Author: Six Side Media
-
மீண்டுவந்த செலின் டியோன்.. கண்ணீரில் மூழ்கிய 30,000 ரசிகர்கள்!
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிகாப்ரியோ, கேத் வின்ஸ்லெட் ஆகியோர் நடிப்பில், கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’டைட்டானிக்’. உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம், இன்றுவரை பலரது ஃபேவரைட்டான காதல் கதைகளில் ஒன்றாக உள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற, Every Night In My Dream.. I see you I feel you.. என்ற பாடல் இன்றளவும் பலரது Playlist-களை ஆண்டு வருகிறது என்றே கூறலாம். இந்த உலகப் புகழ் பெற்ற…
-
“என்னுடைய கதைகளிலேயே ‘டோரதி’தான் நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது” – கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ‘டோரதி’ திரைப்படம் இம்மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு இப்படம் தேர்வாகியிருந்தது. சமீபத்தில் அதன் திரையிடலும் நடைபெற்றிருந்தது. டொரோண்டோ திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பு குறித்தும், ‘டோரதி’ படம் குறித்தும் திரைப்பட விமர்சகர் சுசரிதா தியாகிக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், “டொரோண்டோ திரைப்பட விழாவில்…
-
“முறிந்த காலுடன் 7000 அடி மலையில் ஏறினேன்” – ஈரானில் சிக்கி 50 மணிநேரம் போராடி தப்பிய அமெரிக்க வீரர்
கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அமெரிக்க விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது ஈரான் வீசிய ஏவுகணை ஒன்று அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் இருந்த இரண்டு பேரும் ஈரானுக்குள் உயிரோடு விழுந்தனர். அவர்களில் பைலட்டான அல்பா என்பவர் அடுத்த சில மணி நேரத்தில் அமெரிக்கப் படையால் மீட்கப்பட்டுவிட்டார். ஆனால் ஆயுதங்களைக் கையாளக்கூடிய மற்றொரு அதிகாரியான பிராவோவை உடனே மீட்க முடியவில்லை. அவர் 50 மணி நேரம் ஈரான்…
-
இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 15, 2026 செவ்வாய்
பஞ்சாங்கம் நாள் செவ்வாய்க்கிழமை திதி சதுர்த்தி காலை 9.22 வரை பிறகு பஞ்சமி நட்சத்திரம் சுவாதி மாலை 5.41 வரை பிறகு விசாகம் யோகம் சித்தயோகம் மாலை 5.41 வரை பிறகு மரணயோகம் ராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை எமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் உத்திரட்டாதி மாலை 5.41 வரை பிறகு ரேவதி…
-
16 அடியில் ராட்சத உயிரினம்!
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக, அதிகம் வெப்பம் அடையும் ஒரு காலநிலை மாற்றத்தைத்தான் எல் நினோ என்று அழைக்கிறார்கள். இந்த இயற்கை நிகழ்வின் காரணமாக, உலகின் பெரும்பாலான பகுதிகளில், வறண்ட வானிலை நிலவும் என்றும், சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக, பயிர் விளைச்சல் குறையும், தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர். இவ்வாறு மனிதர்களைப் பெருமளவில் பாதிக்கும் இந்தக் காலநிலை மாற்றத்தால்,…
-
பிரிட்டனில் இருந்து பிரிவதற்கு 3 நாடுகள் கூட்டுப் பிரகடனம்
ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையை கோரும் கூட்டு பிரகடனம் இன்று வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாடுகளும் பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் உள்ள நிலையில், நீண்டகாலமாக பிரிட்டனில் இருந்து விலகி தனி அரசியல் பாதையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அங்கு நிலவி வருகின்றன. சமீபத்திய தேர்தல்களில் பிரிவினையை ஆதரிக்கும் கட்சிகள் இந்த மூன்று நாடுகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன. ஸ்காட்லாந்தில்…
-
முல்லைத்தீவில் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் – ரவிகரன் எம்.பி.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து ஏற்கனவே விடுவிக்கத் தீர்மானித்த 17,469.58 ஹெக்டயர் காணிகளையும் உடனடியாக விடுவித்து காணிகளுக்குரிய மக்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை யுத்தகாலத்தில் மக்களுக்கு காணி ஆவணங்களை எடுத்துச் செல்லக்கூடிய சூழல் இருக்கவில்லை என இதன்போது சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், அவ்வாறு ஏற்கனவே விடுவிப்பதெனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போது மக்களிடமிருந்து ஆவணங்களைக் கோருவதை ஏற்றுக்கொள்ளமுடியாதெனவுந் தெரிவித்துள்ளார். குறிப்பாக இன்று (14) இடம்பெற்ற…
-
பிரிக்ஸ் மாநாட்டு விருந்தில் சைவ உணவு
சீன ஜனாதிபதி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் பிரிக்ஸ் மாநாட்டின் இரவு விருந்தை புறக்கணித்தற்கு சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது தான் காரணமா என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்தியாவின் தலைமையிலான 18வது பிரிக்ஸ் மாநாடு டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை தந்த தலைவர்களுக்கு…
-
துருக்கி பில்லியனரின் விமானம் விபத்தில் சிக்கியது
துருக்கி பில்லியனர் ஹம்டி அகினுக்கு சொந்தமான வர்த்தக விமானம் லிபியாவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் அத்தாதுர்க் விமான நிலையத்திலிருந்து, செஸ்னா சிடேஷன் லாட்டிட்யூட் வர்த்தக விமானம் லிபியாவுக்குச் சென்று கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி காலை 10:07 மணிக்கு மிஸ்ராட்டா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று தீப்பிடித்து விபத்தில் சிக்கியது. விமான நிலைய அவசர மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து, விமானத்தில் இருந்த 2 விமானிகள் மற்றும் ஒரு…
-
முடிவடையும் மேக்ரானின் பதவிக்காலம்
2027ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், தீவிர வலதுசாரியினர் முதலானோருக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அடுத்து யார் பிரான்சின் ஜனாதிபதியாவார் என்னும் கேள்வி வலுத்தவண்ணம் உள்ளது. சமீபத்திய ஆய்வொன்றில், வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென்னுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. முதல் சுற்றுத் தேர்தலில், மரீன்…