Category: இந்திய செய்திகள்
-
17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை
இந்திய தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் பாகத்தை நாய்கள் கடித்துத் தின்ற அவலமும் நிகழ்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொடூர குற்ற சம்பவம் டெல்லியில் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வரூப் நகரில் நடந்துள்ளது. பொலிஸார் உடலை கைப்பற்றிய போது இறந்தவரின் பாலினத்தை தடயவியல் நிபுணர்கள் அறிவதில் சிக்கல் இருந்தது. இந்த சூழலில் இந்த குற்ற பின்னணியை பொலிஸார்…
-
தமிழக முதல்வரின் லண்டன் பயணம் எதற்காக என்பதில் தெளிவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய தலைமைச் செயலகம் மற்றும் முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நடைபெறவுள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும். இதற்காக நாங்கள் முழு முயற்சியுடன் பாடுபடுவோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார். புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமே இல்லை. மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி, பள்ளி மற்றும்…
-
பிச்சை போட மறுத்த பெண்; மூக்கைக் கடித்து மூக்குத்தியைப் பறித்த யாசகர்; உத்தரப்பிரதேசத்தில் துணிகரம்
மும்பை புறநகரில் உள்ள நவிமும்பை கோபர் கைர்னே என்ற இடத்தைச் சேர்ந்த மோனிகா ரெய்னா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோவர்தனில் கடந்த ஆறு மாதங்களாகத் தங்கி இருந்து மத சடங்குகளில் பங்கேற்று வருகிறார். மோனிகா மதுராவில் உள்ள ராதாகுண்ட் அருகே உள்ள கோவர்தன் பரிக்ரமா வழித்தடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் யாசகம் கேட்டார். ஆனால் மோனிகா யாசகம் கொடுக்க மறுத்தார். இதனால் யாசகம் கேட்டவர் அந்தப் பெண்ணை புதருக்குள்…
-
காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் (78) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (17) காலமானார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், வழக்கறிஞராக பணியாற்றியதுடன் உயர்நீதிமன்றத்திலும் சட்டத்தரணியாகப் பணியாற்றியுள்ளார். 1999 முதல் 2004ஆம் ஆண்டு வரை சிவகங்கை மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அவர், 2004 முதல் 2016ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 2013–14 காலப்பகுதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்…
-
500,000 போலி Gmail கணக்குகள் மூலம் குண்டு மிரட்டல்கள்: Googleஐ விசாரிக்கவிருக்கும் இந்தியக் காவல்துறை
இந்தியாவில் போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்ப 500,000க்கும் அதிகமான Gmail மின்னஞ்சல் கணக்குகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்பில் Google நிறுவனத்தை இந்தியக் காவல்துறை விசாரிக்கவிருக்கிறது. குஜராத் காவல்துறை இந்த வாரம் மின்னஞ்சல் கட்டமைப்பு ஒன்றை முறியடித்து இருவரைக் கைது செய்தது. அதிரடி நடவடிக்கையில் 513,847 Gmail கணக்குகளும் அவற்றின் கடவுச்சொற்களும் தெரியவந்தன. அவை 2022ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை காணாத அளவு போலி Gmail கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக குஜராத் இணையக் குற்றப்பிரிவின் மூத்த அதிகாரி ராய்ட்டர்ஸிடம்…
-
பல நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடரும்: இந்தியா
இந்தியா தொடர்ந்து பல்வேறு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம், ரஷ்ய எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை வாங்கும் நாடுகள் மீது கடுமையான வரிவிதிக்கும் புதிய சட்டத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்தியா அவ்வாறு கூறியுள்ளது. 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தித் தேவையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு சொன்னது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கப்போவதாக அது வலியுறுத்தியது. தனது வர்த்தக, பொருளாதார நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக…
-
ரூபாய் 5000 கோடி சொத்து இருந்தாலும் தெருவில் பிச்சை எடுத்த எம்.எல்.ஏ
மும்பையில் 5000 கோடி மதிப்பு கொண்ட கோடீஸ்வர பாஜக எம்எல்ஏ ஒருவர் திடீரென ஒரு கிழிந்த ஆடைகளுடன் தெருவில் இறங்கி பிச்சை எடுத்த அந்த விசித்திரமான நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலத்தின் மிக முக்கிய கோடீஸ்வர அரசியல்வாதிகளில் ஒருவரான பராக் ஷா இவர் மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். தொழிலதிபரான இவருக்கு பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது. இவ்வளவு ஆடம்பர வசதிகள் இருந்தாலும் அவர் ஏன்…
-
சர்வதேச எல்லையில் இந்திய கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதல்
சர்வதேச எல்லையில் இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை வடக்கு அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்றின் மீது பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் நடந்த இந்த மோதல் சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தூதர்…
-
HOLLYWOODல் REMAKE ஆகும் ‘மகாராஜா’
விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ உலகளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து, திரையரங்கிலும் OTT-யிலும் பெரும் வரவேற்பு பெற்றது. சீனாவில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, ஹாலிவுட் ஏஜென்சி ஒன்று ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் இந்த ரீமேக்கை தயாரிக்க, இது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்ப்படமாகும். விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50-வது படமாக வெளியான…
-
மகன், மகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட சூர்யா – ஜோதிகா!
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்களாக இருப்பவர்கள் சூர்யா- ஜோதிகா தம்பதி. இவர்கள் 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் சினிமாவைக் கடந்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் முன்மாதிரி தம்பதியாக திகழ்கின்றனர். நட்சத்திர தம்பதியர்களான சூர்யா- ஜோதிகா ஜோடி திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நடிகை ஜோதிகா தெரிவிக்கையில், தங்கள் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் தொடங்கியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து…