Category: இந்திய செய்திகள்

  • இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதலிடம்; அம்பானி 2ஆம் இடம்

    2026ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.9.22 இலட்சம் கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.8.63 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், லட்சுமி நிவாஸ் மிட்டல் மற்றும் குடும்பத்தினர் ரூ.3.39 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். சைரஸ் எஸ். பூனாவாலா, ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, குமார் மங்கலம் பிர்லா, திலீப் ஷாங்வி, அசிம்…

  • ‘ரஷ்யாவிடம் வாங்குவதை நிறுத்த முடியாது..’ இந்தியாவுக்கு சிக்கல்? நிர்மலா சீதாராமன் சொன்ன காரணம்!

    ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் காரணமாக, ரஷ்யா தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்யை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கணிசமான அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் நாடுகள் மீது அமெரிக்காவின் அழுத்தமும் அதிகரித்து வருகிறது. ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து வாங்கும்…

  • சினிமா ‘ஒரு இயக்குநராக அப்பாவிடம் பிடித்தது இதான்..’ ஓபனாக பேசிய ஜேசன் சஞ்சய்

    சந்தீப் கிஷன் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிக்மா. முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மீது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ரிலீஸ்-க்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளில், ஜேசன் சஞ்சய் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் நேர்காணல்…

  • தீப்பிடித்த சுற்றுலா பஸ்; தூங்கிக்கொண்டிருந்த 9 பேர் பலியான சோகம்; ஜன்னல் வழியாகத் தப்பிய பயணிகள்

    சுற்றுலா பஸ் ஒன்று நேற்று இரவு டெல்லி நொய்டாவில் இருந்து கிளம்பி உத்தரப்பிரதேசத்தில் உள்ள மஹோபா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. பஸ் கிரேட்டர் நொய்டாவில் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜெவார் விமான நிலையம் அருகில் இன்று அதிகாலையில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது. அந்த நேரத்தில் அனைத்துப் பயணிகளும் உறக்கத்தில் இருந்தனர். இதனால் பயணிகளால் பஸ் தீப்பிடித்தவுடன் தப்பிக்க முடியவில்லை. இதனால் தீயில் கருகி 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல பயணிகள் பஸ்…

  • ‘பெருமையால் அழுகிறேன்..!’- புற்றுநோயை வென்று கதாநாயகியான வளர்ப்பு மகள்; நெகிழ்ந்த விவேக் ஓபராய்

    பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயால் சிறுவயதில் தத்தெடுக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஹாரா ஷா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து தனது முதல் நேபாளி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தன் வளர்ப்பு மகளின் இந்த வளர்ச்சியைக் கண்டு எமோஷனலாகப் பேசியிருக்கும் விவேக் ஓபராய், “இது எனக்கு மிகவும் பெருமையான ஒரு தருணம். உன் திரையுலகப் பயணத்தில் நீ உச்சியைத் தொட வேண்டும் என்று விரும்புகிறேன். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். நீ ஒரு வெற்றியாளர் என்பதை எப்போதும்…

  • விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

    ஒரு காலத்தில் கூட்டத்தில் நின்றவர்… இன்று அதே கூட்டம் கைதட்டி பார்க்கும் கதாநாயகன். சூரியின் இந்த மாற்றம் ஒரு நாளில் நடந்ததல்ல. லாரி கிளீனர் → Light Man → காமெடியன் → கதாநாயகன்… இன்று திரையில் சூரியின் அந்த கம்பீரமான முகத்தைப் பார்க்கும்போது, அதன் பின்னால் இருக்கும் பல வருடப் பயணத்தை நினைத்தால் இன்னும் அழகாகத் தெரிகிறது. “Elevation For Him” அல்ல… “Elevation Needs Him.” 🔥 1996… சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற…

  • “ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாகக் கொடுத்தது கிடையாது” – நடிகை அம்பிகா

    நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்நிலையில் நடிகை அம்பிகா இந்தக் குற்றச்சாட்டு குறித்து விகடனுக்கு எக்ஸ்க்ளுசிவ் பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அம்பிகா, “அம்மா இறப்பதற்கு முன்பே இந்தச் சொத்து பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. என் அம்மாவை எதிர்த்து நான் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை.…

  • ரூ.150 கோடி செலவு.. ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’!

    இதிகாச கதைகளில் ஒன்றான கர்ணன் கதையை தழுவி பல படங்கள் உருவாக்கி இருக்கின்றன. இப்போது அந்த வரிசையில் புதிய படம் ஒன்று உருவாகிறது. ‘மஹாவீர் கர்ணா’(MahaveerKarna) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், கர்ணனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்துக்காக பிரம்மாண்டமான சிறப்பு அரங்குகள், புராண காலத்தை கண்முன் நிறுத்தும் கலை வடிவமைப்புகள், அசரவைக்கும் போர்க்காட்சிகள் மற்றும் உலகத்தர VFX தொழில்நுட்பம் என அனைத்தும் சேர்ந்து, மொத்தத்தில் ஒரு…

  • காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

    இன்று சென்னை திருவான்மியூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதுவரை காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இன்று தொடங்கி வைத்துள்ள இந்தத் திட்டத்தின் மூலம் காலை உணவை 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது…

  • பெண் மேலாளரின் துப்பட்டாவில் முகத்தைத் துடைத்த ஷாருக்கான்

    மும்பையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. மும்பையில் உள்ள விநாயகர்களில் லால்பாக் ராஜா மிகவும் பிரபலம் ஆகும். இந்த விநாயகரைத் தரிசிக்க பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் இந்த விநாயகரைத் தரிசிக்க பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். லால்பாக் ராஜாவைத் தரிசிக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கெளரி, மகள் சுஹானா, பெண் மேலாளர் பூஜா ஆகியோருடன் வந்திருந்தார்.…