Category: இலங்கை செய்திகள்
-
அபுதாபியில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன்
அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கம்பளை – அத்கால பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சாமிக இஷான் லியனகே என்ற இளைஞனின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றையதினம் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளன. கடந்த 2 வருடங்கள் 10 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அபுதாபிக்குச் சென்ற இளைஞன் தாக்குதல் ஒன்றினால் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி…
-
தங்காலை கால்டன் இல்லம் தற்போது என் பெயரிலேயே உள்ளது : நாமல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடருந்து கருத்து தெரிவித்த அவர், எனக்கு 23 வயது முடிந்து 24 வயதாகும் போது நான் நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டேன்.அன்று முதல் இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். அதாவது இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே…
-
இன்று சூரிய கிரகணம்
விண்ணில் நிகழும் மிக அரிய மற்றும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (ஒகஸ்ட் 12) நிகழவுள்ளது. உலகெங்கிலும் உள்ள வானியல் ஆர்வலர்களாலும் புகைப்படக் கலைஞர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வை, இலங்கையில் இருந்து பார்க்க முடியாது என்பது அந்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. இரவு நேரத்தில் நிகழ்வதால் இலங்கையில் தெரியாது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளியை நிலவு முழுமையாக மறைப்பதே ‘முழு சூரிய…
-
இன்று உலக யானைகள் தினம்
இன்று (ஒகஸ்ட் 12) உலக யானைகள் தினம் நினைவுகூரப்படுகிறது. சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றாடல் அமைப்பின் தனித்துவமான அடையாளமாகவும், பல்லுயிர்ப் பெருக்கத்தின் மிக முக்கியமான கண்ணியாகவும் திகழும் யானைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து உலகளாவிய ரீதியில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. பல ஆண்டுகளாக நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஒழுங்கற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக யானைகளின் நடமாட்டப் பாதைகளும் வழிகளும் தடைப்பட்டு, கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. தற்போது காட்டு யானைகளுக்கு…
-
12 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமையில் வரும் ஆடி அமாவாசை!
2026ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் புனித நீர்நிலைகளில் முன்னோர்களை நினைவுகூர்ந்து சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிதிர்க்கடன் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்வது இந்து சமய மரபாகக் காணப்படுகிறது. இதனால், அதிகாலை முதலே பக்தர்கள் ஆலயங்கள் மற்றும் புனித நீர்நிலைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை…
-
ஏதிலிகளாக இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று ஏதிலிகளாகப் பதிவாகியுள்ள இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல் வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. யுத்த காலத்தில் நிலவிய சீரற்ற சூழ்நிலை காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் மூலமன்றி முறையான கடவுச்சீட்டின்றி இந்தியாவுக்குச் சென்ற பலர், அங்கு ஏதிலிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐக்கிய நாடுகள் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR)…
-
படுகொலையின் பிரதான சூத்திரதாரி செவ்வந்தியா..! சட்ட ரீதியாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த பெண் உண்மையில் தேடும் செவ்வந்தியா என்பது தொடர்பில் சந்தேகம் நீடித்து வரும் நிலையில், முகத்தை அடையாளம் காணும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறான நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் மூலம் செவ்வந்தியை அடையாளம் காண பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு குற்றப்பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த வழக்கு…
-
மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ரவிகரன் எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை!
முல்லைத்தீவில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிமாவட்ட மீனவர்கள் ஊடாகவே முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் ஊடுருவல்கள் இடம்பெறுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வெளிமாவட்ட மீனவர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை கடற்றொழில்…
-
“ரத்மலான சைமா” 48 மணிநேரம் தடுப்புக் காவலில் விசாரணை
கஞ்சிப்பான இம்ரானின் நண்பரும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் “ரத்மலான சைமா” உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களில் ஒருவரை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய கண்டி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மலேசியாவில் கைது செய்யப்பட்ட குறித்த மூன்று சந்தேகநபர்களும் நேற்று மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்களில் ஒருவரை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
சித்தி எய்தாத தமக்கு பட்டம் ஏன் வழங்கப்பட்டது என கோரி பல்கலைக்கழக மாணவன் வழக்கு
பரீட்சையில் சித்தி எய்தாத தமக்கு உயர் டிப்ளோமா பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பி கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீதிமன்றில் நட்டஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட குழுவினரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு பெற்றுத் தருமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சஹான் குமார் அத்துகோரல என்ற மாணவன் நுகேகொடை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர்…