Category: இலங்கை செய்திகள்
-
இலங்கையில் காவல்துறையினர் உட்பட மூவருக்குக் கடூழிய சிறைத்தண்டனை
முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கும் பொதுமகன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பாகக் குறித்த மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையிலே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2008 ஆம் ஆண்டு தெஹிவளைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து பணத்தைக்…
-
இலங்கையின் மிகப்பெரிய இயேசுவின் திருஉருவச் சிலை திறந்து வைப்பு
சீதுவை பகுதியில் அமைந்துள்ள சுபுவன் அரண வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 60 அடி உயரமுடைய பிரம்மாண்ட இயேசுநாதரின் திருஉருவச் சிலை நேற்று (30) ஆசீர்வதிக்கப்பட்டு, பொதுமக்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மிகப்பெரிய இயேசுநாதர் திருஉருவச் சிலையாகக் கருதப்படும் இந்தச் சிலையின் திறப்பு விழாவில், மதகுருமார்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவ பக்தர்கள் கலந்துகொண்டனர். சீதுவை சுபுவன் அரண வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த 60 அடி உயரச் சிலை, கிறிஸ்தவ மக்களின் ஆன்மீக வழிபாட்டிற்கான புதிய…
-
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை விவகாரம் – நால்வருக்கு மீண்டும் விளக்கமறியல்
கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலிருந்து உடலியல் சிகிச்சை நிபுணர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நால்வரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று (30) நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கமைய, பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவி வழங்கியதாகக் கூறப்படும் இருவர் உள்ளிட்ட நால்வரும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நாரம்மல பகுதியைச்…
-
செம்மணி விவகாரத்துக்கு நீதி கோரி அரியாலையில் அமைதி பேரணி
செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் இன்று காலை அரியாலையில் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது அதிகாலை புனித யூதாதேயு தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து செம்மணி சிந்துபாத்தி மயானம் வரை அமைதி வழி பேரணியாக இடம்பெற்றது. இதன்போது ‘மனித மாண்பை மதிப்போம் உண்மையை நிலை நாட்டுவோம்’ ‘செம்மணிக்கு சர்வதேச நீதி வேண்டும்’ ‘உலகமே செம்மணியை மறந்து விடாதே!’ உள்ளிட்ட கோஷங்களை அடங்கிய பதாகைகளை…
-
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு ஜனவரியில் விசாரணைக்கு
தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, குறித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
இலங்கையில் விருந்துகளில் கலந்து கொள்ளும் இளைஞர் யுவதிகளுக்கு போதை மாத்திரை
கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறான நிகழ்வுகளின் போது போதை மாத்திரைகளை விநியோகிக்கும் இளம் கடத்தல்காரர் ஒருவர், 23,000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் தொகையுடன் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சொய்சாவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது 20 வயதுடைய இளைஞன்…
-
ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் வாக்குமூலம்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் பணிபுரிந்த போது, மர்மமான முறையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகமவைச் சேர்ந்த 16 வயதுடைய தமிழ் சிறுமியான ஆர். ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில் பல தரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முக்கிய வாக்குமூலங்கள் மற்றும் விசாரணைகளின் விபரங்கள் 1. பெற்றோரின் வாக்குமூலம் தமது மகள் வறுமை காரணமாகவே இடைத்தரகர் ஒருவர் மூலமாக கொழும்பிலுள்ள ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக அனுப்பி…
-
குடும்பத் தகராறால் மின்சாரக் கோபுரத்தில் ஏறிய நபருக்கு, நஷ்டஈடு செலுத்த உத்தரவு!
குடும்பத் தகராறு காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர், அதனால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் உயர் அழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்புக்குச் சொந்தமான கோபுரமொன்றில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தேவேந்திரமுனை, மாவறல மற்றும் தெனியாய…
-
நீதியமைச்சரை சந்தித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் நேற்று (29) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த ராஜீவ் அமரசூரிய, குறித்த திருத்தச் சட்டம் இந்தச் சமயத்தில் நிறைவேற்றப்படக் கூடாது என்ற சங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சரிடம் விளக்கியதாகத் தெரிவித்தார். நேற்று சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையை நீதி அமைச்சரிடம்…
-
நாமல் ராஜபக்ஷ மீதான வழக்கு ஒத்திவைப்பு
பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.