Category: இந்திய செய்திகள்
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? முடியாதா? விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா? என முதலமைச்சர் விஜய்க்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக…
-
பழம்பெரும் பின்னணி பாடகி காலமானார்
பின்னணி பாடகி ஜானகி அம்மாவின் மறைவை தொடர்ந்து , பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 6,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், இந்தியத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்தார். நடிகை ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள், ‘யாரடி நீ மோகினி’, ‘குங்குமப் பூவே’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மூலம்…
-
விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!
கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய ‘எம்எஸ்சி எல்சா 3’ கப்பலிலிருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரை உள்ள கடற்கரைப் பகுதிக்கு இந்தப் பிளாஸ்டிக் துகள்கள் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதுடன், பருவமழை காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார். இந்தப் பிளாஸ்டிக் துகள்களை…
-
200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு தவெக அரசு அனுமதித்தது எப்படி?’ – சீமான் காட்டம்
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து முறைகேடாக அமைக்கப்படும் தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200 ஏக்கர் விளை நிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தை முறையான அனுமதி பெறாமல் தனியார்…
-
இதயத்தில் தவறுதலாக அறுவைச் சிகிச்சை: பெண் மரணம்
இந்தியா ஹரியானாவில் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு இதயத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, ஹரியானாவில் வசித்து வந்தவர் குட்டி தேவி(42). இவர் கடந்த 24ம் தேதி சாலை விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனவே பானிபட்டியில் உள்ள பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எலும்பு முறிவு சிகிச்சை செய்யப்படும் என சொல்லப்பட்டிருந்தது.…
-
மகனை தூக்கி கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ்!..
நடிகரும், பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமான நிலையில் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் ஜாய் கிரிசில்டா என்பருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டார் . ஆனால், தான் கர்ப்பமாக இருக்கும் நிலையில் ரங்கராஜ் தன்னை ஏற்றுக்கொள்ளவும், சந்திக்கவும் மறுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா கண்ணீரோடு செய்தியாளர்களிடமும் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்..…
-
உணவு பரிமாற தாமதம்!. சகோதரர் மனைவி தலையை வெட்டி மரத்தில் மாட்டிய நபர்!…
உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது சகோதரரின் மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பீகார் மாநிலம் ஜகர்கன்ட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குனல் குமார், தர்மேந்திர குமார் ஆகிய இருவரும் சகோதரர்கள். இதில் தர்மேந்திர குமாரின் மனைவி அனுஷா தேவி(25). குனல் குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு குனல் குமார் மதுபோதையில் சாப்பிட சென்றபோது, அனுஷா தேவி அவருக்கு சாப்பாடு போடவில்லை…
-
இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட அதிசயக் கோவில்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் (Bikaner) நகரில் அமைந்துள்ள பண்டசார் சமணக் கோவில் (Bhandasar Jain Temple) தான் 40,000 கிலோ தூய நெய்யைப் பயன்படுத்தி கட்டப்பட்ட அந்த அதிசயக் கோவிலாகும். 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில், இந்தியாவின் மிகச்சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பண்டசா ஓஸ்வால் என்ற பணக்கார சமண வணிகரால் 1468-ஆம் ஆண்டில் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் பிகானேர் பகுதியில் கடுமையான…
-
இந்தியாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று
கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் அதிகமான கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் கவலை அதிகரித்துள்ள நிலையில், நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துமாறு மாநில…
-
இந்திய நாடாளுமன்ற விவாதத்தில் ‘Gen Z’ வார்த்தைகளை பயன்படுத்திய எம்பி-க்கள்!
இந்தியாவில் பரீட்சை முறைகேடுகளுக்கு எதிராக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருநது விலகினார். இதனைத் தொடர்ந்து, பரீட்சை முறைகேடு தடுப்பு சட்டமூலம் மீதான நாடாளுமன்ற மக்களவை விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘Gen Z’ தலைமுறையினர் பயன்படுத்தும் இணையக் கலைச்சொற்களைப் (Slang) பரவலாகப் பயன்படுத்தியுள்ளனர். அதன்படி, சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்ற…