Category: இந்திய செய்திகள்

  • இந்தியாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று

    கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் அதிகமான கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் கவலை அதிகரித்துள்ள நிலையில், நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துமாறு மாநில…

  • இந்திய நாடாளுமன்ற விவாதத்தில் ‘Gen Z’ வார்த்தைகளை பயன்படுத்திய எம்பி-க்கள்!

    இந்தியாவில் பரீட்சை முறைகேடுகளுக்கு எதிராக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருநது விலகினார். இதனைத் தொடர்ந்து, பரீட்சை முறைகேடு தடுப்பு சட்டமூலம் மீதான நாடாளுமன்ற மக்களவை விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘Gen Z’ தலைமுறையினர் பயன்படுத்தும் இணையக் கலைச்சொற்களைப் (Slang) பரவலாகப் பயன்படுத்தியுள்ளனர். அதன்படி, சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்ற…

  • அசாமில் வெள்ளப் பாதிப்பு தீவிரம் – உயிரிழப்பு 75 ஆக உயர்வு

    இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளப் பாதிப்பால் இதுவரை சுமார் 3.32 இலட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.9 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

  • மோடி அரசாங்கத்தை விமர்சிக்கும் அண்ணாமலை

    பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழக முன்னாள் தலைவரும், ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவருமான அண்ணாமலை, காவிரி மேகதாது அணை விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசை வெளிப்படையாகக் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன்,கடந்த 2021 ஆம் ஆண்டுஇ அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மாநிலங்களுக்கு…

  • கலைஞர் கருணாநிதியின் பேத்தி கயல்விழி கைது

    சென்னை அடையாறு பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக சாஸ்திரி நகர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். எனினும் காவல்நிலைய பிணையில் உடனடியாக செல்ல அனுமதித்துள்ளனர். திராவிட முன்னேற்றக்கழக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில், காந்தி நகர் குறித்த வங்கிக்…

  • 7 ஆண்டுகளாக நுரையீரலில் இருந்த பேனா மூடி; 10 வயது சிறுமிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சிறுமிக்கு மருத்துவ நிபுணர்கள் அதிநவீன சிடி ஸ்கேன் மற்றும் பிரான்கோஸ்கோபி உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த பரிசோதனையின் முடிவுகளைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதாவது, இந்த பரிசோதனையில் சிறுமியின் நுரையீரலில் பேனா மூடி இருப்பது கண்டறியப்பட்டது. கிட்டத்தட்டக் கடந்த 7 வருடங்களாக அந்த சிறுமிக்கு இருமல் மற்றும் மூச்சுத்…

  • கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரச பணி நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி நீதிமன்றம் உத்தரவு!

    இந்தியாவின் தமிழ்நாட்டில் கரூர் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரச வேலைவாய்ப்பு நியமனங்களை வழங்கிப் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2025ஆம் ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இச்சம்பவத்தில்…

  • குஜராத் வெள்ளத்தில் தத்தளித்த 57 பேரை ராணுவம் மீட்டது

    குஜராத் மாநில வெள்ளத்தில் சிக்கிய 57 பேரை இந்திய ராணுவ வீரர்கள் சனிக்கிழமை (ஜூலை 25) மீட்டனர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான நவசாரி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தஞ்சம் புகுந்திருந்த அவர்களை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர். குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அகமதாபாத், சூரத், அம்ரிலி, வல்சாத், நவசாரி உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்ததால்…

  • போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம்; கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு…

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், கடந்த மே மாதம் 15-ந் தேதி நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது, சில வேலையற்ற இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என்று கூறியிருந்தார். ஆனால்இ இந்த கருத்தை நையாண்டி செய்யும் விதமாக பலர் சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதன் வெளிப்பாடாக உருவானதுதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. இந்த கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கே, மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரை சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக…

  • இன்று முதல் அரசியலில் ஈடுபடமாட்டேன் : பாமக நிறுவனர் ராமதாஸ்

    இன்று முதல் அரசியலில் ஈடுபடமாட்டேன் என 88வது பிறந்தநாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்திலிருந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் ஒரே காரில், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் நடைபெறும் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குச் சென்றனர். பிறந்த நாள் நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது: எனது 88வது பிறந்தநாளான இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன். பா.ம.க.வை இனி அன்புமணி…