Category: இந்திய செய்திகள்
-
பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பிக்பாஸ் பிரபலம்!
மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான திவ்யா ஷிண்டே என்பவர், பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. இதைப்பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பிக் பாஸ் மராத்தி சீசன் 6 மூலம் பிரபலமானவர் திவ்யா ஷிண்டே. இவர் மிகவும் பிரபலமான சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்களிடையே பிரபலமானவராக…
-
நிறைவேறுமா பிரதமர் கனவு.. தேசிய அரசியலை நோக்கி விஜய்..? வடக்கிலும் கால்பதித்த தவெக!
முதல்வர் விஜய் தலைமையிலானதமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)தேசிய அளவில் தனது அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, வடமாநிலங்களில் த.வெ.க காலடி எடுத்து வைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டம் பகுபூர் பகுதியில் த.வெ.க தனது முதல் மாநிலக் கட்சி அலுவலகத்தைத் திறந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் அவர் முதல்வரானதைத் தொடர்ந்து, இந்தியா…
-
சூர்யாவுடன் இணையும் எஸ்.எஸ்.ராஜமௌலி
நடிகர் சூர்யாவிற்கு இந்த 2026 ஆம் வருடம் எல்லாமே சூப்பராக அமைந்து வருகிறது. முதலில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. கருப்பு திரைப்படம் 300 கோடி ரூபாவுக்கும் மேலான வசூல் வேட்டை செய்தது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா – மமிதா பைஜு நடித்த விஸ்வநாத் அன்ட் சன்ஸ் திரைப்படம் வெளியானது, இந்த படமும் 100 கோடி ரூபாவுக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அடுத்த சூர்யா…
-
திலீபன் சிலை அகற்றப்பட்டமை வேதனையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகின்றது – சீமான்
தியாகதீபம் திலீபனின் நினைவு நாளை ஈழத்தமிழர்கள் உணர்வுடன் கடைப்பிடித்த நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலையை பொலிஸார் அகற்றிச் சென்றிருப்பது வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார். தங்களுக்காக போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையில் பொலிஸார் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்ணாமலும் நீர் அருந்தாமலும் அகிம்சை வழியில் மக்களுக்காக உயிர்துறந்த திலீபன் மறைந்து 39 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது உருவச்சிலையைக்கூட ஏற்றுக்கொள்ள…
-
“உலகில் உள்ள தெற்கு நாடுகளில் ‘4F’-ல் இக்கட்டான சூழல்” – ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. அந்தக் கூட்டத்தில் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். நேற்று இந்தியா சார்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐ.நா.வில் உரையாற்றினார். அவர் பேசியதாவது… இந்த ஆண்டில், வளைகுடாப் பகுதியில் ஒரு மோதலை நாம் காண்கிறோம். இது ஏற்கெனவே சிக்கலாக உள்ள சூழலை மேலும் தீவிரமாக்குகிறது. அங்குத் தொடரும் பகைமை குறித்து நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம். சர்வதேச நீர்வழிப் பாதைகளைக் கடந்து செல்லும்…
-
ஏர் இந்தியா விமானியின் செயல்.. அதிர்ச்சி அடைந்த பயணிகள்!
சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் இருந்து டெல்லிக்கு, ஏர் இந்தியாவின் AI 151 என்ற விமானம், கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி அன்று புறப்பட இருந்தது. சூரிச் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மது வாசனை வீசுவதாக, பணியாளர்கள் சிலர் கண்டுபிடித்து, அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், விமானத்தில் ஆய்வு செய்ததில், இணை விமானி மது அருந்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு, விமானத்தில்…
-
தன்னை பெற்ற தாயைப் பற்றி அவதூறாகப் பேசுவதாக முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
தமிழக அரசு மீது எந்தவித குற்றச்சாட்டுகளையும் வைக்க முடியாத விரக்தியில் சிலர், தன்னை பெற்ற தாயைப் பற்றி அவதூறாகப் பேசி வருவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், தன் தாயைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தான் அதைப் பொறுத்துக்கொண்டதாகவும், ஆனால் தன்…
-
ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து? – சட்டப்பேரவையில் பரபரப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுக்கக் கோரி முதல்வர் உமர் அப்துல்லா வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதும் அவையில் அமளி ஏற்பட்டது. குறிப்பாக, 2000-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் கூடுதல் சுயாட்சி தொடர்பான தீர்மானம் மற்றும் 2024-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தற்போதைய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக உறுப்பினர்கள் தீர்மானத்தின் நகல்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே,…
-
`கொலைக்காக வருந்தவில்லை’ரூ.40 லட்சம் கடனால் பணக்கார தந்தையை கொன்றுவிட்டு மனைவி மீது பழியை போட்ட மகன்
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகரில் தொழிலதிபர் வினீத் கடந்த 5ம் தேதி இரவு வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக வினீத் மருமகள் ஷெலு, முன்னாள் வீட்டு வேலைக்காரர் விஷால் மற்றும் அவரது கூட்டாளி ராஜ்கிஷோர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் விஷால் தான் புதிதாக வாங்கிய சிம்கார்டு மூலம்…
-
சபரிமலையில் தங்க கிரீடம் மாயம்
சபரிமலை கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரை கிலோ எடையிலான தங்க கிரீடம் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். மேலும், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறினால் காணிக்கை செலுத்துவதும் வழக்கமாக உள்ளது. இந்தநிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.72 (445.76 கிராம்) பவுன் எடை…