Category: இலங்கை செய்திகள்

  • நேரலையில் சபைக் கூட்டம் – இலங்கையில் முதல் மாநகர சபை

    தெஹிவளை – மலை லவினிய மாநகர சபை, தனது பொதுச்சபைக் கூட்டங்களை நேரலையில் ஒளிபரப்பத் தொடங்கிய இலங்கையின் முதல் உள்ளூராட்சி அமைப்பாக புதிய சாதனையைப் படைத்துள்ளது. சபையின் ஒருமனதான ஒப்புதலைத் தொடர்ந்து, நேற்று காலை 9.30 மணி முதல் மாநகர சபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக கூட்டங்கள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. 2025 உள்ளூராட்சி தேர்தலில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட்டு தெரிவான சமூக நீதிக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் அர்கம் முனீர் இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.…

  • தமிழ்மொழி பேசும் மக்களின் பேரவை இந்திய தூதுவருடன் சந்திப்பு

    தமிழ்மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவையின் பிரதிநிதிகள் நேற்று (04) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியது.. இச்சந்திப்பின்போது, தமிழ்மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவையின் நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அண்மையில் ஜனாதிபதியுடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் நடைபெற்ற சந்திப்புகளில் இடம்பெற்ற கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 சதவீத மக்களை இப்பேரவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள…

  • கொழும்பில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு முறிடிப்பு

    கொழும்பு தெஹிவளை, கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க மைதானம் அருகே ஒருவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று (04) இரவு சுமார் 08.10 மணியளவில், முகத்தை மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயன்றார். மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு பேக்கரியின் உரிமையாளரை இலக்காகக் கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ஆனால் அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் துப்பாக்கி வெடிக்கவில்லை. இந்த நிலையில் பேக்கரி…

  • யாழில் தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை..!

    யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்திற்கு உட்பட்ட நடத்துனர் ஒருவர் பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவன் ஒருவனுக்கு முழு ஆளிற்கான பணம் அறவீடு செய்ததற்காக ஒரு வார பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குடத்தனையிலிருந்து மருதங்கேணி சென்ற 10 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு வடமராட்சி கிழக்கு தனியார் போக்கு வரத்து சங்கத்தினதும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினதும் கட்டுப்பாட்டை மீறி வயது வந்தோர்களுக்கான முழுத் தொகை பணம் அறவிட்டதற்காக குறித்த…

  • மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

    ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா விரைவில் ஒப்பந்தம் எட்டக்கூடும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து, கடந்த சில மாதங்களாக உயர்ந்திருந்த மசகு எண்ணெய் விலை தற்போது அதிரடியாகக் குறைந்துள்ளது. இதன்படி WTI ரக மசகு எண்ணெயின் விலை 5 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 76.32 டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் சர்வதேச அளவிலான ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80 டொலராக பதிவாகியுள்ளது.

  • சுமந்திரனின் ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை நிறைவேற்ற திட்டம்-தர்மலிங்கம் சுரேஸ்

    நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்றவே இந்த 6 கட்சிகள் கொண்ட கூட்டமைப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் பேராளிகளின் வகிபாகம் எனும் தலைப்பில் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வின் போது உரையாற்றிய அவர், “இன்றைய கால கட்டத்திலே நாங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் என்ன? இந்த மண்ணிலே…

  • பாராளுமன்றத்திற்கு தீ வைக்க வந்தவர் இப்போது நீதி அமைச்சர் – நாமல் காட்டம்

    பாராளுமன்றத்தை தீ வைத்து கொளுத்த வந்தவரை நீதியமைச்சராக வைத்திருக்கும் அரசாங்கம் எதிர்க்கட்சி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என பேசுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டார். தொடர்ந்துரையாற்றிய அவர், ”தெரிந்தே பொய் சொல்லும் 159 பேரைக் கொண்ட அரசாங்கம் இது. முதலில் அரசாங்கம் ஒன்று எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை தெரிந்து செயற்படுங்கள். இந்நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இருக்க வேண்டும்.…

  • போதைப்பொருள் கண்டறியும் சென்சர்களுடன் களமிறங்கும் புதிய ‘மெட்ரோ பேருந்து’ சேவை!

    பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் நம்பகமான, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், போதைப்பொருள் கண்டறியும் சென்சர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ‘மெட்ரோ பேருந்து” சேவையை ‘லங்கா மெட்ரோ ட்ரான்சிட்’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்ப அமைப்பானது, சாரதிகளின் வாகனம் ஓட்டும் திறன் மற்றும் கவனத்தைப் பாதிக்கக்கூடிய போதைப்பொருள் பயன்பாடு அல்லது பிற பாதகமான நிலைகளைத் தானாகவே கண்டறியும் திறன் கொண்டது. பயணிகள் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான விபத்துகளை முன்னரே தடுத்து, இதன் மூலம் மேலதிக…

  • வீதி விபத்தில் காயமடைந்த ‘ரந்தெனியா பண்டார’ யானை உயிரிழந்தது!

    கேகாலை, ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த ‘ரந்தெனியா பண்டார’ என்ற யானை, மணம்பிட்டி பகுதியில் நடைபெற்ற பெரஹரா நிகழ்வுக்காக பாரவூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டபோது ஏற்பட்ட வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில், ஆறு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) அதிகாலை உயிரிழந்துள்ளது. கடந்த மாதம் 29ஆம் திகதி, மெல்சிரிபுர – ஓமரகொல்ல பகுதியில் யானையை ஏற்றிச் சென்ற லொறி இயந்திரக் கோளாறால் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, யானைப் பாகன் யானையை லொறியிலிருந்து இறக்கி பாதுகாப்பாக…

  • பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த வழக்கில், பிள்ளையான் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.