Author: Six Side Media

  • டிரம்பின் 50% வரி விதிப்பு : ஆல்பர்ட்டா பிரதமரின் அறிவிப்பு!

    அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கனடா பொருட்களுக்கு விதித்துள்ள 50% கூடுதல் வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ளப் பொறுமையுடனும், அரசுதந்திர  ரீதியிலும் செயல்பட வேண்டும் என்று ஆல்பர்ட்டா மாகாண பிரதமர் டேனியல் ஸ்மித்  தெரிவித்துள்ளார். கனடா உடனடியாகப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்குவதை விட, அமெரிக்கர்களுடனான பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதே சிறந்தது என்பது அவரது நிலைப்பாடாகும். பேச்சுவார்த்தைக்குச் செல்லும் முன்பே எதிரியைத் தாக்குவது போல் செயல்படாமல்,அமைதியான முறையில் அரசுதந்திரத்தைப் பயன்படுத்தி 100% வரி இல்லாத வர்த்தக உறவை…

  • கனடா ஏரியில் இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 12 வயது சிறுவனுக்கு வீரப்பதக்கம்.

    கனடாவில் ஏரி ஒன்றில் படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த இரண்டு பேரின் உயிரைக் காப்பாற்றிய 12 வயது சிறுவனுக்கு நாட்டின் உயரிய வீர விருதுகளில் ஒன்றான வீரப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள Wabamun ஏரிக்கு, பெஞ்சமின் கெர்பர் (Benjamin Gerber) மற்றும் அவரது தங்கை அமெலியா (Amelia) ஆகியோர் தங்கள் பெற்றோருடன் பொழுதுபோக்கச் சென்றிருந்தனர். அப்போது, ரப்பர் படகில் கரையை நோக்கி வந்துகொண்டிருந்த அவர்கள், அருகில் ஒரு படகு கவிழ்ந்திருப்பதையும்,…

  • கனடாவை உலுக்கிய கொலை; இந்திய இளம்பெண்ணின் கணவர் கைது.

    கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 9ஆம் திகதி மாலை 6.44 மணியளவில், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத் தலைநகரான எட்மண்டனின் சில்வர் பெர்ரி பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் அசைவின்றிக் கிடப்பதாக பொலிசாருக்கு அவசர அழைப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார், பலத்த காயங்களுடன் சுயநினைவிழந்த நிலையில் இருந்த தமன்பிரீத் கௌர் (23) என்பவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

  • கனேடியர் ஒருவரால் இலங்கை விமான நிலையத்தில் பரபரப்பு; சோதனையில் அதிர்ச்சி திருப்பம்

    கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’ போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 20 கோடி) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • இன்றைய-ராசி-பலன்-26-07-2026

    இன்றைய நாள் (ஆடி 10, பராபவ ஆண்டு) கேட்டை நட்சத்திரம் காலை வரை, பின்னர் மூலம் நட்சத்திரம். மேஷம்: மனக்குழப்பம் இருந்தாலும் முயற்சியால் காரியங்கள் நிறைவேறும். பணியில் கூடுதல் பொறுப்புகள் வரலாம். ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவையற்ற பேச்சைத் தவிர்ப்பது நல்லது. மிதுனம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். முக்கிய முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படுவது நன்மை தரும். கடகம்: கல்வி மற்றும் வேலை தொடர்பான முன்னேற்றம் காணலாம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சிம்மம்: குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.…

  • நுவரெலியாவில் சமாதான நீதவான்கள் மீது மோசடி குற்றச்சாட்டு

    நுவரெலியா பிரதான நகரில் சில சமாதான நீதவான்கள், சத்தியப் பிரமாணக் கடிதங்கள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வரும் பொதுமக்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமூகத்திற்கு இலவச சேவையாற்றும் நோக்கில் வழங்கப்படும் சமாதான நீதவான் பதவி அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியற்ற நபர்களுக்கு இந்தப் பதவி வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பிரமாணப்பத்திரங்கள், சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இலவசமாக அத்தாட்சிப்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவதற்காகவே நீதி அமைச்சினால் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும், கிராமிய…

  • இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

    இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்தக் காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 61 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த சில நாட்களில் மட்டும் 26,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும் 47,670 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு…

  • அம்பாறையில் ‘குடு அசங்க’ கைது

    அம்பாறை மாவட்டம் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ‘குடு அசங்க’ என்றழைக்கப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று (26) அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியின் பிரதான போதைப்பொருள் வியாபாரி ஏற்கனவே கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘குடு அசங்க’ இரகசியமாக போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட…

  • குஜராத் வெள்ளத்தில் தத்தளித்த 57 பேரை ராணுவம் மீட்டது

    குஜராத் மாநில வெள்ளத்தில் சிக்கிய 57 பேரை இந்திய ராணுவ வீரர்கள் சனிக்கிழமை (ஜூலை 25) மீட்டனர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான நவசாரி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தஞ்சம் புகுந்திருந்த அவர்களை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர். குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அகமதாபாத், சூரத், அம்ரிலி, வல்சாத், நவசாரி உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்ததால்…

  • ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்களின் சேர்க்கை ரத்து

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் இணையவிருந்த 502 மாணவர்களின் சேர்க்கை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக இந்தத் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டணங்கள் முழுமையாகச் செலுத்தப்படவில்லை என்ற காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் முதலே இது தொடர்பான அறிவிப்புகள் அனுப்பப்பட்டதாகவும், உரிய காலக்கெடுவுக்குள் சேர்க்கைக் கட்டணத்தையும் நிதிக்கடப்பாடுகளையும் நிறைவு…