Author: Six Side Media
-
இந்திய நிறுவனத்துடன் ஊழல் குற்றச்சாட்டு.. பதவியை ராஜினாமா செய்த எஸ்டோனியா அமைச்சர்!
உக்ரைன் போருக்கு உதவுவதற்காக 155mm பீரங்கி குண்டுகளைக் கொள்முதல் செய்ய ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் எஸ்டோனியா பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்தது. இதற்காக, இத்தாலியில் பதிவுசெய்யப்பட்ட முன்னனுபவமே இல்லாத இந்திய நிறுவனத் தொடர்புடைய ‘டாட்டாசெல்’ (Datasel SRL) என்ற நிறுவனத்திற்கு முன்பணம் வழங்கப்பட்டது. ஆனால், ஆயுதங்கள் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படாமலும், பெறப்பட்ட சில ஆயுதங்கள் தரமற்றவையாகவும் இருந்தது தணிக்கையில் தெரியவந்தது. இந்த தவறான கொள்முதல் நடவடிக்கை மற்றும் குளறுபடிகளுக்குத் தலைமைப் பொறுப்பேற்று, தாம் பதவியிலிருந்து விலகுவதாக எஸ்டோனியாவின்…
-
இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 4, 2026 வெள்ளி
பஞ்சாங்கம் நாள் வெள்ளிக்கிழமை திதி அஷ்டமி இரவு 11.46 வரை பிறகு நவமி நட்சத்திரம் ரோகிணி இரவு 11.22 வரை பிறகு மிருகசீரிடம் யோகம் மரணயோகம் இரவு 11.22 வரை பிறகு சித்தயோகம் ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை நல்லநேரம் காலை 9.15 முதல் 10.15 வரை / மாலை 2 முதல் 3 வரை சந்திராஷ்டமம் சுவாதி இரவு 11.22 வரை பிறகு விசாகம்…
-
இலங்கை மனித உரிமை அறிக்கை செப். 7-இல் தாக்கல்
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தொடரானது எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை 63 ஆவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் செப்டெம்பர் 7 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா…
-
சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழு அடுத்த வாரம் இலங்கைக்கு
நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. அந்த குழுவானது எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை அந்த குழு நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின்…
-
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்!
நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் பேரிடரில், இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட சுமார்…
-
‘குடு சலிந்து’ வழக்குக் கோப்புகள் மாயம் – 10 பேரிடம் விசாரணை
‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த இரண்டு முக்கிய வழக்குகளின் கோப்புகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் 10 நீதிமன்ற ஊழியர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 7 பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார். காணாமல் போன கோப்புகளில், குடு சலிந்துவின் வழிநடத்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதப்…
-
கொள்ளுப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம்
கொள்ளுப்பிட்டி, 6ஆவது தெருவில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
உலகப் புகழ்பெற்ற ‘ரிச் டாட் புவர் டாட்’ நூலின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகிக்கு ரூ.11,000 கோடி கடன்
பிரபல எழுத்தாளர் ராபர்ட் கியோசாகியின் ‘ரிச் டாட் புவர் டாட்’ (Rich Dad Poor Dad) என்ற நிதி மேலாண்மை புத்தகம் 1997-ல் வெளியானது. இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் பெரும் புகழும் செல்வமும் ஈட்டிய 79 வயதான கியோசாகிக்கு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.11 ஆயிரம் கோடி) கடன் இருப்பது தெரியவந்துள்ளது. தனது ரியல் எஸ்டேட் வர்த்தகம் முழுவதுமே சுமார் 1.2 பில்லியன் டாலர் கடனின்…
-
ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி – ஈரான் அதிபர் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: அமெரிக்கா தகவல்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்திப்பின்போது வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக…
-
ஒட்டாவா நெடுஞ்சாலை 417-ல் நடந்த விபத்தில் ஒருவர் பலி
ஒட்டாவாவில் உள்ள நெடுஞ்சாலை 417-ன் (Highway 417) கிழக்கு திசைப் பாதையில், பார்க்லே அவென்யூ (Parkdale Avenue) அருகே புதன்கிழமை இரவு 8:15 மணியளவில் நடந்த விபத்தில் பாதசாரி ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்தார். ஓன்டாரியோ மாகாணக் காவல்துறை (OPP) மற்றும் துணை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அவர் உயிரிழந்ததாகக் காவல்துறை உறுதிப்படுத்தியது. இந்த விபத்தில் உள்ளூர் போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான (OC…