Category: இலங்கை செய்திகள்

  • பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த வழக்கில், பிள்ளையான் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  • வட்டவளையில் 4 நாட்களில் 661 மி.மீ. மழை பதிவு – மண்சரிவு அபாயம் தீவிரம்

    கடந்த நான்கு நாட்களில் வட்டவளைப் பகுதியில் 661 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அறிவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். நேற்று (03) ஒரே நாளில் மட்டும் 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அது அன்றைய தினத்தில் நாட்டில் பதிவான அதிகபட்ச மழைவீழ்ச்சியாகும். மேலும், அம்பகமுவை பிரதேச செயலகப் பிரிவில் கடந்த மூன்று நாட்களில் 150 முதல் 500 மில்லிமீற்றர் வரையிலான அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய காலநிலை…

  • யோஷித, கரன்னாகொடவிற்கும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • சீரற்ற வானிலை – 500 குடும்பங்கள் இடப்பெயர்வு

    கடும் மழை காரணமாக மகாவலி நதியின் நீர்மட்டம் உயர்ந்து கம்பளைப் பிரதேசத்தில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் சுமார் 500 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். உடப்பத்த மற்றும் தொலுவ பிரதேச செயலகங்கள், இடப்பெயர்ந்த மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப் மற்றும் கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் தலைமையில் நேற்று (3) நடைபெற்ற அவசரகால அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன. கம்பளையில்…

  • நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவு குறித்து சர்வதேச நீதிபதிகள் சங்கம் (International Association of Judges) தனது தீவிரக் கவலையை வெளியிட்டுள்ளது. 1953 இல் ஆஸ்திரியாவின் சல்ஸ்பர்க் நகரில் தொடங்கப்பட்ட இச்சங்கம், இத்தாலியின் ரோமைத் தலைமையமாகக் கொண்டது. இது உலகெங்கிலும் உள்ள நீதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகும். தன்னிச்சையான, தற்காலிக மற்றும் அவசரமான தீர்மானங்களின் அடிப்படையில் இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை நீதித்துறை…

  • களனி கங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை

    அடுத்த 24 மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப்பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. களனி ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கனமழை பெய்துள்ளதாக அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மழை தொடர்வதால், தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி ஆற்றுப்பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, களனி ஆற்றில் நீர்மட்டம் உடனடியாக உயரக்கூடும். எனவே, தாழ்வான…

  • இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி

    நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல் வெளியிடும் போது, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனை குறிப்பிட்டார். அதற்கமைய, நாளை நண்பகலின் பின்னர் நிலவும் மழை நிலைமை குறையும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டைபூன் சூறாவளி தீவிரமடைந்து வருவதாக…

  • சர்வதேச மேடைப்பேச்சு போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரிக்கு முதலிடம்

    லண்டனில் நடைபெற்ற சர்வதேச மேடைப்பேச்சு போட்டியில் (International Public Speaking Competition – IPSC 2026) இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரி என்ற மாணவர் முதலிடம் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதுடைய ஒமர் ஹசாரி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். பிரித்தானியாவின் The English-Speaking Union UK அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த சர்வதேச…

  • வல்வைப் படுகொலையின் 37வது ஆண்டு நினைவேந்தல்!

    வல்வைப் படுகொலையின் 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (2) நடைபெற்றது. வல்வெட்டித்துறை நகரில், தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசியப் பேரவையினரின் ஏற்பாட்டில் வல்வைப் படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நடத்தப்பட்டது. 1989.08.02 அன்று இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது பொதுமக்களில் 72 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட 72 பேரின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்…

  • ஜப்பான் தெற்கே உருவாகும் சூறாவளி – நாட்டில் மீண்டும் கனமழைக்கு எச்சரிக்கை

    தற்போது பசிபிக் பெருங்கடலில் ஜப்பானின் தெற்குப் பகுதியில் உருவாகி வரும் சூறாவளி காரணமாக, எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பிறகு மீண்டும் மழை நிலைமை தீவிரமடையக்கூடுமெனவும், தற்போது நாட்டில் நிலவும் கடும் மழை நிலைமை நாளை (04) நண்பகலுக்குப் பின்னர் படிப்படியாகக் குறையுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே இந்தத் தகவலை வெளியிட்டார்.…