Author: Six Side Media
-
சுரேஷ் சலே வழக்கு : இடைக்கால மனுக்களை பரிசீலிக்க நீதிமன்றம் திகதி நிர்ணயம்
இலங்கை: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தன்னைக் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்குமாறு கோரி அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனுவில், தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுக்களை பரிசீலிப்பதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 மற்றும் 6 ஆம் திகதிகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து…
-
கடும் வெப்பம் காரணமாக ஐரோப்பாவில் சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடு
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் வழக்கத்திற்கு மாறான கடும் வெப்ப அலை காரணமாக, சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு (Air Conditioners) சந்தையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, சீனாவின் ‘மீடியா’ (Midea) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ‘போர்ட்டா-ஸ்பிலிட்’ (PortaSplit) வகை குளிரூட்டிகளுக்கு ஐரோப்பிய நுகர்வோர் மத்தியில் மிக அதிக தேவை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பல முக்கிய நகரங்களில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோடை வெப்பநிலை 40 பாகை செல்சியஸைத் தாண்டிப் பதிவாகியுள்ளது.ஐரோப்பிய நகரங்களில் உள்ள பல பாரம்பரிய, பழமையான மற்றும்…
-
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஜஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது
லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் Jaffna Kings அணியின் உரிமையாளர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை பொலிஸின் விளையாட்டுத் துறை தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினரால் (SIU) இந்த அதிரடிக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போட்டி ஒத்திவைப்பு, ஸ்பாட்-பிக்ஸிங் மற்றும் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான விசாரணைகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர்…
-
இலங்கையில் வீடுகளுக்களிற்குள்ளேயே நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
இலங்கையில் நுளம்பு குடம்பிகள் தற்போது அதிகளவில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கும் இடங்களிலேயே கண்டறியப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிப்புற சுற்றாடலுடன் ஒப்பிடும்போது வீடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ள பூச்சாடிகளிலும் குளிரூட்டிகளில் நீர் தேங்கும் இடங்களிலும் அதிகளவிலான நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்தார். அதற்கமைய வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளை தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.நுளம்பு குடம்பிகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருக்கும் வீடுகள் மற்றும் வளாகங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கைகளும்…
-
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை ஹரியானாவில் தொடக்கி வைத்தார் மோடி
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரயில் என்ஜினை தயாரிக்கும் முயற்சிகள் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கியது. வடக்கு மண்டல ரயில்வேயிற்காக 140 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கிய நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வந்தன. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை அடுத்து, ரயில்…
-
ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகையான ஆடிப்பிறப்பு இன்று
ஆடிப்பிறப்பு என்பது தமிழ் ஆடி மாதத்தின் முதல் நாளைக் குறிக்கும் ஒரு விசேட பண்டிகையாகும் (பொதுவாக ஜூலை 16 அல்லது 17 ஆம் திகதிகளில் இது கொண்டாடப்படும்). இப்பண்டிகை குறிப்பாக ஈழத்துத் தமிழர்களின் (இலங்கைத் தமிழர்கள்) வாழ்வியலோடும் பண்பாட்டோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஒரு முக்கிய திருநாளாகும். சித்திரை முதல் ஆனி வரை நீடிக்கும் கோடை காலத்தின் வெப்பம் தணிந்து, குளுமையான காற்றுடன் கூடிய தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கும் காலமே ஆடி மாதமாகும். ஆடி மாதத்தில்…
-
சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள பதாகை
ஈரானில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏற்கனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மொஜ்தபா கமேனி அறிவித்திருந்தார். மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும் ட்ரம்ப்புக்கு எதிரான…
-
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் .துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித்…
-
கனடா தீ: முதியவரைத் தொடர்ந்து மனைவியும் பலி!
பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளதாக எட்மண்டன் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த 82 வயதுடைய அந்த மூதாட்டி, இந்த தீ விபத்தில் ஏற்கனவே பலியான 85 வயது முதியவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட போது, அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே குதித்ததில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயிருந்த மற்றொரு…
-
ஈரானை முடக்க அமெரிக்கா புதிய நடவடிக்கை? டிரம்பின் திட்டம் பரபரப்பு!
தெஹ்ரான்: வளைகுடாவில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ள நிலையில், நள்ளிரவில் ஈரான் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு ஈரானில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஹார்முஸிலும் மெல்ல…