Category: இந்திய செய்திகள்

  • குழந்தையின் டயப்பரில் தங்கத்தை கடத்திய தந்தை

    இந்தியாவின் கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எட்டு மாத குழந்தையின் டயப்பருக்குள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து, தங்க கடத்தலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்தனர். கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆறு வயது குழந்தை, நான்கு வயது குழந்தை மற்றும் எட்டு மாத குழந்தையுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமாஹ் விமான…

  • ஓடும் ரயிலில் விளக்கேற்றி பூஜை; பயணி அதிரடி கைது

    ஓடும் ரயிலின் ஏ.சி. பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பயணி ஒருவரை ரயில்வே பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் கரீபா (வயது55). இவர் டெல்லியில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்த ‘ஹசரத் நிஜாமுதீன்-மைசூரு எக்ஸ்பிரஸ்’ ரயிலின் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். ரயில் நள்ளிரவில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, அவர் திடீரென தனது பையில் இருந்து தீப்பெட்டி, பித்தளை விளக்கு மற்றும் எண்ணெய் டப்பாவை…

  • வெள்ளத்தில் மூழ்கிய 100 ஆண்டுகள் பழமையான துர்கை கோயில்.. அச்சத்தில் மக்கள்!

    பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில், கங்கை நதியில் ஏற்பட்ட கடுமையான கரை அரிப்பு மற்றும் சீற்றத்தின் காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதி துர்க்கை கோவில் முற்றிலுமாக இடிந்து ஆற்று நீரில் மூழ்கியது. அப்பகுதியில் கங்கை நதியில் நிலவி வரும் அதிவேக நீர்ரோட்டம் காரணமாகக் கரைகளில் தீவிர மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது. ஆற்றின் கரையில் அமைந்திருந்த பழமையான இக்கோவிலின் அடிப்பகுதி மண்ணரிப்பால் பலவீனமடைந்து, நொடிப் பொழுதில் கங்கை நதியின் சுழலில் சிக்கி…

  • ரஷிய ராணுவத்தில் சேர்ந்த 51 இந்தியர்கள் பலி

    ரஷிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் போரில் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்த விபரங்களை வெளியிட்டார். உக்ரைன் போரின் பின்னணியில், சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக ரஷிய ராணுவத்தில் மொத்தம் 227 இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர்.…

  • விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பது ராகுல் காந்திதான் – தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய பேச்சு!

    2029ஆம் ஆண்டு விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் போவது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திதான் என தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், 2029ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் வேட்பாளர் விஜய்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். 2025ஆம் ஆண்டு தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என தம்மிடம் கேட்கப்பட்டபோதும், விஜய்தான் முதல்வராவார் எனத் தெரிவித்ததாகக் கூறிய கனிமொழி, பின்னர் விஜய் முதல்வரானதை நாடே பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.…

  • நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயமான சோகம் : கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய மஹாராஷ்டிர மாணவி!

    நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா – நேபாள எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தியர்கள் உட்பட சுமார் 3,900 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்,…

  • கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!

    கடல்மட்ட உயர்வு காரணமாக இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களான மும்பை மற்றும் கொல்கத்தாவில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் எதிர்காலத்தில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், இந்தியாவின் கடலோர நகரங்கள் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, 2050ஆம் ஆண்டுக்குள் கடல்மட்டம் 30 முதல் 40 சென்டிமீற்றர் வரை உயர்ந்தால், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் சுமார் 2 கோடி…

  • தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை!

    தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் ஆன்மீகச் சூழலையும் புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில், கோயிலுக்குள் கைபேசிகளை கொண்டு செல்வதற்கு இன்று (1) முதல் முழுமையான தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் கைபேசிகள் மூலம் நிழற்படம், காணொளி மற்றும் செல்ஃபி எடுப்பதுடன், சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் பிற பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்களது கைப்பேசிகளைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காக நுழைவு வாயில்கள் மற்றும் பாதணி பாதுகாப்பு…

  • தோனி குறித்து வெளியான பரபரப்பு செய்தி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை தோனி கோரியதாகப் பரவி வரும் வதந்திகளை அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், அணியின் பங்குகளைப் பெறுவதில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் சில செய்திகள் பரவின. தோனி…

  • சிக்கன் துண்டுக்காக நண்பரை கொலை செய்த வாலிபர்

      இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், சிக்கன் துண்டுகளை சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில், வடமாநில வாலிபர் ஒருவர் அவரது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். கொலையை மறைக்க முயன்ற வாலிபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்கள் சீதாராம் மற்றும் அருண்குமார். அவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் முடலகி தாலுகாவில் உள்ள ஒரு இரும்பு தொழிற்சாலையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். வாராந்திர விடுமுறை நாளான…