Category: இலங்கை செய்திகள்
-
நாமல் ராஜபக்ஷ மீதான வழக்கு ஒத்திவைப்பு
பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்தது!
ஜனவரி மாத ஆரம்பம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதற்கமைய, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதேவேளை, ஜூலை 01 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 167,401 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவ்…
-
நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு!
இலங்கை: நேற்று காலை வேளையில் ஹுரிகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்நேவ – தம்புத்தேகம வீதியின் 30 ஆம் கல் தூண் அருகே உள்ள கிளை வீதியில் நாமல்கமுவ திசையை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் குறுக்கே பாய்ந்த நாயைக் காப்பாற்ற முயன்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மீகலேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கலாங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர்…
-
இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், டெங்கு நோய் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 17,779 ஆகும். இரண்டாவது அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 16,665 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அதிகளவான…
-
பாணந்துறை கடற்கரையில் நீல வண்ண ஜெல்லிமீன்கள்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் (Physalia – blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேசிய நீர்வள திணைக்களம் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. கடற்கரைப் பகுதியில் ஜெல்லிமீன்களின் வரத்து அதிகரித்துள்ளதாகப் பாணந்துறை நகராட்சி மன்றத்திடமிருந்து வந்த தகவலை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நிலைமையை நேரில் ஆய்வு செய்யவும், ஜெல்லிமீன் இனத்தை அடையாளம் காணவும், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை மதிப்பிடவும் தேசிய…
-
வெண்டிஸ் உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் ஜோன் கீல்ஸ்
இலங்கையின் முன்னணி வணிகக் குழுமங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings), சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவக பிராண்டான வெண்டிஸ் (Wendy’s) உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தனது நுகர்வோர் உணவுத் தயாரிப்புத் தொகுப்பை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது வெண்டிஸ் உணவகம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்படவுள்ளது. இலங்கையில் வேகமாக வளர்ந்து…
-
பாதாள உலகக் குற்றவாளி ரத்மலானே சைமா மலேசியாவில் கைது!
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘ரத்மலானே சைமா’ என்பவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டிலிருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை இயக்கிய முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என காவல்துறை தெரிவித்துள்ளது. இவரது போதைப்பொருள் வலைப்பின்னல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்ததாகவும், அதில் பெண்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி இந்த தீர்ப்பை வழங்கினார். கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் சுற்றுவட்டத்துக்கு அருகில், காவல்துறை ஜீப் ஒன்று தங்களை முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, தடுத்துவைத்தமை மற்றும் உடல்ரீதியான தீங்கு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்…
-
இலங்கையில் இன்று மழைப் பொழிவு சற்று அதிகரிக்கக்கூடும்
இன்று (28) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைப் பொழிவு சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறட்சியான வானிலையே காணப்படும். மத்திய மலைநாட்டின்…
-
அர்ச்சுனா எம்.பியின் வழக்கு ஒத்திவைப்பு!
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் அவருக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி மீண்டும் அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய பிடியாணை கடந்த ஜூலை 24ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் ஆஜராகத் தவறியதாக பொலிஸார்…