Category: இந்திய செய்திகள்
-
காஷ்மீர் போராட்டத்தில் படைபலப் பிரயோகம் – விசாரணைக்கு வலியுறுத்தல்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் அளவுக்கு அதிகமான படைபலத்தைப் பயன்படுத்தியதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணைக்குழு உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் ஜூன் மாதம் முதல் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பில் சுயாதீனமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாதத் தடுப்பு மற்றும் தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், அதிகளவில்…
-
உஸ்பெகிஸ்தானுக்கு அரசு முறைப்பயணம் – வைரலாகும் இந்திய பிரதமரின் காணொளி
உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு, நான்கு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. தாஷ்கண்டில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டுள்ளார். இதன்போது,யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி காணொளி பதிவு செய்து அதனை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில், ”நமஸ்தே, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று சிறப்பாக யோகா செய்து காட்டி இருக்கிறீர்கள். அனைத்து வயதினரும் இந்த…
-
முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் இல்லை – வைகோ
தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்த்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை…
-
வாக்களித்தவர்களுக்கு உண்மையாக இருக்க விஜய் செய்த காரியம்
வாக்களித்த மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, 234 சட்டமன்ற உறுப்பினர்களையும் மேடையில் நிற்க வைத்து முதல்வர் விஜய் சத்தியம் பெற்றதாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இப்படி செய்தது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பணம் படைத்தவர்கள் மட்டும்தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையை தமிழக வெற்றிக்கழகம் மாற்றியுள்ளது என்று திண்டுக்கல்லில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், பெற்றோர்களை முதியோர்…
-
‘முதலமைச்சரின் ஆட்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்’- காங்கிரஸ் அரசை விமர்சித்த பினராயி
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பையன்னூரில் சி.பி.எம் சார்பில் தற்போதையை அரசியல் நிலையை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கேரள மாநில சட்டசபை தேர்தல் குறித்தும், பையன்னூர் தொகுதியின் தேர்தல் நிலவரம், உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தற்போதைய ஆளும் அரசு மீதான விமர்சனங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பினராயி விஜயன் பேசுகையில், “சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் அரசு தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்…
-
திருச்சியில் இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ளமும், அதன் வரலாற்றுச் சுவடுகளும் குறித்து தெரிந்துகொள்ளலாம்..
காவிரிக் கரையின் தென்புறத்தில் அமைந்துள்ள திருச்சி இன்றளவும் வெள்ளச் சுவடுகளை தாங்கி நிற்கிறது என்பது நம்மில் பலரும் அறியாதது. திருச்சியும் காவிரி – கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே தீவாக அமைந்துள்ள ஸ்ரீரங்கமும் வரலாற்றுக் காலம் தொட்டே பல வெள்ளப் பெருக்குகளைச் சந்தித்துள்ளன. கி.பி.100 முதல் கி.பி 300க்கு இடைபட்ட காலத்தில் காவிரி வெள்ளத்தில் புதையுண்ட ஸ்ரீரங்கம் கோயிலை சோழ மன்னன் கிள்ளிவளவன் மீட்டெடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் சுமார் 10 முறை பெருவெள்ளத்தை எதிர்கொண்ட திருச்சியில்…
-
சிறுவனின் வயிற்றில் இருந்த 48 பொருட்கள்!
திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரித்திக் ரோஷன் (16) மனவளர்ச்சி குன்றிய சிறுவன். அவரது தாயார் சிறுவனுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி வருவதாக கூறி திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த 22ஆம் தேதி கொண்டு சென்றுள்ளார். தனியார் மருத்துவமனை பொது அறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் சுந்தரபாண்டியன் உடனடியாக ரித்திக் ரோஷனை பரிசோதனை செய்ததுடன் ஸ்கேன் செய்து பார்த்த பொழுது இரைப்பையில் சந்தேகத்திற்குரிய கூர்மையான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவரது தாயாரிடம்…
-
இந்தியாவில் பிரசவ வலியில் கதறிய பெண் உயிரிழப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலையில், தனது முதல் குழந்தையைப் பிரசவித்த சில மணி நேரங்களிலேயே 25 வயதான கல்பனா மிஸ்ரா என்ற பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது குடும்பத்தினரிடம் அழுது தன்னை அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ள நிலையிலேயே இவ்வாறு பிரசவத்திற்கு பின்னர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாகவே குறித்த பெண்ணின் மரணம் தற்போது அப்பகுதி மக்களிடம் பெரும்…
-
இலங்கை வந்தடைந்தார் நடிகை அபிராமி
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான அபிராமி இலங்கை வந்துள்ளார். ‘வானவில்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் ‘மிடில் கிளாஸ் மாதவன் ‘தோஸ்த் ‘சார்லி சாப்ளின்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் இவர் நடித்த ‘விருமாண்டி’ திரைப்படத்தின் ‘அன்னலட்சுமி’ கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ‘மகாராஜா’ ‘வேட்டையன்’ மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ மற்றும் அண்மையில் வெளியான ‘பிளாஸ்ட்’ ஆகிய திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்கால மனைவிக்கு நிலவையே பரிசளித்த தமிழக வாலிபர்
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டடப் பொறியாளரான அசோக் சரவணன் தனது எதிர்கால மனைவி ராதிகா வர்ஷிணிக்குத் திருமணப் பரிசாக நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள தனது திருமணத்தை மறக்க முடியாததாக மாற்ற நினைத்த அசோக் சரவணன் தனது சகோதரியின் உதவியுடன் நிலவில் 1 ஏக்கர் நிலத்தை இணையம் மூலம் வாங்கி அதனை மனைவிக்கும் பரிசளிக்க முடிவு செய்துள்ளார். நிலவில் நிலம் விற்பனை செய்வதாகக் கூறி…