Category: இந்திய செய்திகள்
-
அட்லி இயக்கும் “ராக்கா” படத்திற்கு கின்னஸ் சாதனை
அட்லீ இயக்கும் ‘ராக்கா’ படத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் நடித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை ‘ராக்கா’ படம் படைத்திருக்கிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் ‘ராக்கா’. பான்-இந்தியா படமாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஏற்கனவே தீபிகா படுகோன் இணைந்துள்ள நிலையில், ராஷ்மிகா மந்தனா,…
-
ரூ.46 கோடி பண மோசடி: தனது சகோதரி அம்பிகா மீது ராதா பரபரப்பு புகார்!
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் நடிகைகள் ராதா மற்றும் அம்பிகா. சகோதரிகளான இருவரும் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தனர். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பல வெற்றிப் படங்களை வழங்கிய ராதா மற்றும் அம்பிகா, 80-களின் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகைகளாக இருந்தனர். குறிப்பாக, இருவரும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்ததால், அப்போது…
-
06 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த முதலை பிடிக்கப்பட்டது – இந்தியாவில் சம்பவம்
இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு அருகே கோதையாற்றில் கடந்த 06 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலையை திங்கட்கிழமை (21) வனத்துறையினர் பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு கோதையாற்றில் கடந்த 06 ஆண்டுகளாக முதலை நடமாட்டம் இருந்து வந்ததுள்ளது. தொடர்ந்து முதலை உலா வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்ததோடு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில்,…
-
‘துவா’வுக்கு சகோதரி கிடைத்துவிட்டாள்: தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவதாக தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருந்தார். கடந்த ஏப்ரல் 19ம் தேதி கர்ப்பம் குறித்த செய்தியை அந்தத் தம்பதியினர் இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தங்கள் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர். அதில் அவர்களின் மகள் , கர்ப்பம் உறுதியானதைக் காட்டும் பரிசோதனைக் கருவியை (pregnancy kit) கையில் வைத்திருந்தார். பிரசவ தேதிக்கு முன்னதாக, தங்கள் வாழ்க்கையின் இந்தச்…
-
`பொதுச் செயலாளர் பதவியை அவருக்காக வைத்திருக்கிறோம்!’ – புதிய கட்சியைத் தொடங்கிய அஜித் ரசிகர்கள்
திரைப்பட நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறார். சினிமாவில் நடிகர் விஜய், அஜித் மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் நேரெதிர் துருவங்களாக இருந்தது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற முதல்வர் விஜய், நடிகர் அஜீத்குமாரின் கார் ரேஸை துவக்கி வைத்ததும், அவரைக் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டியதும் தமிழகத்தில் பேசுபொருளானது. அதேசமயம் அந்தச் சம்பவம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில்…
-
கேரளா | திடீர் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு.. 6 பேர் மரணம், பலர் மாயம்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பரவலாக பெய்த திடீர் கனமழையால் மூணாறு, வண்டிப்பெரியாறு, வாகமண் உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாறுகள் ஒன்றிணைந்து ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆற்றங்கரையோர மக்கள் மற்றும் இரவு நேரத்தில் மலைப்பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவாடாவில் உள்ள கொட்டகம்பூரில்…
-
‘சிக்மா’ படம் ஒரு ஜாலியான அனுபவம்! – இயக்குநர் ராஜமௌலி
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் தலைவராக மாறியிருக்கும் சூழலில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார். இந்தசூழலில் தான் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ஒரு ஆக்ஷன் – அட்வென்ச்சர்…
-
சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்; திரையுலகத்தினர் இரங்கல்!
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளான சாந்தி நாராயண சாமி இன்று அதிகாலை சென்னையில் காலமானார். மறைந்த சிவாஜி கணேசன் – கமலாம்பாள் தம்பதிக்கு சாந்தி, தேன்மொழி, என இரு மகள்கள் மற்றும் நடிகர்கள் ராம்குமார், பிரபு என இரு மகன்கள். இவர்களில் சாந்திதான் மூத்தவர். முதல் பெண் குழந்தை என்பதால் சிவாஜிக்கு இவர் மீது எப்பவுமே கொஞ்சம் கூடுதல் பிரியம் உண்டு என்பார்கள். சென்னை அண்ணா சாலையில் சிவாஜி திறந்த தியேட்டருக்கு அதனாலேயே…
-
“த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி” – மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
“தமிழகத்தில் தற்போது நடைபெறும் த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே நடக்கிறது” எனத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசுகையில், “75 ஆண்டுகள் ஒரு அரசியல் கட்சி கம்பீரமாக நிலைத்திருப்பது சாதாரணமான விஷயமல்ல. அந்தப் பெருமையுடன் திமுக இன்றைக்கும் வீறுநடை போட்டு வருகிறது.…
-
நடிகர் தனுஷ் வெளியிட்ட ஒரேயொரு பதிவு, சமூக வலைதளங்களில் பெரும் பூகம்பத்தையே கிளப்பியிருக்கிறது.
நடிகர்கள் நாடாள முடியுமா என்ற கேள்வி, தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் எப்போதும் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும் கேள்வி தான். ஆனால், இந்த கேள்விக்கு ஆம் என்று பதில் அளித்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலிதா, விஜய் ஆகியோர் தான். விஜயகாந்த் மட்டும், எதிர்கட்சி தலைவர் பதவி வரை உயர்ந்தார். மற்றபடி, சிவாஜி, சரத்குமார், பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் கட்சியை ஆரம்பித்து, பாதியிலேயே கலைத்துவிட்டு அரசியலில் இருந்து காணாமல் போனார்கள். அவ்வளவு ஏன், தமிழகத்தின் மிகுந்த ஆளுமையான நபர் என்று கூறப்பட்ட…