Author: Six Side Media

  • சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி அதிகரிப்பு

    அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கடுமையான பதிலடி மோதல்களின் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இன்றைய (02) நிலவரப்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த சனிக்கிழமை 88.10 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று கிட்டத்தட்ட 96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அதேபோல், WTI ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றின் விலையும் கடந்த சனிக்கிழமை 83.40 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று 91…

  • பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்

    பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா, உடல்நலக்குறைவு காரணமாக தனது 64ஆவது வயதில் காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (01) இரவு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த பிரியங்கர பெரேரா, பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் மகனாவார். ‘சுபுன் சந்தக்’, ‘சந்துன் கசே சமன் வலக்’, ‘சிக்குருலியா’, ‘அகாத சகராரே’ உள்ளிட்ட பிரபல பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார். பாடகராக மட்டுமன்றி நடிகராகவும் கலைத்துறையில்…

  • வறட்சியால் பாதிக்கப்படும் யால தேசிய பூங்கா விலங்குகள்

    வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீரை வழங்கும் நோக்கில், யால தேசிய பூங்காவில் மேலதிக குளங்களை அமைக்கும் நடவடிக்கைகளை வனவிலங்கு திணைக்களம் மேற்கொண்டுள்ளது. பழைய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களும் புனரமைக்கப்பட்டு வருவதாகப் பூங்கா காப்பாளர் ஏ.டி.ஆர். ரவீந்திர தெரிவித்தார். மாணிக் கங்கையிலிருந்து தாங்கிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார். இதேவேளை, ஒக்கம்பிட்டிய மற்றும் மாளிகாவில வனக்காப்பகங்களில் உள்ள காட்டு யானைக் கூட்டங்கள், குடிநீருக்காக இரவும் பகலும் இலுக்பிட்டிய குளத்திற்கு வந்து…

  • ஈரான் மீது அமெரிக்கா அதிரடி வான்வழித் தாக்குதல் – 100 இடங்கள் இலக்கு

    ஈரானுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் உள்ளிட்ட சுமார் 100 இலக்குகள் மீது அமெரிக்க இராணுவத்தினர் நேற்று (01) இரவு அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஈரான் – அமெரிக்கா இடையிலான இடைக்கால ஒப்பந்தம் ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடு தொடர்பான கருத்து வேறுபாடுகளால் முறிவடைந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில், செப்டம்பர் முதலாம் திகதி இரவு ஈரான் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட…

  • நேபாள வெள்ளம் – உயிரிழப்பு 1,127 ஆக உயர்வு

    நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தின் பல மாவட்டங்களிலும் அண்டை நாடான இந்தியாவிலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரசுவாவில் 45, நுவாகோட்டில் 155, தாடிங்கில் 59, சிட்வானில் 348, கோர்காவில் 66, தனாஹுனில் 38, நவல்பாசி கிழக்கில் 217, நவல்பாசி மேற்கில் 190 மற்றும் இந்தியாவில் 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 1,113 சடலங்களுக்கு பிரேதப் பரிசோதனை மற்றும் அடையாளம் காணும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன்,…

  • வானூர்தி நிலையம் மீதான தாக்குதல் முயற்சிக்கு ரஷ்யாவே காரணம் – குற்றம் சுமத்தும் ஜேர்மன்

    ஜெர்மனியின் லீப்ஜிக்ஃஹாலே வானூர்தி நிலையத்தின் மீது கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதல் முயற்சிக்குப் பின்னால் ரஷ்யா இருப்பதாக ஜெர்மன் அரசு குற்றம் சாட்டியுள்ளது: கடந்த ஆகஸ்ட் 4 அன்று வெடிகுண்டுகளுடன் கூடிய ஆளில்லா வானூர்தி ஒன்று லீப்ஜிக்ஃஹாலே வானூர்தி நிலையத்தில் யுக்ரைன் சரக்கு வானூர்திக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது. இதுவொரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும்இ ரஷ்ய அரசு அமைப்புகளின் சார்பாகச் செயல்படும் முகவர்கள்தான் இதற்குப் பொறுப்பு என்பதற்கு தங்களிடம் ஆதாரங்கள்…

  • அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

    இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கமைய, இன்று (02) முதல் நாளை (03) வரை, அவர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, அமைச்சர் ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல முக்கிய அமைச்சர்களை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்…

  • ஈழமுரசின் இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 2, 2026 புதன்

    பஞ்சாங்கம் நாள் புதன்கிழமை திதி பஞ்சமி காலை 6.11 வரை பிறகு சஷ்டி நட்சத்திரம் பரணி யோகம் சித்தயோகம் ராகுகாலம் பகல் 12 முதல் 1.30 வரை எமகண்டம் காலை 7.30 முதல் 9 வரை நல்லநேரம் காலை 9.15 முதல் 10.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் அஸ்தம் சூலம் வடக்கு பரிகாரம் பால் மேஷம் ராசி பலன்  மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பலவிதத்தில் நல்ல நாளாக…

  • சாவகச்சேரியில் உண்ணாவிரத போராட்டம்

    அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 12ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் இன்று நடைபெற்றதுடன், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில்…

  • தந்தை செல்வாவின் நினைவுத் தூபி சேதம் – மர்ம நபர்கள் மீது குற்றச்சாட்டு

    தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த தந்தை செல்வாவின் சமாதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை – அராலி வீதியில் அமைந்துள்ள தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. போருக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, 2012ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மற்றும் அயலவர்கள்…