Category: இலங்கை செய்திகள்

  • இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

    இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்தக் காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 61 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த சில நாட்களில் மட்டும் 26,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும் 47,670 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு…

  • அம்பாறையில் ‘குடு அசங்க’ கைது

    அம்பாறை மாவட்டம் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ‘குடு அசங்க’ என்றழைக்கப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று (26) அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியின் பிரதான போதைப்பொருள் வியாபாரி ஏற்கனவே கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘குடு அசங்க’ இரகசியமாக போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட…

  • உபாலி தர்மதாச காலமானார்

    ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான உபாலி தர்மதாச காலமானார். அவர் 1996 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின்  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிகரமாக பணியாற்றினார். அதற்கு முன்னர், 1993 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் பல முறை துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் மூவர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவிலும் அவர் அண்மையில் அங்கத்துவம்பெற்றிருந்தார். இலங்கையின் முன்னணி நிறுவனமான நவலோகா குழுமத்தின்  இணைப்…

  • வங்கக்கடலில் 36 நாட்கள் தவித்த இலங்கை கடற்றொழிலாளர் இருவர் உயிருடன் மீட்பு!

    வங்கக்கடலில் 36 நாட்களாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் இருவர் (தந்தை மற்றும் மகன்) பங்களாதேஷ் மீனவர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சோனாச்சர் (Sonarchar) அருகே வங்காள விரிகுடாவில் மிதந்து கொண்டிருந்த ஃபைபர் படகில் இருந்த இருவரையும், பங்களாதேஷ் கடற்றொழிலாளர்கள் குழு கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அவதானித்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக குறித்த இருவரையும் தங்களது படகுக்கு மாற்றிய அவர்கள், பங்களாதேஷின் மொஹேஷ்காலி கரைக்கு அழைத்து வந்தனர். மீட்கப்பட்டவர்கள் இலங்கையின் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த எஸ்.எச். சமிந்த…

  • ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா? ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட விளக்கம்!

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக விளக்கமளித்து, ஊடகங்களில் வெளியான செய்திகளை முற்றாக நிராகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில், ஜனாதிபதி தங்கியிருக்காத போதிலும், அவற்றில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாகத் தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின. இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  உத்தியோகபூர்வ செயல்பாட்டுத் தேவைகளுக்காகப் பாதுகாப்புப் பிரிவினர், ஜனாதிபதி ஊடகப் பிரிவின்…

  • பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    பெல்லன்வில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உணவக உரிமையாளர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. பெல்லன்வில பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

  • ஒன்றிணைந்து செயற்படும் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க முடிவு!

    தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரில் கலந்துரையாடுவதற்கு பிரதான தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த மாதத் தொடக்கத்தில், இணைந்து செயற்படத் தீர்மானித்த 6 கட்சிகளின் பங்கேற்பில், நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த கலந்தரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்…

  • சீன நாட்டவரின் மரணம் : விசாரணைக்கு உத்தரவு

    கொழும்பு போர்ட் சிட்டி துறைமுக நகரத்தில் இருந்து சீன நாட்டவர் ஒருவரைக் கடத்திச் சென்று, மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சீன நாட்டவர் இரண்டு பேரை 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சந்தேக நபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சீன நாட்டவரின் உடல், எஹெலியகொடவின் வனப்பகுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையின் கூற்றுப்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று சீன…

  • இலங்கை மகாவலி ஆற்றிலிருந்து சடலமொன்று மீட்பு

    கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கம்பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். நாவலப்பிட்டி சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை…

  • யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், யோஷித ராஜபக்ஷ உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும், விசாரணையை…