Category: இந்திய செய்திகள்

  • தமிழக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

    தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பாடசாலை நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் பெற்று ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருச்சி…

  • நள்ளிரவில் வெடித்துச் சிதறியது குளிர்சாதனப்பெட்டி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி பலி

    இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவியில் , நள்ளிரவில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை சுமார் 2 மணியளவில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டி திடீரென வெடித்துச் சிதறியது.இதனால் மளமளவென வீடு முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. வீடு ஒரு சிறிய ஷெட்…

  • லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.12,300 கோடி முதலீடு ஒப்பந்தம்

    லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ.12,300 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். அங்கு லண்டன் வாழ் தமிழர்கள் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், இன்று முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழ்நாட்டில் சுமார் ரூ.12,300 கோடி மதிப்பிலான 4 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த…

  • 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை

    விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாசிக்கில் விற்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை வைரலானது. மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள சாகர் ஸ்வீட்ஸ் என்ற கடையில் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனைக்கு வைக்கப்பட்டது. 2021ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இக்கொழுக்கட்டை விற்பனையாகிறது. 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட இக்கொழுக்கட்டையின் விலை கிலோ ஒன்றுக்கு 27,000 ரூபாயாகும். விலை அதிகம் என்றாலும் கொழுக்கட்டையின் தரம் மற்றும் தனித்துவமான தோற்றம் காரணமாக…

  • முக ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

    2026ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா இன்று கொண்டாடப்பட இருந்த நிலையில் முக ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது, பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விழா ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர்…

  • செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் இந்தியா

    சீனாவைப் போன்று, இந்தியாவும் செயற்கைச் சூரியனை உருவாக்கும் முயற்சியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சூரியனின் மையப்பகுதியில் உள்ளதைப் போன்ற தீவிர வெப்பம் மற்றும் காந்தப்புலத்தை உருவாக்க ஆதித்யா (ADITYA) மற்றும் SST-1 (Steady State Superconducting Tokamak) ஆகிய பிளாஸ்மா சாதனங்களில் வெப்ப நிலையை எட்டி விஞ்ஞானிகள் வெற்றி அடைந்துள்ளனர். அண்டை நாடான சீனா, அமெரிக்காவையே விஞ்சும் அளவுக்கு போட்டிபோட்டு வருகிறது. சமீபத்தில், அது ஒரு செயற்கை சூரியனை உருவாக்கும் நோக்கில் இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது,…

  • “என்னுடைய கதைகளிலேயே ‘டோரதி’தான் நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது” – கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ‘டோரதி’ திரைப்படம் இம்மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு இப்படம் தேர்வாகியிருந்தது. சமீபத்தில் அதன் திரையிடலும் நடைபெற்றிருந்தது. டொரோண்டோ திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பு குறித்தும், ‘டோரதி’ படம் குறித்தும் திரைப்பட விமர்சகர் சுசரிதா தியாகிக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், “டொரோண்டோ திரைப்பட விழாவில்…

  • பிரிக்ஸ் மாநாட்டு விருந்தில் சைவ உணவு

    சீன ஜனாதிபதி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் பிரிக்ஸ் மாநாட்டின் இரவு விருந்தை புறக்கணித்தற்கு சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது தான் காரணமா என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்தியாவின் தலைமையிலான 18வது பிரிக்ஸ் மாநாடு டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை தந்த தலைவர்களுக்கு…

  • 601 கிலோ பிரம்மாண்ட லட்டு – விநாயகர் சதுர்த்தியில் வியக்கவைக்கும் காட்சி!

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 601 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு ஒன்று தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட லட்டு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான உலர் பழங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில், பார்வதி தேவி விநாயகருக்கு உணவு ஊட்டுவது போன்ற தத்ரூபமான வடிவத்தில் இந்த லட்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு…

  • ‘கில்லி’ கபடி வீரர் முதல் முதலமைச்சர் விஜய் சைகை வரை : ரசிகர்களைக் கிறங்கடித்த விநாயகர் சிலைகள்!

    சென்னை நகரில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அவர் சைகை காட்டுவது போன்ற வடிவிலும், ‘கில்லி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கபடி வீரர் தோற்றத்திலும் சில விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேவேளை, திருவல்லிக்கேணி பகுதியில்…