Category: இலங்கை செய்திகள்
-
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று
ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் ஜெனிவா நேரப்படி இன்று காலை 10.00 மணிக்கு இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா சூர்யோடிபுரோ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. ஆரம்பக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான…
-
விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் வளாகத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார். அத்துடன், அவரைச் சந்திப்பதற்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீலங்கன்…
-
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது
காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்கள…
-
செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வார். அதன்போது, அநுதாரபுரத்தில் நாட்டு மக்களுக்கு அவர் கூறவிருந்த சக்திவாய்ந்த செய்தியை சபையில் பகிரங்கமாக அறிவிப்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் பழிவாங்கல். 12ஆம்…
-
வடக்கில் கைவிடப்பட்ட 82 பாடசாலைக் கட்டடங்களை முடிக்க வலியுறுத்தல்
வடமாகாணத்தில் பகுதியளவில் கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள 82 பாடசாலைக் கட்டடங்களையும் முழுமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பல பாடசாலைக் கட்டடங்களே இதுவரை முழுமைப்படுத்தப்படாமல் உள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். கட்டடங்களின் பணிகளைத் தொடர்வதற்கான தொழில்நுட்ப அறிக்கைகள் தற்போது திரட்டப்பட்டு…
-
வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 36ஆவது நினைவேந்தல்
1990ஆம் ஆண்டு யுத்த சூழலில் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் தஞ்சமடைந்திருந்த நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் 158 பேரின் 36ஆவது நினைவேந்தல் சனிக்கிழமை (05) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நினைவாகச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினர். 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களில் 158 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி, கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி,…
-
ஜனாதிபதி பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்று ஆரம்பம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. “எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்குச் சுபிட்சம்” எனும் கருப்பொருளின் கீழ் இந்தப் பேரணிகள் நடத்தப்படவுள்ளன. இந்த மக்கள் பேரணித் தொடரின் முதற்கட்டம் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது. பேருவளை மற்றும் புளத்சிங்கல ஆகிய நகரங்களில் இந்தப் பேரணிகள் நடைபெறவுள்ளதுடன், இதற்கமைய இன்று பிற்பகல் 2.00 மணிக்கு முதலாவது பேரணி புளத்சிங்கலயிலும், பிற்பகல் 3.30 மணிக்கு…
-
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி: பொலிஸார் எச்சரிக்கை!
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை இணைய வழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Gov Pay’ அமைப்பைப் போன்ற போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் ரகசியத் தகவல்களைத் திருடும் புதிய மோசடி குறித்து பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலி இணையதளத்தின் இணைப்புகள் (Links) எஸ்.எம்.எஸ் (SMS) மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பொதுமக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த இணைப்புகளைச் சொடுக்கும் பயனாளர்களின் வங்கித் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் தந்திரமாகத் திருடப்பட்டு, கணக்கிலுள்ள பணமும் கொள்ளையடிக்கப்படுகிறது. பொதுமக்களின் சிரமத்தைக்…
-
விக்டோரியாவில் பேஸ்புக் விருந்து – 41 பேர் கைது
தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்தொன்றை பொலிஸார் முற்றுகையிட்டு 36 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உள்ளிட்ட 41 பேரை கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா, ஹேஷ், ஐஸ் போதைப்பொருள், போதை மாத்திரைகள், சட்டவிரோத சிகரெட்டுகள், பியர் மற்றும் மதுபான போத்தல்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதுக்கும், பெண் சந்தேகநபர்கள் 22…
-
பலாலியில் கிணற்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு
யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் போது பெருமளவான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிணற்றுக்குள் வெடிபொருட்கள் காணப்பட்டமை தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கிணற்றுக்குள் காணப்படும் வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.