Author: Six Side Media

  • தாயையும் குழந்தையையும் சுட்ட கனேடியர்: பொலிசார் அதிரடி

    கனடாவில் பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர். கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் 36 வயது ஆண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை, ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபருடன் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால், கதவைத் திறந்துகொண்டு கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்த அந்த நபர் துப்பாக்கியைக் கீழே போட…

  • பாலில் ரப்பர் ரசாயனங்கள்: சுவிஸ் ஆய்வு முடிவுகள்

    சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். சுவிஸ் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில், சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள 17 பண்ணைகளிலிருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஏழு பால் மாதிரிகளில் ரப்பர் தொடர்புடைய ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. விடயம் என்னவென்றால், பால் கறக்க பயன்படுத்தப்படும் ரப்பர் குழாய்கள் காலப்போக்கில் பழமையாவதால், அதிலிருந்து இந்த ரப்பர் ரசாயனங்கள் வந்திருக்கலாம் என்னும் எதிர்பாராத ஒரு…

  • 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை

    விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாசிக்கில் விற்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை வைரலானது. மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள சாகர் ஸ்வீட்ஸ் என்ற கடையில் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனைக்கு வைக்கப்பட்டது. 2021ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இக்கொழுக்கட்டை விற்பனையாகிறது. 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட இக்கொழுக்கட்டையின் விலை கிலோ ஒன்றுக்கு 27,000 ரூபாயாகும். விலை அதிகம் என்றாலும் கொழுக்கட்டையின் தரம் மற்றும் தனித்துவமான தோற்றம் காரணமாக…

  • முக ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

    2026ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா இன்று கொண்டாடப்பட இருந்த நிலையில் முக ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது, பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விழா ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர்…

  • புடினுக்கு வந்த பேரதிர்ச்சி.. உக்ரைன் போரில் திடீர் திருப்பம்!

    ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் 51-ஆவது ஒருங்கிணைந்த ஆயுதப்படையின் (51st Combined Arms Army) தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் செர்கெய் மில்சகோவ் (Sergei Milchakov) உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய ராணுவத்தின் கட்டளை மையங்களைக் குறிவைத்து உக்ரைன் துல்லியத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அந்தத் தாக்குதலில்தான் மில்சகோவ் கொல்லப்பட்டிருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 27-ஆம் தேதி உக்ரைன்…

  • ட்ரம்ப் கிளப்பிய பிரிவினைப் பேச்சு ஐக்கிய ராஜ்ஜியத்தின் மையப் பொருளாகியிருக்கிறது

    ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து வடக்கு அயர்லாந்து பிரிந்து, அயர்லாந்து குடியரசுடன் இணைவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது பிரிட்டன் அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இதன் பின்னணியில் இங்கிலாந்து, பிரிட்டன், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இங்கிலாந்து என்பது கிரேட் பிரிட்டன், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவற்றின் பகுதியாக உள்ள நாடு. பிரிட்டன் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. ஐக்கிய ராஜ்ஜியம் அதாவது யூ.கே. என்பது…

  • கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!

    பசிபிக் பெருங்கடலில் தங்கம் மற்றும் வெள்ளிp படிமங்கள் கொண்ட மாபெரும் ஆழ்கடல் கனிம படுகையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில், இதுதொடர்பான விவாதங்களும் தொடங்கியுள்ளன. சீனாவின் ‘சியாங் யாங் ஹாங் 10’ (Xiang Yang Hong 10) என்ற ஆராய்ச்சிக் கப்பல் மூலம் 18 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வில், 7 நீர்மூழ்கிச் சோதனைகள் மூலம் பசிபிக் பெருங்கடலில் தங்கம் மற்றும் வெள்ளிப் படிமங்கள் கொண்ட மாபெரும் ஆழ்கடல் கனிம படுகையை சீன விஞ்ஞானிகள்…

  • முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்

    இஸ்ரேலில் பிரதமர்கள் வெறும் ஒப்பனைக்காக மட்டும் செய்த செலவு, கோடி ரூபாயைத் தாண்டியிருப்பது, அவ்வூர் மக்களை மட்டுமல்ல, உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரை இஸ்ரேல் பிரதமர்களின் முடி அலங்காரம், ஒப்பனை மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதித்துவத்திற்காகச் சுமார் 470,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4.49 கோடி) செலவிடப்பட்டுள்ளது. அணு ஆயுதம் தொடர்பாக, ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கெனவே இஸ்ரேல் படைகள், காஸாவை நிர்மூலமாக்கிய நிலையில்,…

  • திடீரென வந்த இமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆரக்கிள் ஊழியர்கள்!

    பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது செலவுகளைக் குறைக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்குப் பணிநீக்க மின்னஞ்சல்களை (Layoff Emails) அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 14 அன்று இதுகுறித்து ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு, இணைய வர்த்தக உலகில் முன்னணியில் இருக்கும் பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது. செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதிலும் AI உந்துதல் தீர்வுகளை நோக்கி நகர்வதிலும் ஒவ்வொரு…

  • செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் இந்தியா

    சீனாவைப் போன்று, இந்தியாவும் செயற்கைச் சூரியனை உருவாக்கும் முயற்சியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சூரியனின் மையப்பகுதியில் உள்ளதைப் போன்ற தீவிர வெப்பம் மற்றும் காந்தப்புலத்தை உருவாக்க ஆதித்யா (ADITYA) மற்றும் SST-1 (Steady State Superconducting Tokamak) ஆகிய பிளாஸ்மா சாதனங்களில் வெப்ப நிலையை எட்டி விஞ்ஞானிகள் வெற்றி அடைந்துள்ளனர். அண்டை நாடான சீனா, அமெரிக்காவையே விஞ்சும் அளவுக்கு போட்டிபோட்டு வருகிறது. சமீபத்தில், அது ஒரு செயற்கை சூரியனை உருவாக்கும் நோக்கில் இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது,…