Category: இலங்கை செய்திகள்

  • ரத்மலானையில் துப்பாக்கிச்சூடு – காயமடைந்தவர் உயிரிழப்பு

    ரத்மலானை கந்தாவல வீதிப் பகுதியில் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • ராகம பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம்

    மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ராகம பொலிஸ் பிரிவில் உடனடியாக அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் குறித்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி – மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி – வடக்கு மற்றும் 181 ஜி – தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலும்,…

  • மஹர சிறைச்சாலை – கண்காணிப்புக்கு விமானப்படை ஹெலிக்கொப்டர், ட்ரோன்கள் களமிறக்கம்

    மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை கண்காணித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ஹெலிக்கொப்டர் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) களமிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள கட்டிடமொன்றில் இன்று (01) பிற்பகல் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார், பொலிஸ் விசேட…

  • பூஜித் ஜயசுந்தரவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை – அலி சப்ரி

    குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளதை மேற்கோள் காட்டி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் மேற்கண்டவாறு…

  • எந்தவொரு நபருக்கும் அநீதி இழைக்கவில்லை; இது எனது முன்பிறவியின் பயன்- தீர்ப்பின் பின்னர் பூஜித்

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு நீதிமன்றத்தில் கருத்து வெளியிடுவதற்கு நேற்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது அவர் ‘நான் நினைத்து எந்தவொரு காரியத்தையும் செய்யவில்லை. காவல்துறைக்கு இணைந்த நாளிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன். நான் பல அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவுடன் இணைந்துதான் பணியாற்றினேன். பொறுப்புகூற வேண்டிய சிலரை விடுவித்துள்ளேன். அந்த சந்தர்ப்பங்களின் நான் மிகுந்த வேதனைக்கு உள்ளானேன். இந்தச் சம்பவத்துக்கு பிறகு இன்றுவரை…

  • இலங்கை ஜனாதிபதியை அவமதிக்கும் பேஸ்புக் பதிவு: காவல்துறை அதிகாரி கைது

    ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதாகவும், சமூக ஊடகங்களில் அதுபோன்ற உள்ளடக்கங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர் எம்பிலிப்பிட்டியவில் உள்ள உதவி சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். சந்தேக நபர் இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப்…

  • சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற அமர்வின்…

  • உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் – ஹேமசிறிக்கும் மரணதண்டனை

    உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைத்தும் அதை தடுக்க தவறியமை, மேலும் தாக்குதலுக்கு மறைமுகமாக உதவி ஒத்தாசை புரிந்தமைக்காக 857 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு முன்னாள் பாதுகாப்புச் செயலருக்கு நிரந்தர மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்ததுள்ளது. முன்னதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர்…

  • ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை

    ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை, கொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களுக்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

  • பொருளாதாரப் பாதிப்பு நீடித்தால் பட்டினி அபாயம்!

    நாட்டில் ஜூன் மாதத்திலிருந்து எதிர்வரும் ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் 10 முதல் 15 இலட்சம் வரையான மக்களுக்கு போதுமான போஷாக்குணவு வேளையை பெற்றுக்கொள்ள மனிதாபிமான உதவி தேவைப்பாடு ஏற்படுமென யூ.எஸ்.எய்ட் அமைப்பின் உதவியின் அடிப்படையில் செயற்படும் வறுமை தொடர்பான முன்னெச்சரிக்கை அமைப்புகளின் வலையமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தேவைப்பாடு சந்தையின் அடிப்படையில் செயற்படுவதை விட எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அதிகரிக்கலாமென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகரிக்கும் உணவு விலைக்கு ஈடாக நாட்டின்…