Category: இலங்கை செய்திகள்
-
சீன பிரஜை படுகொலை : மேலும் ஒருவர் கைது
கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் மூன்று சீனப் பிரஜைகள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 23, 2026 அன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (செப்டம்பர் 04) கொழும்பு துறைமுக நகரத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது 54 வயதுடைய சீனப்…
-
மாறாயிலுப்பை, புதுக்குளம் வயல்காணிகளை விடுவிக்க ரவிகரன் வலியுறுத்தல்
வவுனியா வடக்கு, நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட மாறாயிலுப்பை மற்றும் புதுக்குளம் பகுதிகளில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். மாறாயிலுப்பை கமக்கார அமைப்புப் பிரிவிலுள்ள புதுக்குளத்தின் கீழ் 14 விவசாயிகளுக்குச் சொந்தமான 52 ஏக்கர் பூர்வீக வயல்காணிகள் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை இழந்த நிலையில், தற்போது அவற்றை காண்பிக்குமாறு கோருவது நியாயமற்றது…
-
நாமல் எம்.பி. கைது – ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்தமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாகவும் அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாடு முழுவதும் சென்று…
-
12ஆம் திகதி என்ன நடக்கப் போகிறது?
“என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் நேற்று (04) காலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, குற்றம் இழைக்காத காரணத்தினாலேயே விசாரணைகளுக்கு தொடர்ந்து முன்னிலையாகி…
-
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார் நாமல் எம்.பி.
இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
-
உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகள் குறைப்பு
உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ இயக்குனர் மயூர நெத்திகுமார, இன்று (04) நள்ளிரவு முதல் இது அமுலுக்கு வருவதாகத் தெரிவித்தார். அதன்படி, ஒரு லீற்றர் நெப்தாவின் விலை 210 ரூபாயிலிருந்து 175 ரூபாய் வரை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.மேலும், ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலையையும் 248 ரூபாயிலிருந்து 210 ரூபாய் வரை 38 ரூபாயினால் குறைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம்…
-
நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாமல் ராஜபக்ச இன்று முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
இலங்கை மனித உரிமை அறிக்கை செப். 7-இல் தாக்கல்
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தொடரானது எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை 63 ஆவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் செப்டெம்பர் 7 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா…
-
சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழு அடுத்த வாரம் இலங்கைக்கு
நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. அந்த குழுவானது எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை அந்த குழு நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின்…
-
‘குடு சலிந்து’ வழக்குக் கோப்புகள் மாயம் – 10 பேரிடம் விசாரணை
‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த இரண்டு முக்கிய வழக்குகளின் கோப்புகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் 10 நீதிமன்ற ஊழியர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 7 பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார். காணாமல் போன கோப்புகளில், குடு சலிந்துவின் வழிநடத்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதப்…