Category: இலங்கை செய்திகள்
-
சித்தி எய்தாத தமக்கு பட்டம் ஏன் வழங்கப்பட்டது என கோரி பல்கலைக்கழக மாணவன் வழக்கு
பரீட்சையில் சித்தி எய்தாத தமக்கு உயர் டிப்ளோமா பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பி கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீதிமன்றில் நட்டஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட குழுவினரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு பெற்றுத் தருமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சஹான் குமார் அத்துகோரல என்ற மாணவன் நுகேகொடை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர்…
-
அவான்-கார்ட் நிறுவனத்தின் தலைவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
அவான்-கார்ட் (Avant-Garde) நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாபதி (Nissanka Senadhipathi) இன்று (11) காலை ஊழல் அல்லது இலஞ்சம் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். ‘கிரிஷ்’ (Krrish) திட்ட ஒப்பந்தம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைக்குத் தொடர்புடைய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
-
செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்குள் தலையில்லா முண்டமாக என்புக்கூடு
செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிகளுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (10) முன்னெடுப்பட்டன. முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட…
-
மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்ட பாதாள உலக குற்றவாளி உட்பட மூவர் இலங்கை அழைத்து வரப்பட்டனர்!
மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட சர்வதேச பொலிஸின் ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) விடுக்கப்பட்டிருந்த பிரதான பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் உட்பட மேலும் இரு சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (10) மாலை விமான மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினர், மலேசிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பிரதான…
-
காணி விடுவிப்பு தொடர்பில் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத NPP அரசு : எழுந்துள்ள குற்றச்சாட்டு
காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டிலாவது…
-
கனடாவில் காலமான ஊடகவியலாளர் சபேஸ்வரனின் இறுதிகிரியை யாழில்
கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. குறித்த தகவலை அன்னாரின் குடும்பத்த்தினர் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு…
-
செம்மணி புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட கைவளையல்
செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன. இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 48ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை 09 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே…
-
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை-அரசாங்கம் பரிசீலனை
போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) நடைபெற்ற “ரதம ஏகத” தேசிய செயல்பாடுகள் ஆணைய கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்பான குற்றச் செயல்கள் பொருளாதாரம், சுற்றுலாத் துறை மற்றும் சமூகச்…
-
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, இஷாரா செவ்வந்தியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் . அதன்போது அவரை ஆகஸ்ட் 21-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான்…
-
மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு: கஞ்சிபான இம்ரானின் உறவினர் என தகவல்!
கொழும்பு, மாளிகாவத்தை – சங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பிரவேசித்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் கட்டுமானப் பொருள் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் எனவும், திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானின் உறவினர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தநிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. —————– கொழும்பு, மாளிகாவத்தை – சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக…