Category: இந்திய செய்திகள்
-
மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்தது தமிழக அரசு!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அவருக்கு ‘Z+’ பிரிவின் கீழ் 58 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது அந்தப் பாதுகாப்பானது ‘Z’ பிரிவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கையும் 33 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்தப் பிரதமர் யார் என்ற கருத்துக்கணிப்பில் 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் முதல்வர் விஜய்.
நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், அண்மையில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சர்ப்ரைஸ் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே, இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான ரேஸில் விஜய் 3-வது இடத்தைப் பிடித்து தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ இணைந்து நடத்திய சமீபத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (MOTN) கருத்துக்கணிப்பில், 2029 மக்களவைத் தேர்தலில்…
-
நேபாளத்தில் பலி எண்ணிக்கை 579ஆக உயர்வு.
நேபாளத்தில் கடந்த 26ஆம் தேதி பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பேரழிவு உலகையே உலுக்கியுள்ளது. நேபாள் – திபெத் எல்லையில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் இருந்த பனிப்பாறை தீடிரென உடைந்து அதில் இருந்த ஏராளமான நீர் ’போதே கோஷி (Bhote Koshi)’ ஆற்றில் பாய்ந்து வந்ததால் நேபாளத்தில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. சில வினாடிகளில் 9 மீட்டர் வரை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, சுனாமி வேகத்தில் வந்த வெள்ளத்தால் நீர்மின் கட்டமைப்புகள், வீடுகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள்…
-
சோனியாவின் சுயசரிதையை இந்தியாவில் வெளியிடவில்லை – பென்குயின் ரேண்டம் ஹவுஸ் விளக்கம்
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி, இத்தாலியில் தனது குழந்தைப் பருவம், கல்லூரி வாழ்க்கை, முன்னாள் ராஜீவ் காந்தி உடனான காதல் திருமணம், இதைத் தொடர்ந்து ராஜீவ்-ன் படுகொலை. இதனால், அவர் பொதுவாழ்க்கை வந்தது என அவர் வாழ்க்கை கடந்து வந்த சம்பவங்கள் குறித்து “பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்” என்ற தலைப்பில் சுயசரிதைப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நூலின் சில பகுதிகளில் மாற்றங்கள்…
-
திருமாவளவன் என் அரசியல் ஆசான் – சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்ததிலிருந்து பல்வேறு விமர்சனங்களை உடன்பிறப்புகளால் அந்தக்கட்சி எதிர்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இன்று சட்டசபையில் விசிக தலைவர் திருமாவளவன் என்னுடைய ஆசான் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அவர் பேசியதாவது, “எங்கள் தலைவருக்கும், அண்ணன் தொல்.திருமாவளவனுக்கும் இடையே இருந்தது வெறுமனே தேர்தல் உடன்பாடு, தேர்தல் கூட்டணி கிடையாது. இது கொள்கை கூட்டணி. இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் எனில், என்னுடைய அரசியல் ஆசான் என்றால்…
-
பிரக்ஞானந்தாவின் வரலாற்றுச் சாதனை – முதல்வர் விஜய் வாழ்த்து
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன் உலக அரங்கில்…
-
மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 60 குழந்தைகள் உயிரிழப்பு!
மேற்கு வங்க மாநிலம் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே வாரத்தில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரே நாளில் 10 குழந்தைகள் இறந்துள்ளன. மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறு மற்றும் இதய நோய்கள் காரணமாகவே உயிரிழப்புகள் நேரிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு அம்மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
“கலாசாரம் ஆடையில் இல்லை, உணர்வில் உள்ளது..” – கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதில்
பொலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகையான கிருத்தி சனோன், தன் ஆடைத் தேர்வு மீதான விமர்சனத்துக்கு அவர் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நகைக்கடை விளம்பரம் ஒன்றில் ரக்சாபந்தன் பண்டிகையை முன்னிட்டு கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தியப் பாரம்பரியப் பண்டிகைக்கு இத்தகைய ஆடைகள் உகந்ததல்ல என்று இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், “பெண்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணியும்…
-
கர்நாடகாவில் 3 தமிழர்கள் மரணமான வழக்கில் வெளியான திடுக்கிடும் பிரேதப் பரிசோதனை அறிக்கை!
கர்நாடகாவில் மான் வேட்டையாடியதாகக் கூறி மூன்று தமிழர்களை வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில், அவர்கள் அருகில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று, ஹேலேமுரிதட்டி வனப்பகுதியில் வைத்து குறித்த மூன்று தமிழர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காணாமல் போன மாடுகளைத் தேடியே குறித்த மூவரும் வனப்பகுதிக்குள் சென்றதாக தெரிவித்துள்ளனர். மான்…
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குகள் கேட்டு தோனி நிபந்தனை
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ஆலோசகர் பதவியை ஏற்பதற்காக, அணியின் பங்குகளில் கணிசமான பங்கை வழங்குமாறு முன்னாள் இந்திய அணியின் தலைவர் தோனி கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிஎஸ்கே அணியின் ஆலோசகராகப் பொறுப்பேற்கத் தயாராக உள்ள தோனி, ஆரம்பத்தில் அணியின் 25 சதவீத பங்குகளைக் கோரியுள்ளார். இதனையடுத்து, அது குறித்து பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. தோனி கேட்ட சதவீதத்தை வழங்குவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆரம்பத்தில் மறுப்புத் தெரிவித்த நிலையில், இறுதியில்…