித்தார். நிலையியல் கட்டளைகளின்படி எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தகாத வார்த்தைகளால் குறிப்பிட முடியாது என சுட்டிக்காட்டிய…
-
யாழ் தனியார் ஆய்வுகூடத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்
முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட அதிகக் கட்டணம் வசூலித்ததற்காக, யாழ்ப்பாணம் பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 30 இலட்சம் ரூபாய் (ரூ. 3 மில்லியன்) அபராதம் விதித்துள்ளது. தனியார் ஆய்வகங்களில் ஒரு முழு இரத்தப் பரிசோதனைக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாய் ஆகும். ஆனால், குறித்த மருத்துவமனை இப்பரிசோதனைக்கு 550 ரூபாய் வீதம் அறவிட்டுள்ளது. கடந்த ஜூலை 13…
-
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு கோட்டா வருகை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (ஜூலை 23, 2026) கொழும்பில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், தன்னை எக்காரணம் கொண்டும் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி அவர் இந்த ரிட் (Writ) மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காகவே அவர் இன்று நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.…
-
கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்கள் இடையே மோதல்
கொழும்பு துறைமுக நகரில் (Port city) அதிகாலை வேளையில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மற்றொரு சீன நாட்டவரை எதிர்தரப்பினர் பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவ இடத்திற்கு அருகில் சோதனைக்குட்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் தகவல் தொடர்பு கருவி ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இது குறித்து கொழும்பு துறைமுக காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மானிப்பாய் – சுதுமலை வீதியில் விபத்து : பெண்ணொருவர் பலி
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் – சுதுமலை வீதியில் நேற்று பகல் வேளையில், சுதுமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதே திசையில் சென்ற மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த சுதுமலை, தாவடி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண், சுன்னாகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பணியில் இணைந்து சில நாட்களே ஆன நிலையில் கனவுகளுடன் எரிந்துபோன இளம் மொட்டுகள்!
ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (21) முற்பகல் திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலங்கள் மீதான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதால், அவை ஹோமாகம ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டு இவ்வாறு மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என…
-
எதிர்க்கட்சி முற்றிலும் அகற்றப்படும் என கூறுவது ஜனநாயக விரோத கூற்று – நாமல் ராஜபக்ச
எதிர்க்கட்சியை அகற்றிவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது பெரும் தவறான எண்ணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சியை முற்றிலும் அகற்றிவிட்டதாகவும், மீதமுள்ளவற்றையும் விரைவில் அகற்றிவிடுவோம் என்றும் கூறுவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கூற்று என அவர் சாடினார். அத்துடன் நீதித்துறையின் நியமனங்களை அல்லது நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் அரசாங்கம் தனது குறுகிய…
-
அனுமான் சிலையை காட்டி கோடிகளை சுருட்ட முயன்ற கும்பல் கைது
அனுமான் சிலையை காட்டி ரூ. 2,500 கோடி மோசடி செய்ய முயன்ற கும்பலின் பிரதான சந்தேகநபர் கொழும்பு பகுதியில் வைத்துப் பணத்தைப் பறிக்க முயன்றபோது காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். போர்க் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வழிபடப்பட்டு, பின்னர் 2016-ல் ஜா-எல – மெல்வத்த பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு இரகசியமாகப் புதைக்கப்பட்ட ‘தங்க முலாம் பூசப்பட்ட தடியுடன் கூடிய அனுமான் சிலை’ என இந்தக் கும்பல் முகப்புத்தகம் மூலம் பொய்ப் பிரசாரம் செய்துள்ளது. நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள அந்தச் சிலையை,…
-
தேசபந்து தென்னகோன் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
2022ஆம் ஆண்டு ‘அரகலய’ மக்கள் போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர் ஒருவரை சட்டவிரோதமாகக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், முன்னாள் பொலிஸ் மா அதிபரும் ,அப்போதைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான , தேசபந்து தென்னகோன் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என்று இலங்கை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது. 2022 போராட்டக் காலத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார என்பவர், தனக்கு நடந்த சட்டவிரோத…
-
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,100 ஐக் கடந்தது!
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், நேற்று (21) வரை பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 78,125 ஆகப் உயர்ந்துள்ளது. இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக பாதிப்புள்ள மாவட்டங்கள்: கம்பஹா மாவட்டம்: 16,478 நோயாளர்கள் கொழும்பு மாவட்டம்: 15,540 நோயாளர்கள் மாதாந்த அதிகரிப்பு: ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஜூலை மாதத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூலை மாதம் (இதுவரை): 22,749 பேர் ஜூன் மாதம்: 21,535 பேர் அதி தீவிரமாக டெங்கு…