Category: இலங்கை செய்திகள்

  • இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    நாட்டில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (25) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 80,905 ஆக அதிகரித்துள்ளது. அதன்படிஇ ஜூலை மாதத்தில் நேற்று (24) வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,530 ஆகப் பதிவாகியுள்ளது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும், நுளம்புகள் பெருகக்கூடிய…

  • நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 116 மேலதிக வாக்குகளால் தோல்வி

    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், 116 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இன்று முற்பகல் 11.30 முதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 36 வாக்குகளும், எதிராக…

  • ஜப்பானின் புதிய பேருந்துகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன

    இலங்கையின் பொதுப்போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஏழு தாழ்தளப் பேருந்துகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த நன்கொடைப் பேருந்துகளை ஏற்றுக்கொள்வதற்கு கடந்த மே மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்து, அவை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்துத் துறைக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஜப்பானின் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றப் பிரதி அமைச்சர் ஆகியோருக்கு இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற கலந்துரையாடலின் பயனாகவே…

  • பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

    முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றபோது, பிள்ளையான் தொலைக்காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். T-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஐந்து நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால்…

  • அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை உத்தரவு

    யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதையடுத்து, அர்ச்சுனா இராமநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வகையில் பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சபையில் விவாதம்

    நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்க்கட்சியினரால் கடந்த 21ஆம் திகதி சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின்போது, கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நீதியமைச்சர் தனது பொறுப்பை…

  • கொழும்பு தெமட்டகொடயில் துப்பாக்கிச்சூடு

    கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இன்று மாலை (ஜூலை 23, 2026) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இலக்கு வைத்து, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு ஆயுததாரிகளால் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய…

  • விளையாட்டை மக்களின் கலாசாரமாக மாற்ற வேண்டும் – இலங்கை ஜனாதிபதி

    விளையாட்டை வெறும் போட்டிகளோடு சுருக்கிவிடாமல், மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்த ஒரு கலாசாரமாக மாற்ற வேண்டும் என இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று (ஜூலை 23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும்போது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றியடைவது மட்டுமன்றி, முழு சமூகத்திலும்…

  • எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நடத்தும் விசேட கலந்துரையாடல் ஆரம்பம்

    உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் யோசனை தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நடத்தும் விசேட கலந்துரையாடல் தற்போது ஆரம்பமாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் நடத்தப்படும் இக்கூட்டம், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்…

  • கறுப்பு ஜூலை – பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்கள் நினைவுகூரல்

    1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரம் நடைபெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (23) இணைந்து நினைவுகூர்ந்தனர். இதனையொட்டி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலை கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், இடம்பெயர்வுகள் மற்றும் இழப்புகள் இன்னும் ஆறாத வடுவாகவே நீடித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலத்தின் பாடங்களை…