Author: Six Side Media
-
இடிக்கப்படுகிறதா ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்? மகள் சௌந்தர்யா சொன்ன முக்கியத் தகவல்!
சென்னையின் பல முக்கிய அடையாளங்களுக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கும்… அந்த வகையில், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் நெருக்கமான ஒரு இடம்தான் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம்! ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது.. ரசிகர் மன்றப் பணிகள் குறித்து ஆலோசிப்பது.. என பல முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த மண்டபம் சாட்சியாக இருந்திருக்கிறது. இப்படியிருக்க, 36 ஆண்டுகளாக ரஜினிகாந்த் குடும்பத்துடன் பயணித்து வந்த இந்த மண்டபம் இடிக்கப்பட உள்ளதாகவும் அங்கு நட்சத்திர ஹோட்டல் வர…
-
21 செ.மீ உயரமே கொண்ட ‘கமாண்டோ’ : மெக்சிகோ பாதுகாப்புப் படையில் இணைந்த குட்டி நாய்க்கு குவியும் பாராட்டு!
மெக்சிகோவின் தேசிய பாதுகாப்புப் படையில் 21 சென்டிமீட்டர் மட்டுமே உயரம் கொண்ட சிறிய ரக ‘சிஹுவாஹுவா’ (Chihuahua) நாய் ஒன்று அதிகாரப்பூர்வமாக பணியில் இணைக்கப்பட்டுள்ளது. ‘கமாண்டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நாய், பேரிடர் காலங்களில் இடிபாடுகளுக்குள் சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது. பொதுவாக பாதுகாப்புப் படைகளின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ராடோர் போன்ற பெரிய ரக நாய்களே பயன்படுத்தப்படுகின்றன. எனினும், வழக்கத்திற்கு மாறாக மிகச் சிறிய உருவம் கொண்ட சிஹுவாஹுவா…
-
‘சிக்மா’ Pre-Release நிகழ்வில் ஜேசன் சஞ்சய் பங்கேற்காதது ஏன்?
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் Pre-Release நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. எனினும், திரைப்படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய் இந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கும் தொடர்ந்து பயணம் மேற்கொண்ட ஜேசன் சஞ்சய்க்கு வைரஸ் தொற்று காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தமிழ் குமரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் Pre-Release நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும்,…
-
அமெரிக்க ‘X2’ ரோலர் கோஸ்டர் சவாரி நிரந்தரமாக மூடல்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ‘Six Flags Magic Mountain’ கேளிக்கை பூங்காவின் புகழ்பெற்ற ‘X2’ ரோலர் கோஸ்டர் சவாரியை நிரந்தரமாக மூடுவதற்கு பூங்கா நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சவாரியில் பயணித்த 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 400க்கும் மேற்பட்டோர் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகப் புகாரளித்துள்ளதாகவும், சிலருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே,…
-
இன்றைய ராசிபலன் – அக்டோபர் 1, 2026 வியாழன்
பஞ்சாங்கம் நாள் வியாழக்கிழமை திதி பஞ்சமி பகல் 2.55 வரை பிறகு சஷ்டி நட்சத்திரம் கிருத்திகை காலை 8.54 வரை பிறகு ரோகிணி யோகம் மரணயோகம் ராகுகாலம் பகல் 1.30 முதல் 3 வரை எமகண்டம் காலை 6 முதல் 7.30 வரை நல்லநேரம் பகல் 10.15 முதல் 11.15 வரை சந்திராஷ்டமம் சித்திரை காலை 8.54 வரை பிறகு சுவாதி சூலம் மேற்கு பரிகாரம் தைலம் மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று…
-
174 உயிர்களைக் காப்பாற்றிய அவர் ஒரு உண்மையான ஹீரோ: அவருக்கு எனது வீரவணக்கம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு!
டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ‘flydubai (FZ1073)’ வானூர்தியை விபத்துக்குள்ளாக்க முயன்ற இணை விமானியுடன் போராடி, 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) அவர்களின் “விவரிக்க முடியாத வீரத்தை” இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெகுவாகப் பாராட்டியுள்ளார். வானூர்தி காக்பிட்டில் (Cockpit) இணை விமானி கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்தியதிலும், வானூர்தியின் அமைப்புகளைச் சேதப்படுத்தி வானூர்தியை கீழே சாய்க்க முயன்றபோதும், படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார்…
-
இன்று சர்வதேச சிறுவர் தினம்
“மனவலிமை கொண்ட குழந்தைகள்; வலுவடையும் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் இன்று (ஒக்டோபர் 01) கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. சிறுவர்கள் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்லாது, எமது நிகழ்காலத்தின் மிக முக்கியமான பொக்கிஷங்கள் என்பதை நினைவூட்டும் வகையில் இந்நாள் அமைகின்றது. வெறும் கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்துகளுக்கும் அப்பால், அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்யவும் சமுதாயம் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை விழிப்புணர்வூட்டும் ஒரு முக்கிய தருணமாக இது பார்க்கப்படுகின்றது. ஐக்கிய…
-
அமெரிக்கா,ஈரான் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தர்கள் வாயிலாக மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஏழு மாதங்களாக தொடர்ந்து வரும் தீவிரப் போரை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில், இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஐ.நா சபைக் கூட்டத்தின் போது, ஈரான் ஒரு வார கால தற்காலிகப் போர் நிறுத்தத் திட்டத்தை முன்வைத்தது. இத்திட்டத்தின் கீழ் ஈரான் மற்றும் லெபனானில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவது, முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது,…
-
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகள் – உலக வங்கி 110 மில்லியன் டொலர் உதவி!
‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் மிகக் கடுமையாகச் சேதமடைந்த 600 கிலோமீற்றர் வீதிகளைப் புனரமைக்கவும் மறுசீரமைக்கவும் இலங்கைக்காக 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி இன்று அங்கீகரித்துள்ளது. சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் (IDA) நெருக்கடி கால நிவாரணப் பிரிவின் மூலம் வழங்கப்படும் நிதியுதவியானது, சூறாவளியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களில் உள்ள சந்தைகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கான போக்குவரத்து இணைப்புகளை மீள ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும். அடிக்கடி ஏற்படும் தீவிர காலநிலை மாற்றங்களைத் தாங்கும் வகையில்,…
-
பெண்களுக்கும் ஆயுதப் பயிற்சி.. ஈரானின் அடுத்த அதிரடி
அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தனது பொதுமக்களை போருக்காக தயார்படுத்துவதை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களும் ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட ராணுவப் பயிற்சிகளில் பங்கேற்கும் காட்சிகள் வெளியாகியிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானின் உயரடுக்கு படையான IRGC சார்பில் தெஹ்ரானில் நடைபெற்ற பயிற்சிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால சூழ்நிலைகளில் செயல்படுவது, அடிப்படை ராணுவப் பணிகள் மற்றும் ஆயுதங்களைக் கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.…