Category: இலங்கை செய்திகள்

  • டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000ஐ எட்டியது

    இந்த ஆண்டு நாடு முழுவதும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000ஐ நெருங்கிள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின்படி, நேற்றைய தினம் (27) வரை நாடு முழுவதும் மொத்தம் 82,838 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது தொற்று நோய்களின் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காட்டுகிறது என சுட்டிக்காட்டப்பட்டது.

  • உலகளவில் வேகமாக முன்னேறும் நாடுகளில் இலங்கைக்கு 4ஆம் இடம்!

    சர்வதேச நிதி நிறுவனம் (IIF) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, உலகளவில் வேகமாக முன்னேறி வரும் (Fastest-Improving) நாடுகளில் இலங்கை 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு 37.33 ஆக இருந்த இலங்கையின் முதலீட்டாளர் உறவுகளுக்கான மதிப்பெண், 2026 இல் 43.67 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் கடன் மேலாண்மை மற்றும் நிதி ஆளுகையில் ஏற்பட்டுள்ள வெளிப்படைத்தன்மையே இந்த 6.3 புள்ளிகள் உயர்வுக்குக் காரணமாகும். இப்பட்டியலில் வியட்நாம்…

  • சுரேஷ் சலேவின் ரிட் மனு நாளை மீண்டும் பரிசீலனை!

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைப் பொலிஸார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே முன்வைத்த ரிட் மனுவை நாளை (28) மீண்டும் அழைப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மனு இன்றைய தினம் (27) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த…

  • நாட்டின் பல பகுதிகளுக்கும் கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை!

    தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும், அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (27) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை, நாளை (28) காலை 11 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்…

  • நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீதிமன்றத்திற்கு

    நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள், ‘ஹீனட்டியன சுபுன்’ எனப்படும் சுபுன் மதுஷங்க, ஷேன் திலான் சில்வா, ‘களு மல்லி’ எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் ‘பபா’ எனப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தச் சந்தேகநபர்களை இன்றைய தினம் (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்!

    நாட்டில் தற்போது ‘எல் நினோ’ (El-Nino) காலநிலை நிலைமை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். இது ஒரு வலுவான எல் நினோ நிலைமையாக மாறுவதற்கு முன்னர் 63% ஆக இருந்த சாத்தியக்கூறு, உலகளாவிய கணிப்புகளின்படி தற்போது 80% ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இவ்வாறு மிகவும் தீவிரமான எல் நினோ நிலைமை ஏற்படுமாயின், எதிர்வரும் ஆண்டின் முதலாம் காலாண்டில் நாட்டில் வறட்சி நிலைமை ஏற்படக்கூடும் என்றும் அவர்…

  • காணி விடுவிப்பு கோரி பலாலியில் 6ஆவது வாரமாக போராட்டம்

    வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, பலாலி சந்தியில் இன்று (27) ஆறாவது வாரமாகவும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 36 ஆண்டுகளாக தமது காணிகளை இழந்த மக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை முன்னெடுத்து வருவதாகவும், தாங்கள் நீண்டகாலமாக நிலமும், வீடும் இன்றி வாழ்ந்து வருவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில்,…

  • ‘கண்ணிருந்தும் குருடர்களாக உள்ள சில அரசியல் தலைவர்கள் – பிரதியமைச்சர்

    மலையகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் ‘கண்ணிருந்தும் குருடர்களாக’ உள்ளதாகவும், வீடுகள் எங்கே கட்டப்பட்டுள்ளன என்று கேட்பவர்கள் நேரில் வந்து பார்வையிடுமாறும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். ஹட்டனில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில்  புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் இன்று (27) பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மலையக இளைஞர்களை தொழில் உலகிற்கு தயார்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் முழு நிதி ஒதுக்கீட்டில் இயங்கும்…

  • நாளை முதல் மழையுடன் கூடிய வானிலை தீவிரம்

    நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை பெய்யும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின்…

  • நுவரெலியாவில் சமாதான நீதவான்கள் மீது மோசடி குற்றச்சாட்டு

    நுவரெலியா பிரதான நகரில் சில சமாதான நீதவான்கள், சத்தியப் பிரமாணக் கடிதங்கள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வரும் பொதுமக்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமூகத்திற்கு இலவச சேவையாற்றும் நோக்கில் வழங்கப்படும் சமாதான நீதவான் பதவி அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியற்ற நபர்களுக்கு இந்தப் பதவி வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பிரமாணப்பத்திரங்கள், சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இலவசமாக அத்தாட்சிப்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவதற்காகவே நீதி அமைச்சினால் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும், கிராமிய…