Author: Six Side Media

  • செம்மணியில் எலும்பு எச்சங்கள் காணப்பட்டதையடுத்து கால்வாய் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தம்

    செம்மணியில் எலும்பு எச்சங்கள் காணப்பட்டதையடுத்து கால்வாய் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தம்

    செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறும் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுகிழமை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் தற்காலிக கால்வாய் அமைக்கும் பணிகள் இடம்பெற்ற நிலையில் மூன்று இடங்களில் மனித  எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கால்வாய் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. புதிய புதைகுழி இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் தோண்டப்பட்ட குழிகளிலும் மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் 11 ஆம் நாள் அகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது மனிதப்…

  • அரசாங்கம் அரசாங்கத்தையே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

    அரசாங்கம் அரசாங்கத்தையே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

    உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பான உண்மையை கண்டறிய, அரசாங்கம் அரசாங்கத்தையே விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாய்கக தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் 50ம் ஆண்டு மத வாழ்வு  பூர்த்தியினை குறிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பான உண்மை அம்பலமாக்கப்படும் எனவும், தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மையை கண்டுபிடிக்க, அரசாங்கமே தனக்கு எதிராக விசாரணைக்கு…

  • இன பிரச்சினைகளை தீர்க்க கடினமாக உழைத்தவர் சம்பந்தன்! குகதாசன் எம்.பி தெரிவிப்பு

    இன பிரச்சினைகளை தீர்க்க கடினமாக உழைத்தவர் சம்பந்தன்! குகதாசன் எம்.பி தெரிவிப்பு

    இலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். மறைந்த பெருந் தலைவர் இரா.சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று (06)இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”1976ம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாக அவருடன் பணியாற்றியுள்ளேன்.…

  • இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் உத்தி: 2025-ல் உலக சக்தியை மறுவடிவமைக்கும் கடல் அச்சு

    இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் உத்தி: 2025-ல் உலக சக்தியை மறுவடிவமைக்கும் கடல் அச்சு

    ✧.முன்னுரை உலக நாடுகள் அமெரிக்காவின் மேற்கு ஆசியத் தலையீடுகள், உக்ரைனில் நடைபெறும் போர் மற்றும் கிழக்கு ஆசியக் கிளர்ச்சிகளை கவனிக்கின்ற நிலையில், சீனா மெதுவாகவும் வியூகமாகவும் ஒரு பெரும் மாற்றத்தை இந்தியப் பெருங்கடலில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் (BRI) ஊடாக, சீனா உலக வர்த்தக மற்றும் பாதுகாப்பு வழித்தடங்களில் தனது பாதிப்பை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பொருளாதார மேம்பாட்டு முயற்சியாக தோன்றிய இது, தற்போது ஒரு வலிமையான புவியியல் சக்தியாக விரிவடைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் இப்போது…

  • கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

    கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

    கனடாவின் ஒட்டாவா, மான்ரியல், எட்மண்டன், வின்னிப்பெக், கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களில் குண்டுவெடிப்பு மிரட்டல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாகத் தாமதமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏர் கனடா விமான நிலையங்களின் வலைத்தளத்தில், ஏராளமான விமானங்களில் புறப்படும் நேரங்களில் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கூற்றுப்படி, முக்கிய கனேடிய விமான நிலையங்கள் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல்களைப் பெற்றதைத் தொடர்ந்து சில…

  • சீனாவின் 6G மின்னியல் போர் அமைப்பு: எதிர்கால இராணுவ ஆதிக்கத்தின் தொடக்கம்

    சீனாவின் 6G மின்னியல் போர் அமைப்பு: எதிர்கால இராணுவ ஆதிக்கத்தின் தொடக்கம்

    அறிமுகம் போர்க்களத்தின் விதிகளை இன்று மாற்றிக்கொண்டும், எதிர்காலத்தை வடிவமைக்கவும் சீனா தங்கள் மின்னியல் போர் (Electronic Warfare – EW) முயற்சியில் ஒரு புரட்சிகரமான கட்டத்தை அடைந்திருக்கிறது. 6G தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, அமெரிக்காவின் 5ஆம் தலைமுறை ஸ்டெல்த் போர்விமானமான F-35 ஐ கூட ஏமாற்றும் ஆற்றலுக்குரியது. இது சாதாரண தொழில்நுட்ப மேம்பாட்டல்ல; இது ஒரு புதிய போர் யுகத்தின் பிறப்பாக இருக்கிறது. ✦. புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட மின்னியல் போர் சீனாவின் புதிய மின்னியல் போர்…

  • ட்ரம்பின் வரி விதிப்பு பேச்சுவார்த்தையில் ஒரே ஆசிய நாடாக இலங்கை

    ட்ரம்பின் வரி விதிப்பு பேச்சுவார்த்தையில் ஒரே ஆசிய நாடாக இலங்கை

    உலகளாவிய கட்டணங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள ஒரே ஆசிய நாடு இலங்கை என்று பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிதி மூலோபாயம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது உரையாற்றிய அவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் விதிக்கப்பட்ட 44வீத வரி தொடர்பாக அமெரிக்காவுடன் மிகவும் சாதகமான ஒப்பந்தத்தைப் பெற அரசாங்கம் நம்புகிறது என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, இலங்கை தூதுக்குழு கடந்த மாதம் வாஷிங்டன் – டி.சி.க்கு…

  • ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

    ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

    ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கலை விளக்க மறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிஷாந்த, விமானங்கள் கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நடந்து வரும் விசாரணை சம்பந்தமாக, ஊழல் அல்லது மோசடிகள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை கொழும்பு முதன்மை நீதிவான் தனுஜா லக்மலி ஜயதுங்கா முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.…

  • கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் ஒரு பார்சலிலிருந்து துப்பாக்கி

    கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் ஒரு பார்சலிலிருந்து துப்பாக்கி

    கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு பொதியில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் அடங்கிய பொருட்களை கைப்பற்றியுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் இன்று (01.07.2025) நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவித்துள்ளனர். இதற்கமைய டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள மத்திய தபால் நிலையத்தில் வைத்து சந்தேகத்திற்கிடமான பொதியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்படி கடந்த மார்ச் 19 ஆம் திகதி கட்டுநாயக்க விமான…

  • செம்மணி படுகொலை குறித்த ஐ.நா அதிகாரியின் அறிக்கை ஆரோக்கியமற்றது – அப்துல்லா மஹ்ரூப்

    செம்மணி படுகொலை குறித்த ஐ.நா அதிகாரியின் அறிக்கை ஆரோக்கியமற்றது – அப்துல்லா மஹ்ரூப்

    ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் ஆணையாளர் வருகையின் போது நீண்டகாலமாக புரையோடி போய்க்கிடக்கின்ற செம்மணி படுகொலை சம்பந்தமாக தமிழ் தலைமைகள் விரிவாக பேசிய போதும் அவர் நாட்டை விட்டு செல்கின்ற போது சொல்லியிருக்கின்ற அறிக்கை அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை என முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இஸ்ரேலிய கொடும்…